Word |
English & Tamil Meaning |
---|---|
தராசுக்குண்டு | tarācu-k-kuṇṭu, n. <>id. +. Weight; நிறைகல். |
தராசுக்கொடி | tarācu-k-koṭi, n. (மலை.) 1. Indian birthwort. See பெருமருந்து. 2. Wild jasmine. |
தராசுக்கோல் | tarācu-k-kōl, n. <>தராசு +. Beam of balance; துலாக்கோல். |
தராசுத்தட்டு | tarācu-t-taṭṭu, n. <>id. +. Scales of a balance; துலாத்தட்டு. |
தராசுநா | tarācu-nā, n. <>id. +. See தராசுமுள். . |
தராசுப்படி | tarācu-p-paṭi, n. <>id. +. See தராசுக்குண்டு. . |
தராசுமுள் | tarācu-muḷ n. <>id. +. Needle or index of a balance; இரண்டு தராசுத்தட்டும் சமமாயுள்ள நிலையைத் தான் சாயாது காட்டி நிற்கும் முள். |
தராசுமுளை | tarācu-muḷai, n. <>id. +. See தராசுமுள். Nā . |
தராசூசி | tarācūci, n. <>id. + ஊசி. See தராசுமுள். (w.) . |
தராதரம் 1 | tarātaram, n. <>dharā-dhara. Mountain; மலை. கடதராதரநிகர் (இரகு. குலமு. 1.) |
தராதரம் 2 | tarā-taram, n. Redupl. of தரம். [K. tarātara, M. tarātaram.] 1. Distinction of rank, place, class or other particulars; ஏற்றத்தாழ்வு. தராதரந் தெரிந்து (திருவிளை. திருமண. 94). 2. Status, position; |
தராதலம் 1 | tarā-talam, n. <>dharā-tala. Earth; பூமி. தராதலமுத லுலகனைத்தும் (கம்பரா. கடிமண. 47). |
தராதலம் 2 | tarātalam, n. <>talātala. A nether-world, fourth of kīḻ-ēḻ-ulakam, q. v.; கீழேமூலகத் தொன்று. (பிங்.) |
தராதிபன் | tarātipaṉ, n. <>dharā + adhi-pa. King; அரசன். |
தராப்புப்பண்ணு - தல் | tarāppu-p-paṇṇu-, v. tr. <>E. draw +. To draw from a bank, as a deposit; பாங்கியிற் போட்டிருந்த வைப்புப் பொருளைத் திரும்பவாங்கிக் கொள்ளுதல். Chcṭṭi. |
தராப்பெடு - த்தல் | tarāppeṭu-, v. tr. <>id. + எடு-. See தராப்புப்பண்ணு-. . |
தராபதி | tarā-pati, n. <>dhara +. King, ruler; அரசன். இவர்குலத் தராபதி காண் (கம்பரா.குலமுறை.1). |
தராய் 1 | tarāy, n. Prob.id. Mound, elevated place; மேட்டுநிலம். தராய்க்கண் வைத்த விலங்கலன்னபோர் (மலைபடு. 460). |
தராய் 2 | tarāy, n. <>திராய். 1. Indian chickweed. See திராய். (சீவக. 2703, உரை.) 2. Hedge hyssop, Herpestis monniera; |
தரி 1 - த்தல் | tari-, 11 v. <>dhr. intr. 1. To stop, stand still, rest; நிலைபெற்று நிற்றல். தரியாதே ஓடாநின்றது. (பு. வெ.11, ஆண்பாற். 7, உரை). 2. To abide; 3. To stand firm; to be firm; 1. To invest, put on, as dress, flowers, etc.; 2. To keep, support, carry; 3. To bear patiently, endure; 4. To control; 5. To remember, bear in mind; 6. To chew; as betel; |
தரி 2 | tari-, n. <>தரி-. Abiding, tarrying, rest; இருப்பு. (J.) |
தரி 3 | tari-, n. <>U. tar. [K. tari.] Wet land, opp. to kuṣki; நன்செய் நிலம். |
தரிகொடு - த்தல் | tari-koṭu-, v. intr. <>தரி +. To allow, give room; இடங்கொடுத்தல். (J.) |
தரிகொள்(ளு) - தல் | tari-koḷ-, v. intr. <>id. +. To become settled, permanent; to abide, rest still; to be fixed, stationary ; இருப்புக்கொள்ளுதல். தரிகொளாது கண்க ணீர்த்ததும்பி (சேதுபு. இராமதீர்.71) . |
தரிசபூரணம் | tarica-pūraṇam, n. See தரிசபூரணமாசம். (திருவிளை. தலவி.9.) . |
தரிசபூரணமாசம் | tarica-pūrana-mācam, n. <>darša-pūrṇamāsa. Sacrifice on the new and full moon days, enjoined by the Vēdas; சுக்கில கிருச்ணபிரதமைகளிற் செய்யும் சிரௌதச்சடங்கு. |
தரிசனபேதி | taricaṉa-pēti, n. <>daršana + bhēdin. See தரிசனவேதி. . |