Word |
English & Tamil Meaning |
---|---|
தறிக்கிடை | taṟi-k-kiṭai, n. <> id. +. Thrum in a weaver's loom, fringe of threads in a loom; நெசவுத்தறியில் புதிய பாவைப் பிணைப்பதற்காக அச்சில் சுற்றியிருக்கும் மிகுதிநூல். Loc. |
தறிகிடங்கு | taṟi-kiṭaṅku, n. <> தறி2-+. Place where juice is expressed from sugarcane; கரும்பின் ஆலைக்கிடங்கு. (யாழ். அக.) |
தறிகுற்றி | taṟi-kuṟṟi, n. <> id. +. A log wood on which green manure is chopped; வயலுக்கு உரமாகவிடும் தழைகளைத் தறிக்கநாட்டும் கருவி. Nā. |
தறிகை 1 | taṟi-kai, n. <> தறி1-. 1. Being cut down; வெட்டப்படுகை. (w.) 2. Stake, post; |
தறிகை 2 | taṟikai, n. <> தறி2-. 1. A kind of axe; கோடரி. மழு வென்றது வாய்ச்சியை; தறிகையுமாம் (புறநா. 206, உரை). 2. Chisel; |
தறிச்சன் | taṟiccaṉ, n. Madar; எருக்கு. (சங். அக.) |
தறிதலை | taṟi-talai, n. perh. தறி1-. Impudent, unruly person; அடங்காதவன். Loc. |
தறிதளை | taṟi-taḷai, n. <> தறி+. See தறிக்கடமை. (T. A. S. iv, 91.) . |
தறிப்புடவை | taṟi-p-puṭavai, n. <> id. +. Tax on looms; ஒரு பழைய நெசவு வரி. தறிப்புடவையும் வேலைக்காசும் (S. I. I. iii, 115). |
தறிபடுகு | taṟi-paṭuku, n. <> id. + T. padugu. Warp of a loom; தறியின் நெட்டிழை. (C. G.) |
தறிபோடு - தல் | taṟi-pōṭu-, v. intr. <> id. +. To weave cloth in a loom; நெசவுத்தறியில் நெய்தல். (W.) |
தறிமரம் | taṟi-maram, n. <> id. +. Web beam, wooden revolving bar round which the woven cloth is wound; நெசவுத்தறியில் ஆடைசுருட்டும் மரம். Loc. |
தறியறை - தல் | taṟi-y-aṟai-, v. intr. <> id. +. To drive down stakes; முளையறைந்து நாட்டுதல். Loc. |
தறியாணி | taṟi-y-āṇi, n. <> தறி2-+. Small chisel for cutting iron; வெட்டிரும்பு. (W.) |
தறியிறை | taṟi-y-iṟai, n.<> தறி+. See தறிக்கடமை. தறியிறை தட்டார்பாட்டம் (Insc.) |
தறிவலை | taṟi-valai, n. <> id. +. A kind of net for trapping deer; நடுதறி¢யுடையதாய் மான் பிடிக்க உதவும் வலை. தறிவலை மானிற்பட்டார் (சீவக. 2768). |
தறிவிலைவில் - தல் [தறிவிலைவிற்றல்] | taṟi-vilai-vil-, v. intr. <> id. +. To sell palmyra timber; பனைச்சட்டம் விற்றல். (J.) |
தறு - தல் | taṟu-, 6 v. tr. [M. taṟuka.] 1. To wear tightly, as a cloth; இறுக உடுத்துதல். தெய்வ மடிதற்றுத் தான்முந் துறும் (குறள். 1023). 2. To fasten; |
தறுக்கணி - த்தல் | taṟukkaṇi-, 11 v. intr. prob. தறுகண். (w.) 1. To be hard, as fruits not naturally matured or knots in fruits caused by injury; பழங் கன்றிப்போதல். 2. To become hard, as some boils or the flesh after a blow; 3. To grow hard, as vegetables in curry by defective cooking; 4. To continue; to stay, as in a place; |
தறுகட்பம் | taṟu-kaṭpam, n. <> id. See தறுகண், 2 தருகட்ப மில்லார்பின் சென்று நிலை (அறநெறி.102). |
தறுகண் | taṟu-kaṇ, n. <> தறு-+. 1. Cruelty, hard-heartedness; கொடுமை. தறுகட் டகையரிமா (பு. வெ. 7, 20). 2. Valour, bravery, fearlessness; 3. Slaughtering; |
தறுகண்ணன் | taṟu-kaṇṇaṉ, n. <> id. +. 1. Cruel, hard-hearted person; வன்கண்மையுள்ளவன். எரியுமிழ் தறுகணர் (கம்பரா. அதிகாயன். 138). 2. Soldier, hero; |
தறுகண்மை | taṟu-kaṇmai, n. <> id. +. See தறுகண். (பு. வெ. 3, 20 கொளு.) . |
தறுகணாட்டி | taṟukaṇ-āṭṭi, n. <> தறுகண்+. Fem. of தறுகணாளன். See தறுகணி. . |
தறுகணாளன் | taṟukaṇ-āḷaṉ, n. <> id. +. See தறுகண்ணன். தருகணாளர் கண்டனர் (கம்பரா. நாகபாச.174). தானைத் தறுகணாளர் (திவா.). |
தறுகணி | taṟu-kaṇi, n. <> id. Fem. of தறுகண்ணன். Cruel, hard-hearted woman; வன்கண்மையுள்ளவள். தமரினுள்ளவள்போற் சார்ந்த தறுகணி. (விநாயகபு. 80, 92). |
தறுகு - தல் | taṟuku-, 5 v. intr. 1. To be hindered, checked; தடைப்படுதல். அப்பாற்றறுகி (பணவிடு. 242). 2. To be frustrated; to fail; 3. To stammer in speaking; 4. To linger, loiter; |
தறுகுறும்பன் | taṟukuṟumpaṉ, n. <> தறுகுறும்பு. (w.) 1. Rough, rude, uncivil person, rustic; முரடன். 2. Wicked fellow, miscreant; |