Word |
English & Tamil Meaning |
---|---|
தடைபடுத்து - தல் | taṭai-paṭuttu-, v. tr. <>id. +. See தடைப்பண்ணு-. . |
தடைபண்ணு - தல் | taṭai-paṇṇu-, v. tr. <>id. +. 1. To hinder, interpose obstacles, prevent ; இடையூறுசெய்தல்; 2. To arrest, confine ; 3. To stop, exclude, interrupt possession; |
தடைமரம் | taṭai-maram, n. <>id. +. Cross-piece in a loom, used for rolling the cloth when woven; நெய்த துணியைச் சுருட்டுவதற்குத் தறியில் அமைக்கப்பட்ட குறுக்குச் சட்டம். Loc.. |
தடைமோதிரம் | taṭai-mōtiram, n. <>id. +. Keeper; பெரிய மோதிரத்தைத் தடுத்துநிற்குஞ் சிறுமோதிரம். |
தடையம் | taṭaiyam, n. <>id. 1. Allowance weight to balance the vessel containing the articles to be weighed ; நிறுக்கப்போகும் பொருளை வைத்திருக்கும் பாத்திர முதலியவற்றிற்குரிய எடை. (W.) தடையமென்றுந்தூக்கித் தராசானிறுக்க (பணவிடு.181). 2. Token weight given by a gold smith, as showing the amount of gold delivered to him; 3. Ornaments; 4. Utensils, articles; 5. Stolen property; material object concerned in a crime; 6. Pawned goods; 7. Hilt of a sword; |
தடையறு - த்தல் | taṭai-y-aṟu-, v. intr. <>id. +. (w.) 1. To remove magic spells by counter charms ; மந்திரத்தடை நீக்குதல். 2. To obviate or remove difficulties ; |
தடைவிடை | taṭai-viṭai, n. <>id. +. Objection and reply; pros and cons; ஆட்சேப சமாதானங்கள். |
தண் | taṇ, n. 1. [K. M. taṇ.] Coolness, coldness; குளிர்ச்சி. (பிங்.) 2. Water; 3. Grace; love; |
தண்கடற்சேர்ப்பன் | taṇ-kaṭaṟ-cērppan, n. <>தண் +. Chief of the neytal tract; நெய்தனிலத் தலைமகன். (பிங்.) |
தண்கதிர் | taṇ-katir, n. <>id. +. See தண்சுடர்க்கலையோன். தன்னிழலோ ரெல்லார்க்குந் தண்கதிராம் (பு.வெ.9, 34). . |
தண்சுடர் | taṇ-cuṭar, n. <>id. +. See தண்சுடர்க்கலையோன். (பிங்) . |
தண்சுடர்க்கலையோன் | taṇ-cuṭar-k-kalai-yōṉ, n. <>id. +. Moon, as cool-rayed; [குளிர்ந்த ஒளியுள்ள கிரணங்களையுடையவன்] சந்திரன். (திவா.) |
தண்டக்கட்டு | taṇṭa-k-kaṭṭu, n. <>daṇda +. Ryot's perquisite of the grains carried away by wind while winnowing; களத்திற் பொலிவீசுஞ் சமயத்துக் காற்று அடித்துக்கொண்டுபோன நெல்லை அடைதற்குரிய சுதந்திரம். (G. Sm. D. I, ii, 49.) |
தண்டக்காரன் | taṇṭa-k-kāraṉ, n. <>id. +. Servant; வேலைக்காரன். Parav. |
தண்டக்கூற்றம் | taṇṭa-k-kūṟṟam, n. An ancient tax ; வரிவகை . (I. M. P. Cm. 454.) |
தண்டகநாடு | taṇṭaka-nāṭu, n.<>daṇdaka +. See தொண்டைநாடு. வார்புனற் றெண்டிரைத் தண்டகநாடு. (கம்பரா.ஆறுசெல்.38) . . |
தண்டகம் | taṇṭakam, n.<>daṇdaka. 1. Toṇtaimaṇtalam. See தொண்டைநாடு. . 2. See தண்டகாரணியம். தண்டகமாமடவியாகி (உத்தரரா.சம்புவன்வ.65) . 3. Punishment; 4. A kind of Sanskrit verse; 5. Spinal cord, as the seat of a mystic centre; |
தண்டகமாலை | taṇṭaka-mālai, n. prob. id. +. Poem of 300 stanzas in veṇpā metre, one of 96 pirapantam , q.v. ; தொண்ணூற்றறுவகைப் பிரபந்தங்களுள் முந்நூறு வெண்பாக்களாலியன்ற பிரபந்த வகை. (தொன்.வி.283, உரை) . |
தண்டகவாதம் | taṇṭaka-vātam, n.<>id. +. A kind of paralysis ; வாதநோய்வகை. (சீவரட்.) |
தண்டகன் | taṇṭakaṉ, n.<>Daṇdaka. 1. A king, after whom taṇṭakāraṇiyam ant taṇṭakanāṭu took their names; தண்டகாரணியம் தண்டகநாடு இவற்றின் பெயருக்குக் காரணமான அரசன். (கந்தபு.திருநகர.74). 2. Yama; |
தண்டகாகம் | taṇṭa-kākam, n.<>daṇdakāka. Crow pheasant ; See செம்போத்து. (சங்.அக.) . |
தண்டகாரணியம் | taṇṭakāraṇiyam, n.<>Daṇdaka + araṇya. The forest of Daṇaka in Deccan, a famous resort of ascetics ; தக்கண தேசத்தில் துறவிகள் மிக்கு வசித்துவந்த ஒரு வனம். தண்டகாரணியம் புகுந்து (திவ்.பெரியதி.11, 2, 3) . |
தண்டகை | taṇṭakai, n. See தண்டகாரணியம். (சங்.அக) . . |
தண்டங்கீரை | taṇṭtaṅ-kīrai, n.<>தண்டு +. Common spinach ; See தண்டுக்கீரை. . |
தண்டங்கொடு - த்தல் | taṇṭaṅ-koṭu-, n.<>தண்டம் +. tr. 1. To pay a fine, suffer a penalty; அபராதமிறுத்தல். 2. To suffer loss; To make good a loss; |