Word |
English & Tamil Meaning |
---|---|
தடுத்தாட்கொள்(ளு) - தல் | taṭuttāṭkoḷ-, v. tr. <>தடு- +. See தடுத்தாள்-. தடுத்தாட்கொண்ட புராணம். |
தடுத்தாள்(ளு) - தல் | taṭuttāḷ-, v. tr. <>id. +. To reclaim, redeem, as a person from his evil ways; திருத்தி வசமாக்குதல். |
தடுத்துவை - த்தல் | taṭuttu-vai-, v. tr. <> id. +. To put off, postpone; தடைசெய்து நிறுத்தி வைத்தல். (W.) |
தடுதாளி | taṭutāḷi, n. Haste, hurry; அவசரம். இந்தத் தடுதாளியில் ஒன்றும் முடியாது. Tinn. |
தடுப்பு | taṭuppu, n. <>தடு-. (w.) 1. Hindering, obstructing, resisting, prohibiting ; தடுக்கை. தடுப்பருஞ் சாபம். (கம்பரா.அகலிகை.75). 2. Check, hindrance, restraint ; |
தடுமம் | taṭumam, n. See தடிமன்1. Loc. . |
தடுமல் | taṭumal, n. [T.K. tadi.] See தடிமன்1.Tinn. . |
தடுமன் | taṭumaṉ, n. See தடிமன்1.(W.) . |
தடுமாற்றம் | taṭumāṟṟam, n. <>தடுமாறு-. [T. tadamāṭu.] 1. Disorder, as of things; derangement, inconsistency, as in speech ; ஒழுங்கின்மை. சொற்றடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு (மணி.27, 166). 2. Tottering, unsteadiness, stumbling, staggering, slipping; 3. Perplexity, confusion, bewilderment, mental disorder; 4. Doubt, hesitation; 5. Mistake; proneness to mistake; |
தடுமாற்று | taṭumāṟu, n. See தடுமாற்றம், 3. தண்ணீர் பெறா அத் தடுமாற் றருந்துயரம். (கலித்.6). . |
தடுமாறு - தல் | taṭumāṟu-, 5 v, intr. 1. To be deranged; ஒழுங்கீனமாதல். 2. To be thrown in a jumble; 3. To slip, totter, stagger, be unsteady; 4. To be troubled; to be tossed about; 5. To be confused, puzzled, perplexed, disconcerted, bewildered ; 6. To doubt; to hesitate; to be in suspense; 7. To be mistaken; to be inconsistent; to err; |
தடுமாறுத்தி | taṭumāṟutti, n. <>தடுமாறு- +. (Rhet.) A figure of speech in which cause and effect are inverted; காரியத்தைக் காரணமெனத் தடுமாறக் கூறும் அணிவகை. (மாறனலங்.சொல்.205.) |
தடுமாறுவமம் | taṭumāṉuvamam, n. <>id. +. 1. (Rhet. ) A figure of speech. See ஐயவணி. (தொல். பொ. 310, உரை.) . 2. (Rhet.) A figure of speech . See எதிர்நிலையாணி. (தொல். பொ. 310, உரை.) |
தடுமாறுவமை | taṭumāṟuvamai, n. <>id. +. (Rhet.) See தடுமாறுவமம், 1, (இலக்.வி.640.) . |
தடை | taṭai, n. <>தடு-. 1. [T. tad, K. tade, M. taṭa.] Resisting, obstructing ; தடுக்கை. தடையேதுமில் சூலம் (கம்பரா.அதிகாயன்.251). 2. Hindrance, obstacle, impediment, interruption; 3. Objection; 4. Coat of mail; 5. Armlet or anklet worn as a charm; 6. Guard, watch; 7. Door, gate; 8. Bund, embankment; 9. That which keeps a thing in its place, as a linchpin, catch, bolt, etc.; 10. Charm, magic spell, as an obstacle; 11. Wife; 12. See தடையம், 1. 13. A measure of weight = 80palams; 14. Creamy-leaved lance wood, m. tr. , Pterospermum suberifolium; 15. See தடல். வாழைத்தடை. Loc. |
தடை - தல் | taṭai-,. 4 v. tr. <>தடை. [K. tade.] To hinder, stop; தடுத்தல். எண்வழி தடைந்து (கல்லா.31, 1). |
தடை - த்தல் | taṭai-, 11 v. tr. <>id. See தடை2-. மழைவந்தெழுநாள் பெய்து மாத்தடைப்ப (திவ்.பெரியாழ்.3, 5, 2). . |
தடைஇ | taṭaii, v. pple. <>தட. Bent down, drooped; சரிந்து. புதல்வற் றடுத்த பாலொடு தடைஇ . . . தேங்கொண் மென்முலை. (அகநா.26) . |
தடைஇய | taṭaiiya, n. pple. <>id. 1. Plump; பெருத்த. நன்றுந் தடைஇய மென்றோள் (கலித். 93). 2. Rounded; |
தடைகட்டு - தல் | taṭai-kaṭṭu-, v. tr. <>தடை +. 1. To control or check by magic spell, as a cobra; பாம்பு முதலியவற்றை மந்திரத்தால் தடுத்தல். 2. To put the taṭaiyam weight in a scale; |
தடைகட்டு | taṭai-kaṭṭu, n. <>id.+. Office of inspector of weights, measures, etc.; நிறையளவுகளைப் பரிசோதிக்கும் உத்தியோகம். தடைகட்டு மாலையப்ப பிள்ளையோ (விறலிவிடு. 453). |