Word |
English & Tamil Meaning |
---|---|
தளை 4 - த்தல் | taḷai-, 11 v. intr. <> தள onom. To boil, bubble; கொதித்தல். சாதந் தளைக்கிறது. Loc. |
தளைக்காணம் | taḷai-k-kāṇam, n. A kind of tax; வரிவகை. (Insc.) |
தளைதள் - தல் [தளைதட்டல்] | taḷai-taḷ-, v. intr. <> தளை+. To fail or be defective in the taḷai connection of a verse; வேறு தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல். வேற்றுத்தளை தட்டுக் குறள்வெண்பாவிற் சிதைந்து (யாப். செய். 6, உரை). |
தளைந்துவிடு - தல் | taḷaintu-viṭu-, v. tr. <> தளை1-+. To tie together the forefeet of an animal and let it out to graze; விலங்கின் முன்காலைக் கட்டி மேய்ச்சலுக்கு விடுதல். |
தளைநார் | taḷai-nār, n. <> தளை2-+. Footbrace for a tree-climber; பனையேறிகள் காலில் மாட்டிக்கொள்ளுங் கயிறு. (J.) |
தளைப்படு - தல் | taḷai-p-paṭu-, v. intr. <> தளை+. See தளைபடு-. . |
தளைபடு - தல் | taḷai-paṭu-, v. intr. <> id.+. 1. To be imprisoned, taken captive; சிறையாதல். (பிங்.) 2. To be bound, confined, restrained; |
தளைபோடு - தல் | taḷai-pōṭu-, v. tr. <> id. +. To put up ridge, as in a field; குறுக்காக வரப்பிடுதல்; Loc. |
தளையம் | taḷaiyam, n. <> id. Bonds, fetters; விலங்கு. இளையவர் நெஞ்சத் தளையம் (திருப்பு. 303). |
தளையல் | taḷaiyal, n. <> தளை1-. 1. Binding, tying; கட்டுகை. 2. Confining, restraining; |
தளையவிழ் - தல் | taḷai-y-aviḻ-, v. intr. <> தளை+. 1. To be unbound, released from restraint; பந்தம் நீங்குதல். 2. To blossom, as a flower; |
தளையன் | taḷaiyaṉ, n. <> id. Headman of certain castes, viz., Maṟavaṉ, Kuyavaṉ, Cāṉṟār; மறவன், குயவன், சான்றார் சாதிகளின் தலைவன். (J.) |
தளையாளர் | taḷai-y-āḷar, n. <> id. +. Those who are fettered in chains, prisoners; காலில் தளையிடப்பட்டவர். தளையாளர் தாழ்ப்பாளர் (ஏலாதி, 56). |
தளையிடு - தல் | taḷai-y-iṭu-, v. tr. <> id. +. To enchain, fetter; பிணித்தல். வினைத்தடையாறறளையிட்டு (தாயு. பாயப்புலி. 55). |
தளைவார் | taḷai-vār, n. <> தளை2-+. 1. Leather thong binding the feet of an animal; விலங்கின் கால்களைக்கட்டும் வார். 2. See தளைநார். |
தளைவை - த்தல் | taḷai-vai-, v. tr. <> தளை+. To invest with the office of Uṭaiyār; உடையார் உத்தியோகங் கொடுத்தல். (J.) |
தற்கம் | taṟkam, n. <> tarka. Disputation. See தருக்கம். தற்கச் சமணரும் (திவ். இராமநுச. 99). |
தற்கரன் | taṟkaraṉ, n. <> taskara. Thief, robber; திருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தி யந்தன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 30). |
தற்கரிசனம் | taṟ-karicaṉam, n. <> தன்+கரிசனம்3. Self-interest; சுயநலம். (W.) |
தற்கா - த்தல் | taṟ-kā-, n. <> id. +. intr. To take care of oneself, protect oneself; To preserve, protect; தன்னைத் தான்காத்தல். தற்காத்துத் தற்கொண்டாற் பேணி (குறள், 56).--tr. பாதுகாத்தல். நீயென்னைத் தற்காத்தருள் (இராமநா. உயுத்.14). |
தற்காத்தற்கடுதாசி | taṟ-kāttaṟ-kaṭutāci, n. <> தற்கா-+. Letter of information; அறிவிப்புக் காகிதம். (யாழ். அக.) |
தற்காப்பு | taṟ-kāppu, n. <> id. +. Self-protection; தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுகை. |
தற்காலகிரகநிலை | taṟkāla-kiraka-nilai, n. <> தற்காலம்+. Planetary positions at a given time; குறித்த காலத்துள்ள கிரகங்களின் நிலை. |
தற்காலசுத்தபுடம் | taṟkāla-cutta-puṭam, n. <> id. + šuddha + sphuṭa. True or geocentric longitude of a planet at a given time; குறித்த காலத்தில் உள்ள பூமத்திய கிரகநிலை. (w.) |
தற்காலம் | taṟ-kālam, n. <> tat-kāla. 1. Present time; நிகழ்காலம். தற்காலமதை நோவனோ (தாயு. பரிபூரண.7). 2. Exact or precise time of an action or occurrence; |