Word |
English & Tamil Meaning |
---|---|
சேமன் | cēmaṉ, n. perh. சோம்பன். Cunning fellow; rogue; போக்கிலி. இந்தச் சேமனை நீர் . . . வெருட்டிடும் (விறலிவிடு. 860). |
சேமா | cē-mā, n. <> சே5+. Bull; எருது. சேமாபோற் குப்பறூஉம். (நாலடி, 377). |
சேமாதிசயம் | cēmāticayam, n.<> kṣēma+ati-šaya. News of welfare; க்ஷேமச்செய்தி. (W.) |
சேமாப்பாயசம் | cēmā-p-pāyacam, n.<> சேமியா+. Vermicelli pudding; சேமியாக் கலந்து அட்ட பாயசம். |
சேமாளைச்சம்பா | cēmāḷai-c-campā, n. prob. செம்பாளை+. A kind of campā paddy; சம்பா நெல்வகை. (யாழ். அக.) |
சேமாறி | cē-māṟi, n.<> சே5+ மாறு-. Gelder; விதையடிப்போன். (நன்.138, மயிலை.) எருதுகளுடைய பீசத்தை . . . சேமாறிகளால் உடையும்படி செய்விக்கும் பொல்லாதவனும் (சிவதரு. பாவ. 73, உரை). |
சேமாறு - தல் | cē-māṟu-, v. tr. <> id. +. To zeld a bull; எருத்துக்கு விதையடித்தல். (இலக். வி. 45, உரை.) |
சேமி - த்தல் | cēmi-, 11 v. tr. <> சேமம். 1. To keep secure, preserve in safety; போற்றிவைத்தல். தனதானியங்கள் சேமித்தல் (விதான. பஞ்சாங்க.19). 2. To hide underground, bury; 3. To ward off; |
சேமிகை | cēmikai, n.<> [ K. sēmiga.] See சேமியா. . |
சேமியா | cēmiyā, n.<> Mhr. šēvaī. [ Tu. sēme..] Vermicelli; கோதுமை முதலிய தானியங்களால் திரிதிரியாகச் செய்யப்பட்டுப் பாயசத்துடன் கலந்தடப்படுதற்கும் பலவகைப் பலகாரஞ் செய்யப்படுதற்கும் உதவும் உணவுப்பொருள். |
சேமியாப்பட்டடை | cēmiyā-p-paṭṭaṭai, n.<> சேமியா+. Vermicelli-like anklet for children and women; சேமியாவின் உருவம் அமையச் செய்யப்பட்ட காலணி. |
சேமை | cēmai, n. See சேம்பு, 1 . |
சேய் 1 | cēy, n.<> செம்-மை. 1. Redness; சிவப்பு. சேயுற்ற கார்நீர் வரவு (பரிபா.11, 114). 2. Mars; 3. Skanda ; 4. Son, child; 5. Juvenility, youth; 6. Greatness; 7. Chief, lord; |
சேய் 2 | cēy, n.<> சேய்-மை. 1. Distance, remoteness; தூரம். (சூடா.) 2. Length; 3. House site; 4. Spiny bamboo. See மூங்கில். (மலை.) |
சேய்குன்றம் | cēy-kuṉṟam, n.<> சேய்+. Tirupparaṅkuṉṟam, as a residence of Skanda; முருகக்கடவுள் வாழ்விடமாகிய திருப்பரங்குன்றம். நீரிற்றுவண்ட சேஎய் குன்றம் (பரிபா. 6, 69). |
சேய்த்து 1 | cēyttu, n.<> id. That which is red; செம்மைநிறமுடையது. அறங்கரிது சேய்த்தென்ப தியாதுமறியார் (சீவக. 2622). |
சேய்த்து 2 | cēyttu, n.<> சேய்2. 1. That which is distant; தூரமானது. சேய்த்தானுஞ்சென்று கொளல்வேண்டும் (நாலடி, 218). 2. That which is long; |
சேய்து | cēytu, n.<> சேய்1. See சேய்த்து. ஒள்ளொள சேய்தா (பரிபா.16, 40). |
சேய்நீர் | cēy-nīr, n. (Alch.) Alkaline preparation to act on metals. See செயநீர். (சங். அக.) . |
சேய்மரபு | cēy-marapu, n.<> சேய்1+. Youth; இளமைப்பருவம். சேய்மரபிற் கல்விமாண் பில்லாத மாந்தரும் (திரிகடு. 84). |
சேய்மை | cēymai, n. 1. Distance, remoteness; தூரம். (சூடா.) சேய்மையி னோக்குறு (கம்பரா. சடாயுகாண். 5). 2. Length; |
சேய்மைவிளி | cēymai-viḷi, n.<> சேய்மை+. (Gram.) Vocative used to call a person at a distance; தூரத்திலுள்ளோரை அழைக்கும் விளி. (நன். 313, விருத்.) |
சேயம் | cēyam, n. perh. சேய்-மை. Shore, bank; கரை. (யாழ். அக.) |
சேயமம் | cēyamam, n. A prepared arsenic; கௌரிபாஷாணம். (யாழ். அக.) |
சேயவன் | cēyavaṉ, n.<> சேய்1. 1. Mars; செவ்வாய். (திவா.) 2. Skanda; |
சேயன் 1 | cēyaṉ, n. <> சேய்2. One who is at a distance; தூரத்திலுள்ளவன். சேய னணியன் (திவ். பெரியதி. 2, 1, 8). |
சேயன் 2 | cēyaṉ, n.<> சேய்1. Ruddy person; செந்நிறமுள்ளவன். வண்ணமு மாயனவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை). |
சேயா | cēyā, n.<> jayā. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) . |
சேயார் | cēyār, n.<> சேய்2. (யாழ். அக.) 1. People at a distance; தூரத்திலுள்ளவர். 2. Enemies, foes; |