Word |
English & Tamil Meaning |
---|---|
தண்டம்பண்ணு - தல் | taṇṭam-paṇṇu-, v. tr. <>தண்டம்+. To worship by prostration; அடிவீழ்ந்து வணங்குதல். மேனிபாதி செய்தவரைத் தண்டம்பண்ணி. (கொக்கோ.பாயி.4). |
தண்டம்பிடி - த்தல் | taṇṭam-piṭi-, v. tr. <>id. +. To collect fine; அபராதம் வாங்குதல். Loc. |
தண்டம்போடு - தல் | taṇṭam-pōṭu-, v. tr. <>id. +. tr. Colloq. To impose fine; to prostrate in worship, as a devotee; அபராதமிடுதல்.--tr. & intr. வணங்குதல். |
தண்டமானங்கொட்டு - தல் | taṇṭamāṉaṅ-koṭṭu-, v. intr. <>தண்டமானம் +. To bluster arrogantly; அகங்காரமாய் முழங்குதல். நீ தண்டமானங் கொட்டினால் ஒருவரும் பயப்படமாட்டார்கள். Nā. |
தண்டமானம் | taṇṭa-māṉam, n. Waving of the tail. See தண்டைமானம். (யாழ்.அக.) . |
தண்டயமரம் | taṇṭaya-maram, n. <>தண்டயம்+. Wall-bracket; கோக்காலி. Nā. |
தண்டயாத்திரை | taṇṭa-yāttirai, n. <>தண்டம்+. Military expedition; படையெடுத்துச் செல்லுகை. எழுந்தனன் றண்டயாத்திரை (அருணா.பு.பிரதத்த.7). |
தண்டயோகம் | taṇṭa-yōkam, n. <>id. +. (Astrol.) An auspicious yōkam; யோகவகை. (சாதகசிந்.1975.) |
தண்டர் | taṇṭar, n. <>id. Those who impose punishment; தண்டனைசெய்வோர். தண்டருங் காணத் தந்தாண்டருள் (மருதூரந்.38). |
தண்டல் 1 | taṇṭal, n. <>தண்டு-. 1. Collecting, as tax ; வசூலிக்கை. 2. Collection, amount collected; 3. Tax-collector; 4. Failure, omission; 5. Obstruction, hindrance; 6. Resisting, opposing; |
தண்டல் 2 | taṇṭal, n. <>daṇda.. Punishment; தண்டனை. யான்செய் தண்டலே தகவிலாமை (திருவாத.பு.மண்சுமந்த.13). |
தண்டல் 3 | taṇṭal, n. of. Mhr. tandel, U. taṇdēl. [T. taṇdēlu, M. taṇdal.] Chief of a small vessel or ship ; படகுத்தலைவன். (W.) |
தண்டலர் | taṇṭalar, n. <>தண்டு- + அல் neg. +. Enemies; பகைவர். தாணிழ னீங்கிய தண்டலரானோர் (சேதுபு.மங்கலதீர்த்.8). |
தண்டலாளன் | taṇṭal-āḷaṉ, n. <>தண்டல்1 +. Tax-collector; வரிதண்டுவோன். தனத்தை யெல்லாம் வாங்குமின் றண்டலாளர் (திருவாத.பு.திருப்பெருந்.116). |
தண்டலிலக்கை | taṇṭal-ilakkai, n. <>id. +. An ancient tax; பழைய வரிவகை. (Insc.) |
தண்டலை | taṇṭalai, n. <>தண்-மை +தலை. 1. Grove; சோலை. சிறுகுடித்தண்டலை கமழுங் கூந்தல் (அகநா. 204). 2. Flower garden; 3. An ancient šiva shrine; |
தண்டலையார்சதகம் | taṇṭalaiyār-catakam, n. <>id. +. A poem of 100 stanzas by Cānta-liṅka-k-kavirāyar; சாந்தலிங்கக் கவிராயர் நூறுபாக்களால் இயற்றிய ஒரு நூல். |
தண்டவாணி | taṇṭa-v-āṇi, n. <>daṇda +. Golden needle for testing the standard of gold; பொன்மாற்றறிய உதவும் ஆணி. (S. I. I. ii, 237.) |
தண்டவால் | taṇṭa-vāl, n. <>id. +. Waving of the tail. See தண்டைமானம். (W.) . |
தண்டவாளம் | taṇṭa-vāḷam, n. prob. id. [K. taṇdavāḷa.] 1. Cast iron; உருக்கிரும்பு. (W.) 2. Iron rail, girder; 3. A kind of saree; |
தண்டற்கடமை | taṇṭaṟ-kaṭamai, n. <>தண்டல்1 +. Tax on rent-farming; வரிதண்டுவோர் மீதிட்ட பழையவரி வகை. (S. I. I. iii, 115.) |
தண்டற்காரன் 1 | taṇṭaṟ-kāraṉ, n. <>id. +. 1. Collector of village revenue; one who collects amounts due from creditors ; வரி முதலியன தண்டுவோன். 2. A village servant under the headman of a village, employed in collecting revenue ; |
தண்டற்காரன் 2 | taṇṭaṟ-kāraṉ, n. See தண்டல்3. Loc. . |
தண்டற்குறிப்பு | taṇṭaṟ-kuṟippu, n. <>தண்டல்1 +. Account of rents, tribute or other dues; வரிப்பதிவுப் புத்தகம். |
தண்டற்கொட்டி | taṇṭaṟ-koṭṭi, n. prob. id. +. Aquatic plant of the species aponogeton; நீர்ப்பூடுவகை. |