Word |
English & Tamil Meaning |
---|---|
தளர்நடை | taḷar-naṭai, n. <> id. +. Tottering walk, wobbling, as of a child; ஆரம்பத்தில் குழந்தைகள் தடுமாறி நடக்கும் நடை. தளர்நடை தாங்காக் கிளர்பூட் புதல்வரை (மணி. 3, 141). |
தளர்பாடம் | taḷar-pāṭam, n. See தளபாடம். (யாழ். அக.) . |
தளர்வு | taḷarvu, n. <> தளர்-. 1. Growing slack, relaxing; நெகிழ்கை. 2. Staggering; 3. Faintness, weakness; depression of spirits; 4. Sorrow; |
தளவட்டம் | taḷa-vaṭṭam, n. <> dala + vrita. Corolla; பூவிதழ்ச்சுற்று. |
தளவடாம் | taḷa-vaṭām, n. <> id. + vaṭaka. Thin rice-cake. See இலைவடகம். Loc. |
தளவம் | taḷavam, n. prob. id. 1. Golden jasmine. See செம்முல்லை. முல்லையொடு தளவமலருதிர (ஐங்குறு. 422). 2. Arabian jasmine. |
தளவரிசை | taḷa-varicai, n. <> sthala +. 1. Flooring, pavement; கற்பரப்பு. 2. Lower moulding; |
தளவாடம் | taḷavāṭam, n. <> M. taḷavāṭam. Tools, materials, requisites, tackle, furniture; வேலைசெய்தற்கு வேண்டிய கருவி முதலியன. |
தளவாய் | taḷa-vāy, n. prob. தளம்3+வாய். [T. daḷavāyi, K. dalavāy.] Military commander, minister of war; படைத்தலைவன். ஒன்ன லரைவென்று வருகின்ற தளவாய் (திருவேங். சத. 89) . |
தளவான் | taḷavāṉ, n. See தளவாய். வெற்பது தளவான் (இரகு. நகர.13). . |
தளவிசை | taḷa-vicai, n. <> தளம்2+¢வரிசை. See தளவரிசை. அடையவளைஞ்சான் தளவிசை படுப்பித்தார் (S. I. I. i, 84). |
தளவியை | taḷaviyai, n. See தளவரிசை. (யாழ். அக.) . |
தளவு 1 | taḷavu, n. cf. tālu. Elephant's mouth; யானையின் வாய். (பிங்.) |
தளவு 2 | taḷavu, n. prob. dala. 1. Golden jasmine. See செம்முல்லை. பனப்பூந் தளவொடு முல்லை பறித்து (கலித். 108, 42). 2. Arabian jasmine. 3. Eared jasmine. |
தளா | taḷā, n. See தளவு. யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவம் (தொல். எழுத். 229). |
தளி 1 - த்தல் | taḷi-, 11 v. [K. taḷi.] intr. To drip, as rain; துளித்தல். நுண்மழை தளித்தென (ஐங்குறு. 328).-tr. 1. To smear, as sandal; 2. To sprinkle; |
தளி 2 | taḷi, n. <> தளி1-. 1. Drop of water, rain drop; நீர்த்துளி.தளிபொழி தளிரன்ன (கலித். 13). 2. First shower of rain; 3. Cloud; 4. Coolness; |
தளி 3 - தல் | taḷi-, 4 v. tr. prob. தெளி-. To comprehend clearly; தெளிதல். ஆதிப்பிரானைத் தளிந்தவர்க்கல்லது தாங்கவொண்ணாதே (திருமந். 527). |
தளி 4 | taḷi, n. perh. sthalī. [K. taḷi, M. taḷi.] 1. Temple, sacred shrine; கோயில். காமர்சாலை தளிநிறுமின் (சீவக. 306). 2. Place, room; |
தளி 5 | taḷi, n. <> sthālī. 1. Oil-vessel of a lamp; விளக்குத் தகழி. 2. Lamp-stand; |
தளிகை 1 | taḷikai, n. <> id. 1. [T. taliga, K. talige, M. taḷika.] Eating-plate, platter; உண்கலம். தளிகை பஞ்சவன்மாதேவி என்னுந் திருநாமமுடையது (S. I. I. ii, 211). 2. Cooking; 3. A certain quantity of boiled rice offered to idols in temples; 4. Solidified porridge; |
தளிகை 2 | taḷikai, n. perh. sthalī. Bookstand; பீடம். பொன்னின் றளிகை மிசைவைத்து (திருவிளை. திருமுகம். 24). |
தளிகைசமர்ப்பி - த்தல் | taḷikai-camarppi-, v. intr. <> தளிகை1+. Vaiṣṇ. 1. To take boiled rice, etc., for offering to idols ; நிவேதனத்தின் பொருட்டு அன்னமுதலியவற்றைக் கொணர்ந்து வைத்தல். 2. To offer boiled rice to idols; 3. See தளிகைவிடு-. |
தளிகைவடாம் | taḷikai-vaṭām, n. <> id. +. Thin rice-cake. See இலைவடகம். |
தளிகைவிடு - தல் | taḷikai-viṭu-, v. intr. <> id. +. To offer flavoured rice to idols in temples; கோயிலில் சித்திரான்னம் நிவேதித்தல். Vaiṣṇ. |
தளிச்சேரி | taḷi-c-cēri, n. <> தளி4+. Street of the dancing-girls attached to a temple; தேவதாசிகள் வசிக்குந் தெரு. தெற்குத் தளிச்சேரித் தென் சிறகு. (S. I. I. ii, 261). |