Word |
English & Tamil Meaning |
---|---|
தள்ளு 2 | taḷḷu, n. <> தள்ளு-. (W.) 1. Pushing, rejecting; அகற்றுகை. 2. Deduction, discount; 3. Dismissal, discharge, banishment, divorce; 4. Abandonment, renunciation, relinquishment; |
தள்ளுண்டவன் | taḷḷuṇtavaṉ, n. <> id. Rejected person, out-caste, reprobate; விலக்கப்பட்டவன். |
தள்ளுதலின்சீட்டு | taḷḷutaliṉ-cīṭṭu, n. <> id. +. Bill of divorcement; விலக்குப்பத்திரம். (w.) |
தள்ளுநூக்குப்படு - தல் | taḷḷu-nūkku-p-paṭu-, v. intr. <> id. +. To be pushed this way and that; இழுபறிப்படுதல். (யாழ். அக.) |
தள்ளுப்புள்ளு | taḷḷu-p-puḷḷu, n. Redupl. of தள்ளு. Scuffle; pushing and pulling; இழுபறி. |
தள்ளுபடி | taḷḷu-paṭi, n. <> id. +. 1. That which is rejected, dismissed, discarded, abandoned, cancelled, refused; தள்ளப்பட்டது. 2. Deduction, discount, allowance; 3. Exception; exemption; |
தள்ளுபடியாகமம் | taḷḷupaṭi-y-ākamam, n. <> id. +. Apocryphal books; விவிலியநூற்பகுதி. Chr. |
தள்ளுமட்டம் | taḷḷu-maṭṭam, n. <> id. +. Young elephant, as having to be pushed forward and guided by the old ones; [பெரிய யானைகளால் தள்ளி நடைபயிற்றப்பெறுவது] யானையின் இளங்குட்டி. (w.) |
தள்ளுமுள்ளு | taḷḷu-muḷḷu, n. See தள்ளுப்புள்ளு. Loc. . |
தள்ளுமெள்ளு | taḷḷu-meḷḷu, n. See தள்ளுப்புள்ளு. (W.) . |
தள்ளுவண்டி | taḷḷu-vaṇṭi, n. <> தள்ளு-+. Wheelbarrow, perambulator; கையால் தள்ளிச்செலுத்தும் சிறு வண்டி. |
தள்ளுறு - தல் | taḷ-ḷ-uṟu-, v. intr. <> id. +. 1. To be rejected, removed; தள்ளப்படுதல். 2. To be in distress; |
தள்ளை | taḷḷai, n. [T. talli, M. taḷḷa.] Mother; தாய். (தொல். சொல். 400, உரை.) |
தளகர்த்தம் | taḷakarttam, n. <> தளகர்த்தன். Office of commander; படைத்தலைமை. மைசூரான் வாசல் தளகர்த்தம் கம்பணவுடையார் (மதுரைத்திருப். மதுரைத்தல. பக். 2). |
தளகர்த்தன் | taḷa-karttaṉ, n. <> daḷa+kartr. Captain, general, marshal, commander-in-chief; படைதலைவன். காலமுந் தன்பலமு மெண்ணியிகல் வென்றிடக் கருதுவோன் றளகர்த்தனாம் (திருவேங். சத. 8). |
தளகருத்தா | taḷa-karuttā, n. <> id. + kartā. nom. sing. of kartr. See தளகர்த்தன். . |
தளசிங்கம் | taḷa-ciṅkam, n. <> id. +. A valiant soldier, as a lion in battle; [போர்க்களத்திற் சிங்கம்போன்றவன்] பெருவீரன். தளசிங்க மன்னநும் வீரம் (பிரபோத. 24, 28). |
தளதள - த்தல் | taḷataḷa-, 11 v. intr. [T. talatala, k. taḷataḷa.] 1. To be plump, full, sleek, as the body; புஷ்டியாதல். 2. To be brilliant, transparent; 3. cf. தளர்-. To become loose, as a cloth worn upon the person; |
தளதளப்பு | taḷataḷappu, n. <> தளதள-. 1. Being plump or full, as the face; புஷ்டி. 2. Brilliance; 3. Swelling; |
தளதளெனல் | taḷataḷeṉal, n. <> தளதள-. Expr. of (a) being brilliant; ஒளிவீசுதற் குறிப்பு: (b) being plump; (c) melting, as gold; (d) bubbling, as boiling water; |
தளப்படி | taḷappaṭi, n. <> தளம்பு-. Agitation of mind, wavering, anxiety; மனவுலைவு. (J.) |
தளப்பம் 1 | taḷappam, n. <> id. 1. See தளப்படி. தளப்பந்தீருமிறே இவர்க்கு (ஈடு, 6, 10, 1). 2. An ear-ornament; |
தளப்பம் 2 | taḷappam, n. prob. tāla. South Indian talipot-palm. See தாளிப்பனை. (W.) |