Word |
English & Tamil Meaning |
---|---|
சோதரம் | cōtaram, n.<>sōdara. Relationship of persons born 0f the same parents, brotherhood; sisterhood ; உடன்பிறப்பு. (யாழ்.அக.) |
சோதரன் | cōtaraṉ, n.<>id. Uterine brother ; உடன்பிறந்தவன். (சங்.அக) தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே (திருப்பு.136) . |
சோதரி | cōtari, n.<>sōdari. Uterine sister ; உடன்பிறந்தவள். மூர்க்க குலத்தி விபீஷணன் சோதரி. (திருப்பு.266.) |
சோதரை | cōtarai, n. See சோதரி. (சங்.அக.) . |
சோதனபத்திரம் | cōtaṉa-pattiram, n.<>šōdhana +. Table of errata ; பிழைதிருத்தக்குறிப்பு . |
சோதனம் | cōtaṉam, n.<>šōdhana. 1. Examining, investigating; சோதிக்கை. (யாழ்.அக). 2. Assaying metals; 3. Refining metals; 4. Omen, augury; |
சோதனி | cōtaṉi, n.<>šōdhani. 1. Broom, besom, brush ; துடைப்பம். (பிங்.) முன்றில் சோதனி கொண்டு துடைத்து (சேதுபு. மங்கல. 40). 2. Dry rubbish, decayed vegetable matter ; |
சோதனை 1 | cōtaṉai, n.<>šōdhana. 1. Examination, inspection, trial; பரீட்சை. பொற்றோள் வலி நிலைசோதனை புரிவானசை யுடையோன் (கம்பரா.பரசுரா.18). 2. Divine trial; 3. Sifting, search, investigation; 4. Temptation; 5. Assaying metals ; 6. A kind of measure ; |
சோதனை 2 | cōtaṉai, n.<>cōdanā. Direction, hint ; குறிப்பு. என்றன் சோதனை நோக்கிச் செய்தி (கம்பரா.இராவணன்வதை.6) . |
சோதனைக்கம்பி | cōtaṉai-k-kampi, n.<>சோதனை +. See சோதனைக்கோல். . |
சோதனைக்காரன் | cōtaṉai-k-kāraṉ, n.<>id. +. [M. cōtanakkāran.] Examiner, inspector, censor ; பரீக்ஷிப்பவன் . |
சோதனைக்கோல் | cōtaṉai-k-kōl, n.<>id. +. 1. Probe ; விரணக்கட்டி முதலியவற்றைக் குத்திக் சோதிக்கும் ஊசிக்கருவி. Nā. 2. Long needle; See குத்தூசி, 2. |
சோதனைகொடு - த்தல் | cōtaṉai-k-koṭu-, n.<>id. +. (w.) 1. To be examined, to undergo examination; பரீக்ஷிக்கப்படுதல். 2. To pass examination, as candidates; |
சோதனைசாபிதா | cōtaṉai-cāpitā, n.<>id. +. Search list; விசாரணை யதிகாரிகள் பிறரிட மிருந்து கைவசப்படுத்திய பொருள்களின் குறிப்பு . |
சோதனைநாழி | cōtaṉai-nāḻi, <>id.+. A standard measure of capacity ; திட்டமான முகத்தலளவைக்கருவி . |
சோதனைபண்ணு - தல் | cōtaṉai-paṇṇu-, v. tr.<>id. +. 1. To examine, sift, scrutinise, search, try; பரீக்ஷைபார்த்தல். 2. To test the sincerity or integrity of a person by adversity, affliction or other means; |
சோதனைபார் - த்தல் | cōtaṉai-pār-, v. tr.<>id. +. See சோதனைப்பண்ணு-. (W.) . |
சோதா | cōtā, n.<>Hind. shuhda. (Tu. sōde.) 1. Lazy fellow ; சோம்பேறி. Madr. 2. Vagabond ; 3. Weak person ; 4. Useless person ; |
சோதி 1 - த்தல் | cōti-, 11 v. tr.<> šōdha. 1. To search, make research into, inquire, investigate, examine; விசாரணைசெய்தல். நியாயசபையில் என்னைச் சோதித்தாய் விட்டது. 2. To sift, as rice, test, experiment, assay, scrutinise, probe; 3. To cleanse; 4. See சோதனைபண்ணு, 2. 5. To tempt, incite ; |
சோதி 2 - த்தல் | cōti, 11 v. intr. <>jyōtis. To be splendid. lustrous; விளக்கமுறுதல். (W.) |
சோதி 3 | cōti, n.<>jyōtis. 1. Light, splendour, lustre, brilliancy, effulgence; ஒளி. அருக்கனிற் சோதி யமைத்தோன் (திருவாச.3, 20). 2. Ray or streak light; 3. Lamp, torch; 4. Fire; 5. Sun; 6. Star; 7. The supreme Being; 8. šiva; 9. Arhat; 10. Lit camphor; 11. Vermilion; 12. Spiritual wisdom, mental illumination; 13. Ground-worm; |
சோதி 4 | cōti,. n.<>svāti. (M. cōti.) The 15th nakṣatra, part of Bootes in tulārāci; சுவாதி நக்ஷத்திரம். (இலக்.வி.790). |