Word |
English & Tamil Meaning |
---|---|
சோடை 1 | cōṭṭai, n.<>šōṣa. 1. Drought, heat, dryness; வறட்சி. (சங்.அக). 2. Tree which has ceased to yield, withered tree; 3. Faintness, languor; 4. Person of imperfect or weak understanding, booby; 5. Failure, as in the accomplishment of an object; 6. A kind of disease; 7. A blight affecting the plantain; 8. Cart-track lyin through a field in summer; 9. Rut in a road; 10. Trace; |
சோடை 2 | cōṭai, n.<>சோட்டை. 1. Eager desire ; விருப்பம். சமர்புரி சோடை கொண்டனன் (விநாயகபு. 74,64). 2. Delight, ecstasy ; 3. Duty ; |
சோடைபற்று - தல் | cōṭai-paṟṟu-, v. intr. <>சோடை +. To become stunted, unfruitful ; நறுங்கி பலனற்றுப் போதல். |
சோடையன் | cōṭaiyaṉ, n.<>id. Weak, sickly person ; பலவீனன் . (W.) |
சோணகிரி | cōṇakiri, n.<>šōṇa + giri. Tiruvaṇṇāmalai hill in south Arcot District ; திருவண்ணாமலை. சோணகிரி வித்தகா (பட்டினத்.தாயார்தகன.9) . |
சோணங்கி | cōṇaṅki, n.<>சுணங்கு-. 1. Lean person or animal ; மெலிந்த-வன்-வள்-து. Loc. 2. See சோணங்கிநாய்.(w.) |
சோணங்கிநாய் | cōṇaṅki-nāy, n. (K. sōṇaṅgināyi.) A breed of dog ; நாய்வகை . |
சோணசைலம் | cōṇa-cailam, n.<>šōṇa +. See சோணகிரி. சோணசைலமாலை. |
சோணப்பூ | cōṇappū, n.<>id. +. Red cotton ; செம்பருத்திப்பூ. வாசப்பளிதமுஞ் சோணப்பூவு (பெருங்.மகத.17, 133) . |
சோணம் 1 | cōṇam, n.<>šōṇa. Red colour, crimson ; சிவப்பு. (பிங்.) |
சோணம் 2 | cōṇam, n.<>šōṇā. See சோணை2 . சிலம்பு சூழுங்காற் சோணமாந் தெரிவையை (கம்பரா.அகலிகை.1) |
சோணம் 3 | cōṇam, n.<>svarṇa. Gold ; பொன். சோணந்தரு கும்பங்கிளர் துணைமாளிகை (திருவாத.பு.திருவம்பல்.51) . |
சோணாகம் | cōṇākam, n.<>šōṇāka. See பெருவாகை. (மலை.) . |
சோணாசலங்கம்பு | cōṇācalaṅ-kampu, n.<>சோணாசலம் +. A variety of kampu ; கம்புப்பயிர்வகை . (G.sm. D.I,i, 219.) |
சோணாசலம் | cōṇacalam, n. See சோணகிரி. . |
சோணாடு | cōṇāṭu, n.<>சோழன் + நாடு. The chola country ; சோழதேசம். குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு. (பட்டினப்.28) . |
சோணாலு | cōṇālu, n. A lucky fall of dice or cowries, as in the game of tāyam , dist. fr. pāṇālu ; தாயம் முதலிய விளையாட்டில் விழும் ஒரு நல் விருத்தம் . |
சோணி 1 | cōṇi, n.<>šōṇita. Blood ; இரத்தம். போதுமூத்திரமே சோணிவிந்துவாம். (த.நி.போ.பொதுமைப்.144) . |
சோணி 2 | cōṇi, n. cf.சோகி . Cowrie ; பலகறை . |
சோணிதக்கட்டு | cōṇita-k-kaṭṭu, n.<>சோணிதம் +. Amenorrhoea ; சூதகக்கட்டு. |
சோணிதநெரிசல் | cōṇita-nerical, n.<>id. +. Conjunctivitis ; செம்படலங்கள் படர்ந்து நோவைத் தரும் கண்ணோய் வகை. (சீவரட்) . |
சோணிதப்பெருக்கு | cōṇita-p-perukku, n.<>id. +. Menorrhagia ; பெரும்பாடு என்னும் சூதக நோய் . |
சோணிதபுரம் | cōṇita-puram, n.<>id. +. The town of Bānṇa, an Asura ; வாணாசுரன் நகர். துன்னல ரணுகல் செல்லாச் சோணிதபுரத்தை (காஞ்சிப்பு.வாணீசப்.42) . |
சோணிதம் | cōṇitam, n.<>šōṇita. 1. Blood ; இரத்தம். வழிபடு செஞ்சோணிதம் (கம்பரா. இந்திரசித். வதை. 26). 2. Red, crimson ; 3.See சுரோணிதம். 4. See சோணிதவாதம். 5.Turmeric. See மஞ்சள். (மலை.) |
சோணிதவாதம் | cōṇita-vātam, n.<>id. +. Rheumatism ; வாதநோய் வகை. (சீவரட்.158). |
சோணேசன் | cōṇēcaṉ, n.<>šōṇa + iša. šiva, as Lord of Cōṇācalam or Tiruvaṇṇāmalai ; திருவண்ணாமலையிற் கோயில்கொண்ட சிவபிரான். காட்டுமோசரணேசன் கஞ்சமலர்த் தாளிணையை (அருணகிரியந்.25). |