Word |
English & Tamil Meaning |
---|---|
தற்காலமத்திமம் | taṟkāla-mattimam, n. <> id. +. Mean longitude at a given time; ஸம்ஸ்காரஞ் செய்யப்பெறாத மத்திமகதி கிரகநிலை. (w.)` |
தற்காலி - த்தல் | taṟkāli-, 11 v. intr. <> id. (Astron.) To correct the data of calculation for a given time; குறித்தகாலத்திற்குக் கணனோபகரணங்களைப் பரிஷ்கரித்தல். |
தற்காவல் | taṟ-kāval, n.<> தன் +. (சங். அக.) 1. See தற்காப்பு. . 2. Chastity |
தற்கி - த்தல் | taṟki-, 11 v. tr. <> tarka. See தருக்கி-. (w.) . |
தற்கித்துக்கேள் - தல்[தற்கித்துக்கேட்டல்] | taṟkittu-k-kēḷ-, v. tr. <> தற்கி-+. To cross-examine; குறுக்குவிசாரணை செய்தல். (J.) |
தற்கிழமை | taṟ-kiḷamai, n. <> தன்+. (Rhet.) Inseparable relation, as of an object with its parts, qualities, actions, etc., opp. to piṟitiṉ-kiḷamai; ஒரு பொருளுக்கும் அதன் சினைகுணம் செயல் முதலியவற்றிற்கும் உள்ளதுபோலப் பிரியாதிருக்குஞ் சம்பந்தம். (நன். 300.) |
தற்கு | taṟku, n. <> தருக்கு. Pride, haughtiness; செருக்கு. தற்கினான் மடிந்தார் (பாரத. கீசக.103). |
தற்குணம் | taṟ-kuṇam n. <> tad-guṇa. 1. Peculiarity, special attribute or quality; விசேட குணம். 2. (Rhet.) Figure of speech in which an object is described as taking over the quality of another object; |
தற்குறி | taṟkuṟi, n. <> தன் +. Colloq. 1. Signature-mark of an illiterate person; எழுதத்தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல். 2. Illiterate person; |
தற்குறிப்பு | taṟ-kuṟippu, n. <> id. +. See தற்குறிப்பேற்றம். . 2. See தற்குறி, 1. (w.) |
தற்குறிப்பேற்றம் | taṟkuṟippēṟṟam, n. <> தற்குறிப்பு+ஏற்றம். (Rhet.) A figure of speech in which the qualities and functions of an object are ascribed to another object entirely different in nature ; பொருளிடத்து இயல்பாகநிகழுந்தன்மையை யொழித்துக் கவிஞன் வேறொருவகையை ஏற்றிச்சொல்லும் அணி. (தண்டி.55.) |
தற்குறிமாட்டெறி - தல் | taṟkuṟi-māṭṭeṟi-, v. intr. <> தற்குறி+. To affix signature-mark, as an illiterate person; கல்வியில்லாதவன் கையெழுத்துக்குப் பிரதியாகத் தன் அடையாளக்குறி இடுதல். கண்டராதித்தப் பல்லவதரையன் தற்குறிமாட்டெறிந்தேன் (S. I. I. v, 105). |
தற்குறைச்சல் | taṟ-kuṟaiccal, n. <> தன்+. (யாழ். அக.) 1. Self-abasement; குறைவு. 2. Diminution in size, reduction; |
தற்கெலம் | taṟ-kelam, n. prob. id.+khila. Poverty; வறுமை (அக. நி.) |
தற்கேடர் | taṟ-kēṭar, n. <> id. +. Persons who ruin themselves unknowingly; அறியாது தமக்கே கேடுவிளைப்பவர். தலைகெடுத்தோர் தற்கேடர்தாம் (திருவருட். அருளதுநிலை. 7). |
தற்கொண்டான் | taṟ-koṇṭāṉ, n. <> id. +. Husband; கணவன். தற்கொண்டாற் பேணி. (குறள், 56). |
தற்கொலை | taṟ-kolai, n. <> id. +. Suicide; தன்னுயிரைத் தானே மாய்த்துக்கொள்ளுகை. |
தற்கோலம் | taṟ-kōlam, n. <> kakkōla. Cubebs chewed with betel; தாம்பூலத்துடன் உட்கொள்ளும் வால்மிளகு. தற்கோலமென்ற களிவாயை. (மறைசை. 56). |
தற்சங்கை | taṟ-caṅkai, n. <> தன்+¢saṅga. Self-love; தன்னிடத்துள்ள பற்று. கருமங் குலத்திறம் தற்சங்கைவிட்டு (மருதூரந். 48). |
தற்சணம் | taṟcaṇam, adv. <> tat + kṣaṇa. At once; உடனே. (யாழ். அக.) |
தற்சமம் | taṟ-camam, n. <> id. + sama. Loan-words from Sanskrit occurring in Tamil without any change in sound; ஒலி மாறுபாடின்றித் தமிழில் வழங்கும் ஆரியச்சொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே. (பி. வி. 2). |
தற்சமயம் | taṟ-camayam, <> id.+. n. 1. Particular juncture, exact moment required; குறித்தவேளை. (W.) 2. Best opportunity, favourable juncture; At present; |
தற்சனி | taṟcaṉi, n. <> tarjanī. Forefinger; சுட்டுவிரல். சிறுவிர றன்னி னின்றுந் தற்சனியளவும் (காசிக. சிவச. அக்கினி, 22). |
தற்சாட்சி | taṟ-cāṭci, n. <> தன் +. (W.) Self-evidence; ஆன்மசாட்சி. 2. Universal soul; |
தற்சிவம் | taṟ-civam, n. <> id. +. (šaiva.) Absolute Being, as self-existent; முதற்கடவுள். (W.) |