Word |
English & Tamil Meaning |
---|---|
தண்ணீர்வரி | taṇṇīr-vari, n. <>id. +. Water-rate, water-cess; நீரின்பொருட்டு விதிக்கும் வரிவகை. |
தண்ணீர்வாட்டம் | taṇṇīr-vāṭṭam, n. <>id. +. (Arch.) Water-fall, amount of slope required for unobstructed flow of water, gradient ; கட்டடம் முதலியவற்றில் தண்ணிர் தானே யோடுதற்கு அமைந்த சரிவு. தண்ணீர்வாட்டம் சரியாயிராததால் இங்கு ஜலம் தேங்குகின்றது. |
தண்ணீர்வார் - த்தல் | taṇṇīr-vār-, v. <>id. +. intr. 1. To give water for drinking, as to travellers ; வழிச்செல்வோர் முதலாயினோர்க்குத் தாக சாந்தியாக நீர்விடுதல். 2. To give a bath, as to a convalescent; 3. To wash one's hands of, give up, as a person; |
தண்ணீர்விட்டான் | taṇṇīr-viṭṭāṉ, n. <>id. +. Climbing asparagus, m.cl., Asparagus racemoses; கொடிவகை. (பதார்த்த.429.) |
தண்ணீரா - தல் | taṇṇīr-ā-, v. intr. <>id. +. 1. To become watery, diluted; நீர்மயமாய்ப்போதல். 2. To be committed to memory; |
தண்ணீராக்கு - தல் | taṇṇīr-ākku-, v. tr. <>id. +. (w.) 1.To make one pity ; ஒருவனை இரக்கங்கொள்ளும்படி செய்தல். 2. To melt, dissolve, as metals; 3. To dilute, as milk; 4. To get by heart; |
தண்ணீரோது - தல் | taṇṇīr-ōtu-, v. intr. <>id. +. To consecrate water by mantras, for being given to a woman in labour ; பிரசவ வேதனைப்படும் பெண்டிர் முதலியோர்க்குக் கொடுக்கத் தண்ணீரை மந்திரித்தல். (W.) |
தண்ணுமை | taṇṇumai, n. <>தண்ணெனல்2. 1. A kind of drum, one of aka-p-puṟa-muḻavu, q.v.; அகப்புறமுழவுள் ஒன்றாகிய மத்தளம். தண்ணுமைப் பின்வழி நின்றது முழவே (சிலப்.3, 140). 2. A large drum; 3. The hourglass drum; 4. One-headed drum ; |
தண்ணுமையோன் | taṇṇumaiyōṉ, n. <>தண்ணுமை. Drummer in a dancing group; மத்தள ஆசிரியன். (சிலப்.3, 45, உரை.தலைப்பு.) |
தண்ணெனல் 1 | taṇ-ṇ-eṉal, n. <>தண். Expr. of (a) being cool, refreshing; taṇ-ṇ-eṉal, குளிர்ச்சிக்குறிப்பு. குறுகுங்காற றண்ணென்னும் (குறள், 1104): (b). being merciful; |
தண்ணெனல் 2 | taṇ-ṇ-eṉal, n. Onom. expr. of tapping; தட்டுகைக்குறிப்பு. |
தண்ணெனவு | taṇ-ṇ-eṉavu, n. <>தண்+. 1. Being cool or refreshing; குளிர்ந்திருக்கை. 2. Being merciful; |
தண்பணை | taṇ-paṇai, n. <>தண்-மை +. Agricultural tract; மருதநிலம். பெருந்தண்பணைபாழாக (புறநா.16). |
தண்பதம் | taṇ-patam, n. <>id. +. 1. Freshet in a river; புதுப்புனல். தாழ்பொழி லுடுத்த தண்பதப் பெருவழி (சிலப்.10. 32). 2. Festival celebrating the oncoming of freshet in a river; 3. Low condition ; |
தண்பு | taṇpu, n. <>id. [K. taṇpu.] Coldness, coolness; குளிர்ச்சி. தண்பாரு முனதருளை (திருப்பு.368). |
தண்பொருநை | taṇ-porunai, n. <>id. +. The river Tāmpiraparṉi; தாம்பிரபர்ணி நதி. தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191, உரை). 2. The river Ampirāvati ; |
தண்மை | taṇmai, n. 1.Coldness; coolness; குளிர்ச்சி. மதியிற் றண்மை வைத்தோன். (திருவாச.3, 21). 2. Calmness, self-possession, tranquillity of mind, gentleness; 3. Pleasantness, agreeableness ; 4. Slenderness, gentleness; 5. Meanness; inferiority; worthlessness; baseness ; 6. Poorness of yield; 7. Ignorance, shallowness; |
தண - த்தல் | taṇa-, 12 v. intr. 1. To depart, go away ; நீங்குதல். தங்குதீமல நாளுந் தணந்திடும் (பிரமோத்.10, 38). 2. To go; to pass; 3. To put away, remove; 4. To leave, separate from; |
தணக்கம் | taṇakkam, n. <>தணக்கு. See தணக்கு,1. பல்பூந் தணக்கம் (குறிஞ்சிப்.85). . |
தணக்கு | taṇakku, n. 1. Small ach root, s.cl., Morinda umbellata ; நுணா என்னுங் கொடி. (L.) 2. [M. taṇakku.] Whirling nut, m.tr., Gyrocarpus jacquini; 3. False tragacanth. See கோங்கிலவு. 4. Elephant rope tree.See ஓடல்2. 5. Tail; |