Word |
English & Tamil Meaning |
---|---|
தத்தாங்காரமுகம் | tattāṅkāramukam, n. tapta + aṅgāra-mukha. A hell; மகாநரகங்களுள் ஓன்று. (சி.போ.பா.2, 3, பக். 203.) |
தத்தாங்கி | tattāṅki, n. <>தத்து- + prob. aṅga. 1. Clapping of hands by children ; சிறு குழந்தைகள் கைகொட்டுகை. Loc. 2. A girl's game of clapping hands and singing ; |
தத்தாத்திரயன் | tattāttirayaṉ, n. <>Dattātrēya. A sage, son of Atri, considered an incarnation of Viṣṇu; அத்திரியன் புத்திரனும் திருமாலவதாரமுமான ஒரு முனிவன். தத்தாத்திரயனாய்..அத்திரிக்கு நன்மகனென வுதித்து (பாகவ.முதற்.மாயவனமி.26) . |
தத்தாத்திரேயம் | tattāttirēyam, n. <>id. An Upaniṣad, one of 108; அஷ்டோத்தரசதோப நிடதங்களுள் ஒன்று. |
தத்தாத்திரேயன் | tattāttirēyaṉ, n. <>id. See தத்தாத்திரயன். . |
தத்தாத்துமன் | tattāttumaṉ, n. <>datta + ātman. Son self-given, one who offers himself of his own accord to be adopted (R. F.); தானாகவே தத்துப்புகுந்தவன். |
தத்தாபகாரம் | tattāpakāram, n. <>id. + apa-hāra. The sin of taking back what was once given as gift; தானங்கொடுத்ததைத் திரும்ப வாங்குகையாகிய பாவம். |
தத்தாரி | tattāri, n. prob. Persn. tatārī. A wanton, self-willed person, vagabond; கண்டபடி திரிபவ-ன்-ள். Colloq. |
தத்தி 1 | tatti, n. prob. dadhi. Gift; கொடை. (யாழ்.அக.) |
தத்தி 2 | tatti, n. See ததி3. (யாழ்.அக.) . |
தத்திகாரம் | tattikāram, n. perh. tathyadhikkāra. Lie, falsehood; பொய். (பிங்.) |
தத்திதம் | tattitam, n. <>taddhita. (Gram.) Affix forming nouns generally from other nouns; பெரும்பான்மை பெயர்ச்சொல்லின்மேல்வரும் விகுதி. (தொல்.விருத்.முதற்.55.) |
தத்திதன் | tattitaṉ, n. <>id. See தத்திதம். தத்திதன் வேறாமா. (பி.வி.30). . |
தத்திதாந்தம் | tattitāntam, n. <>id. + anta. (Gram.) Nouns formed with the tattitam affix; தத்தித விகுதியைக்கொண்ட பெயர். (பி.வி.29.) |
தத்தியம் 1 | tattiyam, n. <>tathya. Truth; மெய். (யாழ்.அக.) |
தத்தியம் 2 | tattiyam, n. A kind of cloth; துகில்வகை. (சிலப்.14, 108, உரை.) |
தத்தியோதனம் | tatti-y-ōtaṉam, n. <>dadhi + ōdana. A delicious preparation of boiled rice mixed with curds; தயிர்ச்சாதம். Colloq. |
தத்தினம் | tattiṉam, n. <>T. taddinamu. Annual ceremony for the manes; சிராத்தம். |
தத்து - தல் | tattu-, 5 v. intr. 1. [M. tattuka.] To leap, jump, skip, hop; குதித்தல். தத்தாவுறு தடந்தேரினைத் தொடர்ந்தான் (கம்பரா.நிகும்பலை.121). 2. [M. tattuka.] To go by leaps and jumps; to move by jerks and starts, as cockroaches; 3. [M. tattuka.] To jump over; 4. To measure, as in pacing; 5. To be agitated; to heave, shake as water in a jar; 6. To spread; 7. To be emitted, as lustre; |
தத்து 1 | tattu, n. <>தத்து-. [M. tattu.] 1. Springing forward, hopping, moving by jerks, as cockroaches, as cattle tied by the forefeet; தாவி நடக்கை. 2. Anxiety; 3. (Astrol.) Peril, misfortune, critical period of one's life, as shown by the horoscope; 4. Mistake, error; 5. A small opening in a dam thrown across a canal, through which a small quantity of water is allowed to flow during the drought season; |
தத்து 2 | tattu, n. <>dadrū. Blotch, slight swelling, as from the bite of an insect; பூச்சிக் கடியாலாகிய தடிப்பு. Loc. |
தத்து 3 | tattu, n. <>datta. [K. dattu.] 1. Adoption; சுவீகாரம். தத்துக் கொண்டாள்கொலோ தானே பெற்றாள்கொலோ (திவ்.பெரியாழ்.2, 1, 7). 2. See தத்துப்புத்திரன். இவன் அவருக்குத் தத்து. |
தத்துக்கல் | tattu-k-kal, n. <>தத்து- +. Stone obstructing waterfall and making it leap anew; அருவிநீர் தத்திவிழும் கல். (W.) |
தத்துக்கிளி | tattu-k-kiḷi, n. <>id. +. 1.Grasshopper, locust; வெட்டுக்கிளி. (W.) 2. Parrot; 3. Game of leapfrog; |
தத்துப்பத்திரம் | tattu-p-pattiram, n. <>தத்து4 +. Deed of adoption, document evidencing the fact of an adoption; சுவீகாரத்தை உறுதி செய்யும் பத்திரம். Loc. |