Word |
English & Tamil Meaning |
---|---|
தண்ணீர்க்கண்டம் | taṇṇīr-k-kaṇṭam, n. <>தண்ணீர்+. Peril by water, as drowning; நீரில் மூழ்கிப்போதல் முதலிய ஆபத்து. |
தண்ணீர்க்கதவு | taṇṇīr-k-katavu, n. <>id. +. Flood-gate; ஏரி முதலியவற்றிலிருந்து நீர் விடுதற்குரிய கதவு. (C. E. M.) |
தண்ணீர்க்காரன் | taṇṇīr-k-kāraṉ, n. <>id. Waterman; தண்ணீர்க்காரன். நீர் சுமந்து கொடுப்போன். |
தண்ணீர்க்காரி | taṇṇīr-k-kāri, n. Fem. of தண்ணீர்க்காரன். Woman supplying water; நீர் சுமந்து கொடுப்பவள். |
தண்ணீர்க்காரிச்சி | taṇṇīr-k-kāricci, n. See தண்ணீர்க்காரி. Colloq. . |
தண்ணீர்க்கால் | taṇṇīr-k-kāl, n. <>தண்ணீர் +. Watercourse; நீரோடும் வழி. (C.E. M.) |
தண்ணீர்க்குடம் | taṇṇīr-k-kuṭam, n. <>id. +. 1. Water-pot; நீர்முகக்கும் குடம். 2. Traveller's palm. See நீர்வாழை. (பிங்.) |
தண்ணீர்கட்டு - தல் | taṇṇīr-kaṭṭu-, v. intr. <>id. +. 1. To irrigate a field, garden bed, etc.; வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல். 2. To form pus; to blister; |
தண்ணீர்காட்டு - தல் | taṇṇīr-kāṭṭu-, v. tr. <>id. +. 1. To water, as beasts ; கால்நடைகளைக் குடிநீர் காட்டுதல். 2. To deceive, overreach, as showing water without allowing one to drink ; 3. To tantalize, harass; |
தண்ணீர்கோலு - தல் | taṇṇīr-kōlu-, v. intr. <>id. +. To take up or bale water; கிணற்றிலிருந்து நீரிறைத்தல். Loc. |
தண்ணீர்ச்சாரை | taṇīr-c-cārai, n. <>id. +. Rat-snake Yaocys mucosus; நீர்ப்பாம்புவகை. |
தண்ணீர்த்தட்டு | taṇṇir-t-taṭṭu n. <> id. +. Scarcity of water; தண்ணீரில்லாமற்போகை. Loc. |
தண்ணீர்த்துரும்பு | taṇṇīr-t-turumpu, n. <>id. +. Obstruction, as a straw in drinking water; [பருகுந் தண்ணீரிலுள்ள துரும்பு] இடையூறு. தேவரீர் கிருபைக்குத் தண்ணிர்துரும்பாக (ஈடு, 1, 4, 7). |
தண்ணீர்த்துறை | taṇṇīr-t-tuṟai, n. <>id. +. Ghat, path of descent to a tank or river; நீர்நிலையில் இறங்குமிடம். Colloq. |
தண்ணீர்த்துறையேறு - தல் | taṇṇīr-t-tuṟai-y-ēṟu-, v. intr. <>id. +. To be in one's periods; மாதவிடாயாதல். (மூ.அ.அநுபந்.) |
தண்ணீர்த்தேள் | taṇṇīr-t-teḷ, n. <>id. +. Water-scorpion, Laceo trephes; நீர்வாழ்ச்சந்துவகை. |
தண்ணீர்தெளி - த்தல் | taṇṇīr-teḷi-, v. tr. <>id. +. To sprinkle water for purification; சுத்தத்தின் பொருட்டுநீர் தெளித்தல். (W.) |
தண்ணீர்தெளித்துவிடு - தல் | taṇṇīr-teḷittu-viṭu-, v. tr. <>id. +. To leave one to oneself; ஒருவனைத் தன்னிச்சையாகச் செல்லும்படி விடுதல். Loc. |
தண்ணீர்ப்பகை | taṇṇīr-p-pakai, n. <>id. +. Injuriousness of some kinds of water; உடம்புக்குச் சிலநீர் ஒத்துக்கொள்ளாமையாலாகிய மாறுபாடு. Loc. |
தண்ணீர்ப்பத்தாயம் | taṇṇīr-p-pattāyam, n. <>id. +. Cistern, reservoir of water; நீர்த்தொட்டி. Loc. |
தண்ணீர்ப்பந்தர் | taṇṇīr-p-pantar, n. <>id.+. See தண்ணீர்ப்பந்தல். தண்ணீர்ப்பந்தர் சயம்பெற வைத்து (திருவாச.2, 58). . |
தண்ணீர்ப்பந்தல் | taṇṇīr-p-pantal, n. <>id. +. Place where drinking-water, butter-milk, etc., are given gratis to passers-by during the hot season; வெயிற்காலத்தில் வழிச்செல்வோர்க்குக் குடிநீர் முதலியன உதவும் அறச்சாலை. |
தண்ணீர்ப்பாம்பு | taṇṇīr-p-pāmpu, n. <>id. +. Water-snake, Tropidonotus piscator; நீர்ப்பாம்பு. |
தண்ணீர்ப்பிடி | taṇṇīr-p-piṭi, n. <>id. +. See தண்ணீப்பிடிப்பு. (W.) . |
தண்ணீர்ப்பிடிப்பு | taṇṇīr-p-piṭippu, n. <>id. +. 1. Water capacity of a tank ; குளத்திற் கொள்ளும் நீரினளவு. 2. Quantity of water in a tank; 3. Watery condition, as of food, of fruit ; |
தண்ணீர்மட்டம் | taṇṇīr-maṭṭam, n. <>id. +. 1. Water-level ; நீர்மட்டம் என்னுங் கருவி. See தண்ணீர்ப்பிடிப்பு,2. |
தண்ணீர்மாறு - தல் | taṇṇīr-māṟu-, v. intr. <> id. +. To lead water, as from one field to another, from one channel to another; ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நீரை மாற்றிப் பாய்ச்சுதல். (J.) |
தண்ணீர்முட்டான் | taṇṇīr-muṭṭāṉ, n. See தண்ணீர்விட்டான். Vul. . |
தண்ணீர்மேலேற்று - தல் | taṇṇīr-mēl-ēṟṟu-, v. tr. <>தண்ணீர்+. To sentence one to transportation, as sending across the water ; [கடலின்மீது அனுப்புதல்] தீவாந்தர தண்டனை விதித்தல். |