Word |
English & Tamil Meaning |
---|---|
தற்பு 1 | taṟpu, n. <> id. Real nature; உள்ள நிலமை. தற்பென்னைத் தானறியானேலும் (திவ். இயற். நான்முக. 77). |
தற்பு 2 | taṟpu, n. <> darpa. Arrogance; கருவம். ஆற்றாமையாலே தற்பற்றிருக்கிறவராகை யாலே (ஈடு, 9, 9, ப்ர.) |
தற்புகழ்ச்சி | taṟ-pukaḻcci, n. <> தன்+. Self-praise, self-complacency; தன்னைத்தான் புகழ்ந்து கொள்கை. |
தற்புணர்ச்சி | taṟ-puṇarcci, n. <> id. +. Onanism அஸ்தப்பிரயோகம். (W.) |
தற்புருடசமாசம் | taṟpuruṭa-camācam, n. <> tatpuruṣa + samāsa. (Gram.) A compound in which the first member stands in case-relation to the second; வேற்றுமைத்தொகை. (வீரசோ. தொகை. 2, உரை.) |
தற்புருடம் | taṟpuruṭam, n. <> tatpuruṣa. A face of šiva which is turned eastward, one of civaṉ-ai-m-mukam. q.v.; சிவனைம்முகத்துள் கிழக்கு நோக்கியிருப்பது. (சைவச. பொது. 334.) |
தற்புருடன் | taṟpuruṭaṉ, n. <> id. (Gram.) See தற்புருடசமாசம். தற்புருடன் பலநெற் கன்மதாரயம் (வீரசோ. தொகை. 2). |
தற்புருஷம் | taṟpuruṣam, n. <> id. See தற்புருடம். கோர தற்புருஷவீசான (பரத. இராக.16). |
தற்பொருட்டுப்பொருள் | taṟ-poruṭṭu-p-poruḷ, n. <> தன் +. Reflexive meaning; வினைப்பயன் கருத்தாவைச் சார்தலாகிய பொருள். கொள் என்பது தற்பொருட்டுப் பொருட்கண்வந்த விகுதி. (சி. போ. பா.1, 1, பக். 56). |
தற்பொழிவு | taṟ-poḻivu, n. <> id. +. Self interest; தன்னலம் |
தற்போதம் | taṟ-pōtam, n. <> tat + bōdha. 1. Self-knowledge, knowledge of the soul and deity; தன்னையுங் கடவுளையு மறியும் அறிவு. (W.) 2. Intuitive knowledge, inherent and eternal knowledge, as possessed by the deity; 3. Self-conceit, arrogance; 4. Conciousness; |
தற்றெரிசனிகள் | taṟṟericaṉikaḷ, n. <> தன் + daršana. Self-realised sages; ஆன்மதரிசனம் செய்த பெரியார். (நெஞ்சுவிடு. உரை, பக்.14.) |
தறக்கதி | taṟakkati, n. Fig; அத்தி. (சங். அக.) |
தறடிகம் | taṟaṭikam, n. perh. dādima. Pomegranate; மாதுளை. (சங். அக.) |
தறதற - த்தல் | taṟa-taṟa-, 11 v. intr. To make the sound taṟa-taṟa; தறதற என்று ஒலித்தல். (யாழ். அக.) |
தறதறெனல் | taṟataṟeṉal, n. Onom. expr. signifying the sound caused by the discharge of watery stools, breaking wind, boiling, etc., வயிற்றுப்போக்கு வாயுபரிகை இவற்றால் ஏற்படும் ஒலிக்குறிப்பு (யாழ். அக.) |
தறளி | taṟaḷi, n. 1. Sea-fish, silvery, attaining 9 in. in length. Opisthopterus tartoor; வெண்ணிறமும் ஒன்பது அங்குலநீளமுமுள்ள கடல்மீன் வகை; 2. Sea-fish, light bronze with dark bluish band, Raconda russelliana; |
தறி - த்தல் | taṟi-, 11 v. tr. of. trd. 1. [K. taṟi, M. taṟikka.] To lop, chop off, cut off, cut down; வெட்டுதல். கையைத் தறித்தான் (திருவாச. 14, 7). 2. To unite, unfasten; 3. To frustrate, ruin; 4. To separate; 5. To sift by a winnowing fan; |
தறி - தல் | taṟi-, 4 v. intr. <> தறி1-. To be cut off, broken; அறுபடுதல். வாலுங் காலுந் தறிந்து (இராமநா. உயுத். 27). |
தறி | taṟi, n. <> தறி1-. [K. M. taṟi.] 1. Cutting down, chopping off; வெட்டுகை. 2. Wooden post, stake; 3. Pillar, column; 4. Peg; 5. Weaver's loom; 6. Drum-stick; 7. A kind of axe; 8. Button-hook, clasp of thread or metal; |
தறிக்கடமை | taṟi-k-kaṭamai, n. <> தறி+. Tax on looms; நெசவுத்தறிகட்கு இட்ட வரி. (R. T.) |
தறிக்கால் | taṟi-k-kāl, n. <> id. +. 1. Artificial channel in a betel garden; கொடிக்காற் கால்வாய். (W.) 2. An element in ārūṭam necessary for divination; |
தறிக்கிடங்கு | taṟi-k-kiṭaṅku, n. <> id. +. Weaver's loom-pit; நெசவுத்தறியின் கீழுள்ள பள்ளம். (யாழ். அக.) |