Word |
English & Tamil Meaning |
---|---|
தறுகுறும்பு | taṟu-kuṟumpu, n. <> தறு-+. (J.) 1. Roughness of disposition, rusticity; முருட்டுத்தன்மை. 2. Mischief; |
தறுசு | taṟucu, n. perh. தறி3. Fine texture of cloth; இழைக்குளிர்த்தி. (யாழ். அக.) |
தறுதலை | taṟu-talai, n. <> தறி2-. See தறிதலை. தாயில்லாத பிள்ளை தறுதலை. (சங். அக.) |
தறுதலையன் | taṟu-talaiyaṉ, n. <> id. +. See தறிதலை. (W.) . |
தறுதும்பன் | taṟu-tumpaṉ, n. <> id. +. See தறிதலை. (W.) . |
தறுதும்பு | taṟu-tumpu, n. See தறுகுறும்பு. (யாழ். அக.) . |
தறும்படி - த்தல் | taṟumpaṭi-, v. intr. <> தறும்பு+. To build a dam; ¢நீரைப்பிரித்தற்கு அணையிடுதல். (W.) |
தறும்பு | taṟumpu, n. [K. taṟumbu.] 1. Dam to stop a stream and turn it in a different direction; ஒருவழியாய்ச்செல்லும் நீரை வேறுவழியிற் செலுத்தக் கட்டும் அணை. (W.) 2. Peg; |
தறுவாய் | taṟu-vāy, n. prob. தறு-+. [T. taruvāya, K. taṟuvāy.] 1. Occasion, particular juncture, crisis, rare opportunity; உற்றசமயம். 2. Stage, as in life; |
தறுவி | taṟuvi, n. <> darvī. Ladle. See தருவி. (பிங்.) . |
தறுவு - தல் | taṟuvu-, 5 v. intr. To diminish; குறைதல். (யாழ். அக.) |
தறுனல் | taṟuṉal, n. Vang, rope to steady the peak of a gaff; கப்பற்பாயின் மேற்கட்டையைக் கட்டுங் கயிறு. Naut. |
தறை - தல் | taṟai-, 4 v. tr. 1. To beat down flat; to hammer, as the head of a nail or the end of a bolt after fixing on the nut; to rivet; ஆணியை அடித்து இறுக்குதல். (J.) 2. To fasten tow beams or rafters together by hammering in spikes; 3. To make an accusation, commonly false; To become flat; to be flattened; |
தறை | taṟai, n. perh. தறு-. cf. dharā. Land, ground. See தரை. பிள்ளைகள் தறையிற் கீறிடில் (கம்பரா. சிறப்.10). |
தறைமலர் | taṟai-malar, n. <> தறை-. Nut of a bolt; ஆணியின் மரை. (w.) |
தறையடி - த்தல் | taṟai-y-aṭi-, v. tr. <> தறை+. To be nailed down, fixed to a place; நிலத்தில் அசையாமல் இருத்துதல். தறையடித்தது போற் றீராத் தகையவித்திசைகடாங்குங் கறையடிக்கு (கம்பரா. வாலிவ.143). |
தறையாணி | taṟai-y-āṇi, n. <> தறை-+. A kind of spike; ஆணிவகை. (w.) |
தன் | taṉ, pron. <> தான். Oblique case-form of the pronoun tāṉ; தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு. |
தன்கடையே | taṉ-kaṭai-y-ē, adv. <> தன்+. Of itself, of its own accord, voluntarily; தன்னடைவே. அதைத் தன்கடையே அறுந்துவிழச் செய்வாரோ (குருபரம். 62). |
தன்காரியப்புலி | taṉ-kāriya-p-puli, n. <> தன்காரியம்+. Extremely selfish person; சுவகாரியத்திலேயே ஈடுபட்டவன். (W.) |
தன்காரியம் | taṉ-kāriyam, n. <> தன்+. One's own pursuit. self-interest; சொந்தக் காரியம். (W.) |
தன்கு | taṉku, n. prob. தனகு. Hilarity, mirth; மகிழ்ச்சி. (இலக். அக.) |
தன்குலம்வெட்டி | taṉ-kulam-veṭṭi, n. <> தன்+. Handle of an axe, as destroying its own family; [தன்குலத்தை அழிப்பது] கோடரிக் காம்பு. (W.) |
தன்குறியிடுதல் | taṉ-kuṟi-y-iṭutal, n. <> id. +. Coining technical names, a utti; தானே குறியிட்டாளுதலாகிய உத்திவகை. (மாறனலங். பாயி. 25.) |
தன்குறிவழக்கமிகவெடுத்துரைத்தல் | taṉ-kuṟi-vaḻakkamika-v-eṭutturaittal, n. <> id. +. (Gram.) Author's constant use of technical terms and phrases coined by himself, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டுத்திகளில் தான் உண்டாக்கிய குறியீட்டைத் தன் நூலில் மிகுதியும் எடுத்தாளும் தந்திர உத்தி. (நன்.14.) |
தன்கொண்டி | taṉ-koṇṭi, n. <> id. +. Self-will; தன்னிட்டம். (W.) |
தன்கோட்கூறல் | taṉ-kōṭ-kūṟal, n. <> id. +. Enunciating new doctrines professed by oneself; முன்னூலாசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை. (மாறனலங். பாயி. 25.) |
தன்தரை [தன்றரை] | taṉ-tarai, n. <> id. +. 1. Bare ground; வெறுந்தரை. கோட்டையைத் தன்தரையாக இடித்துவிட்டார்கள். 2. Natural earth-surface; |