Word |
English & Tamil Meaning |
---|---|
தணிவுசுரம் | taṇivu-curam, n. <>id. +. Intermittent fever; முறைச்சுரம். |
தணுப்பு | taṇuppu, n. <>தண். Nā. 1. Chillness; குளிர்ச்சி. 2. Cold; |
தத் 1 | tat, int. [K. tat.] Exclamation meaning tut; அதட்டற்குறிப்பு. Loc. |
தத் 2 | tat, <> tat. adj. That; அந்த. தத்திருப்பதி (திருப்பு.124). --pron. அது. தத்தொமசி (வேதா.சூ.117). |
தத்தக்கபித்தக்கக்குத்துதல் | tattakkapittakka-k-kuttutal, n. A game in which one tries to strike on another's hand and the other draws it back, evading the blow; ஒருவன் மற்றொருவன் புறங்கையிற் குத்தும்போது அந்தக்குத்துக் கைம்மேற்படாமல் அடித்தவனதுகை தரையைத் தாக்கும்படி கையை இழுத்துக்கொள்ளும் ஒருவகை விளையாட்டு. (J.) |
தத்தக்கபித்தக்கவெனல் | tattakka-pittakka-v-eṉal, n. Colloq. Expr. signifying (a) wobbling, as of a child; நடை தளர்தற் குறிப்பு. அவன் தத்தக்கபித்தக்கவென்று நடக்கின்றான். (b) babbling, faltering in speech; |
தத்தகன் | tattakaṉ, n. <>dattaka. Adopted son, son given by his parents to a person who legally adopts him, one of twelve puttiraṉ, q.v.; சுவீகார புத்திரன். |
தத்தங்கொடு - த்தல் | tattaṅ-koṭu-, v. tr. <>தத்தம்+. 1. To give in adoption; சுவீகாரங்கொடுத்தல். (W.) See தத்தம்பண்ணு-. Colloq. |
தத்தஞ்செய் - தல் | tatta-cey-, v. tr. <>id. +. See தத்தம்பண்ணு. புனிதவுன் றனதெனத் தத்தஞ்செய்து (அறப்.சத.6). . |
தத்தடி | tattaṭi, n. <>தத்து- + அடி. Wobbling of a child; குழந்தையின் தளர்நடை. Colloq. |
தத்தபித்தவெனல் | tatta-pitta-v-eṉal, n. See தத்தக்கபித்தக்கவெனல். Loc. . |
தத்தபுத்திரன் | tatta-puttiraṉ, n. <>datta +. See தத்தகன். . |
தத்தம் | tattam, n. <>datta. Gift, offering, etc., given away with water; நீர்வார்த்துக்கொடுக்கும் கொடை. Colloq. |
தத்தம்பண்ணு - தல் | tattam-paṇṇu-, v. tr. <>தத்தம்+. 1.To give away in charity by pouring water into the hands of the recipient ; பொருளைநீர்வார்த்துக் கொடுத்தல். 2. To give oblations to manes with water; 3. To give absolutely, lose entirely without any hope of regaining ; |
தத்தம்மை | tattammai, n. <>தத்தை1 + அம்மை. See தத்தை1. Nā. . |
தத்தயோகம் | tatta-yōkam, n. <>dagdhayōga. Conjunction of a week-day with certain titi, considered inauspicious; தீயயோகங்களுள் ஒன்று. ஆன் பெரியோர் பழமையாய்வந்த நேயமதையகல் தவதே தத்தயோகம் (திருவேங்.சத.39). |
தத்தரசமயம் | tattara-camayam, n. <>தத்தரம்1 +. Pressing occasion, critical moment; நெருக்கடியான நேரம். Colloq. |
தத்தரம் 1 | tattaram, n. 1. [K. tattara.] Tremulousness, quivering; நடுக்கம். Loc. 2. Over-hastiness, flurry; |
தத்தரம் 2 | tattaram, n. perh. tantra. Artfulness, cunning; தந்திரம். செலவுக்குத் தத்தரமாக் கேட்டாள் (விறலிவிடு.755). |
தத்தவோமம் | tatta-v-ōmam, n. <>datta + hōma. An oblation in fire performed at the adoption of a son; பிள்ளையைச் சுவீகாரமெடுக்கும் போது தீவளர்த்துச் செய்யப்படும் ஓமச்சடங்கு . |
தத்தளபஞ்சமம் | tattaḷa-pacamam, n. (Mus.) An ancient melody-type of the marutam class; மருதப்பண்வகை. (பிங்.) |
தத்தளம் | tattaḷam, n. perh. தத்தளி-. Loose or spoiled condition of floor, terrace, etc.; கட்டடத் தளங்களின் நெகிழ்ந்த நிலை. Colloq. |
தத்தளி - த்தல் | tattaḷi-, 11 v. intr. [T. tattarillupadu, K. tattaḷisu.] 1. To struggle for life, to gasp for breath, as drowning person; to be at one's wit's end; to be greatly agitated; ஆபத்தில் அகபட்டுத் திகைத்தல். ஒன்னார்கள் முறையிடத் தத்தளிக்கப் பொரும் (தனிப்பா.355, 84). 2. To be in great straits, as persons in times of drought, famine or epidemic ; |
தத்தளிப்பு | tattalippu, n. <>தத்தளி-. 1. Struggling for life; உயிர் தப்பவேண்டித் திகைக்கை. 2. Perturbation, agitation; |
தத்தன் | tattaṉ, n. <>datta. See தத்தகன். தத்தன் சகோடன் (ஏலா.31). |