Word |
English & Tamil Meaning |
---|---|
சோதி 5 | cōti, n. cf. chēda. Crack in walls, dams or banks; சுவர் முதலியவற்றிற் காணும் வெடிப்பு. |
சோதிக்குண்மணி | cōtikkuṇ-maṇi, n.<>சோதி +. Pearl, as having bright white lustre; (வெள்ளொளியாற் சூழ்ந்த மணி) முத்து. (யாழ்.அக.) |
சோதிச்சக்கரம் | cōti-c-cakkaram, n.<>id. +. 1. The starry firm ament; வானவட்டம். (W.) 2. Polar circle; |
சோதிசம்பாதம் | cōti-campātam, n.<>சோதி +. The conjunction of the star Svātī and the Sun, considered inauspicious ; சுவாதி நக்ஷத்திரமும் சூரியனும் கூடும் அசுபநாள். (விதான.அரசர்.10). |
சோதிசு | cōticu, n.<>jyōtis. Brilliancy; பிரகாசம். (சி.சி.8, 21, சிவாக்.) |
சோதிட்டுமகம் | cōtiṭṭumakam, n.<>jyōtiṣṭōma. See சோடிட்டோமம். (திருக்காளத்.பு.7, 26). . |
சோதிட்டோமம் | cōtiṭṭōmam, n.<>jyōtiṣṭōma. A kind of S0ōma sacrifice ; சோமயாக வகை. (பிங்.) |
சோதிடங்கொள்(ளு) - தல் | cōtiṭaṅ-koḷ-, v.intr.<>சோதிடம் +. To act the part of an astrologer, to foretell events ; சோதிடம் சொல்லுதலைப் பொருந்துதல். சோதிடங் கொண்டி தெம்மைக் கெடுவித்தது (திருக்கோ.138) . |
சோதிடசாத்திரம் | cōtita-cāttiram, n.<>id. +. See சோதிடநூல். . |
சோதிடநூல் | cōtiṭa-nūl, n.<>id. +. 1. Astronomy ; வானசாத்திரம். சோதிடநூலார் இங்ஙனம் கூறுப (சீவக. 532, உரை). 2. Astrology ; |
சோதிடம் | cōtiṭam, n.<>jyōtiṣa. 1. See சோதிடநூல். சத்தமுஞ் சோதிடமும் (நாலடி, 52). 2. Omen ; |
சோதிடம்பார் - த்தல் | cōtiṭam-pār-, v. intr. <>id. +. To consult astrology ; சோதிடநூல் பார்த்துப் பலாபலனை அறிதல் . |
சோதிடர் | cōtiṭar, n.<>id. 1. Astrologers ; சோதிடம் வல்லவர். 2. The heavenly bodies ; |
சோதிடவர் | cōtiṭavar, n.<>id. See சோதிடர், சோதிடவருடனே கூட்டி நல்ல நாளிலே குடையைப் புறவீடு விட்டான். (பு.வெ.4, 8, உரை) . |
சோதிடவாதம் | cōtiṭa-vātam, n.<>id. + vāda. A religious system which regards the heavenly bodies as the supreme Being ; வானமண்டலங்களையே தெய்வமாகக்கருதி வழிபடுங்கொள்கை . |
சோதிதம் | cōtiṭam, n.<>šōdhita. 1. That which has been examined or reviewed ; சோதனை செய்யப்பட்டது. சோதித தற்பதார்த்தம் (வேதா. சூ. 119). 2. (Math.) Subtrahend ; |
சோதிநாயகன் | cōti-nāyakaṉ, n.<>சோதி +. See சோதியன். (யாழ்.அக.) . |
சோதிநாள் | cōti-naḷ, n.<>சோதி +. See சோதி, (பிங்.) . |
சோதிநீச்சடம் | cōti-nīccaṭam, n.<>id. Oyster ; முத்துச்சிப்பி. (யாழ்.அக.) |
சோதிநூல் | cōti-nūl, n.<>சோதி +. See சோதிடநூல், .யஅ சோதிநூ லறிஞ்ருந் துணுக்க மெய்துவார் (சேதுபு.கந்தமா.17) |
சோதிப்பிழம்பு | cōti-p-piḻampu, n.<>id. +. Bundle of rays, shaft of light ; கிரணத்திரட்சி . (J.) |
சோதிப்புல் | cōti-p-pul, n. <>id. +. A kind of grass ; புல்வகை. (பதார்த்த.373.) |
சோதிமண்டலம் | cōti-maṅṭalam, n.<>id. +. 1. Halo of light ; சோதிமண்டலந் தோன்றுவ துறதேல் (பெருந்தொ. 161). 2. Starry firmament ; |
சோதிமயம் | cōti-mayam, n.<>jyōtirmaya. 1. Body of light ; ஒளிவடிவு. (சங். அக.) 2. See சோதியம். (மலை.) |
சோதிமயவேதி | cōti-maya-vēti, n. A ground-worm .See பூநாகம்.(W.) . |
சோதிமரம் | cōti-maram, n.<>சோதி +. See சோதிவிருட்சம். Nāṉ. . |
சோதிமா | cōti-mā, n.<>id. +. See சோதிவிருட்சம். (மலை.) . |
சோதிமாவொலிச்சம் | cōti-mā-v-oliccam, n. Teakwood ; தேக்கு. (மலை.) |
சோதிமின்னல் | cōti-miṉṉal, n.<>சோதி +. Lightning in the east when the sun enters Svātī naṣattiram , believed to indicate rain ; சூரியன் சுவாதிநட்சத்திரத்திற் புகும்பொழுது மழைக்கு அறிகுறியாகக் கிழக்கே தோன்றும் மின்னல். (வருசாஷ.212) . |
சோதியம் | cōtiyam, n.<>jyōtiṣmatī. Climbing staff plant ; வாலுளுவை. (மலை.) |
சோதியன் | cōtiyaṉ, n.<>சோதி. God, as radiant ; (ஒளிவடிவமானவன்) கடவுள். யாவையுமாயல்லையுமாஞ் சோதியனே (திருவாச.1, 72). |