Word |
English & Tamil Meaning |
---|---|
தன்தரையாக்கு - தல் [தன்றரையாக்குதல்] | taṉ-tarai-y-ākku-, v. tr. <> தன்தரை+. To raze to the ground, demolish completely, as a building; தரைமட்டமாக இடித்தல். கட்டடத்தைத் தன்தரையாக்கிவிட்டார்கள். |
தன்தரையில்நில் - தல் [தன்றரையினிற்றல்] | taṉ-taraiyil-nil-, v. intr. <> id. +. Lit., to stand on bare ground. To suffer from dire want; to be destitute; [வெறுந்தரையில் நிற்றல்] வறுமைப்படுதல். அவன் தன்தரையில் நிற்கிறான். |
தன்படியே | taṉ-paṭi-y-ē, adv. <> தன்+. 1. Of its own accord; தானாகவே. 2. According to one's own inclination; |
தன்படுவன் | taṉ-paṭuvaṉ, n. <> id. +. Natural salt; தானாக உண்டாம் விளையுப்பு. (J.) |
தன்பாட்டில் | taṉ-pāṭṭil, adv. <> id. +. 1. Of its own accord; தானாகவே. காரியம் தன்பாட்டிலே நடக்கிறது. 2. Without interfering with others; |
தன்பாடு | taṉ-pāṭu, n. <> id. +. [K. tanpādu.] One's own business; சுவகாரியம். அவன் தன்பாட்டைப் பார்த்துக்கொண்டிருக்கிறான் |
தன்பாலிருத்தல் | taṉ-pāl-iruttal, n. <> id. +. Being near to šiva, one of four civapatam, q.v.; சிவபதம் நான்கனுள் ஒன்றாகிய சாமீப்பியம். (பிங்.) |
தன்பிடி | taṉ-piṭi, n. <> id. +. One's own doctrine or opinion; தன்கொள்கை. (w.) |
தன்பேறு | taṉ-pēṟu, n. <> id. +. One's own benefit, self-interest; சொந்தப் பிரயோசனம். தன்பேறாக உபகரிக்கை. (ஈடு, 2, 3, 4). |
தன்பொருட்டனுமானம் | taṉ-poruṭ-ṭaṉumāṉam, n. <> id. +. The minor term in taṉporuṭṭaṉumiti; தன்பொருட்டனுமிதிக்குக் காரணமாயுள்ளது. (தருக்கசங். நீலகண். 97.) |
தன்பொருட்டனுமிதி | taṉ-poruṭṭaṉu-miti, n. <> id. +. (Log.) Inference from one's own perception, opp. to piṟarporuṭṭaṉumiti ; ஏதுசாத்தியத்தைத் தானே நேரிற் பார்த்துக்கொள்ளும் அனுமிதிஞானம். (தருக்கசங். நீலகண். 97.) |
தன்பொறுப்பு | taṉ-poṟuppu, n. <> id. +. Personal responsibility; தன்னதாக ஏற்றுக்கொள்ளுங் கடமை. (W.) |
தன்மச்சொரூபவிபரீதசாதனம் | taṉ-ma-c-corūpa-viparīta-cātaṉam, n. <> dharma +. (Log.) A fallacious minor term which does not at all exist in the major term, one of four virutta-v-ētu-p-pōli, q.v.; விருத்தவேதுப்போலி நான்கனுள் கூறப்பட்ட ஏது, சாத்தியத்தில் ஒருபோதும் இல்லாமலிருப்பது (மணி. 29, 281.) |
தன்மசரணம் | taṉma-caraṇam, n. <> id. +. (Jaina.) Seeking refuge in Dharma or the teachings of Arhat; தன்மத்தைச் சரண்புகுகை. (சீவக. 3, உரை.) |
தன்மசாதனம் | taṉma-cātaṉam, n. <> id. + šāsana. Deed of endowment to a charity; தருமத்திற்கு அளிக்கும் தானசாஸனம். தன்மசாதனம் பண்ணிக்கொடுத்தபடி (S. I. I. i, 79). |
தன்மணி | taṉmaṇi n. <> dharmiṇī. Charitable person, benevolent person; தருமசிந்தனையுள்ளவன். (W.) |
தன்மதாதா | taṉma-tātā, n. <> தன்மம் + தாதா2. Benefactor; நல்லுபகாரி. (யாழ். அக.) |
தன்மதிப்பு | taṉ-matippu, n. <> தன்+. 1. Self-esteem; தற்பெருமை. (யாழ். அக.) 2. Self-respect; |
தன்மப்பயிர் | taṉma-p-payir, n. <> தன்மம்+. Lit., plant yielding charity. Great benefactor; [தன்மத்தை விளைவிக்கும் பயிர்] பேருபகாரி. (W.) |
தன்மபுத்திரன் | taṉma-puttiraṉ, n. <> dharma +. Yudhiṣṭhira. See தருமபுத்திரன். உலகத்தார் புகழுந் தன்மபுத்திரர் முதலியோர் (கலித். 25, உரை). |
தன்மம் | taṉmam, n. <> dharma. 1. See தருமம். (பிங்.) . 2. The Vēdas; 3. A pedestal, one of calācaṉam, q. v.; |
தன்மயம் | taṉ-mayam,. n. <> tan-maya. 1. One's own nature or disposition; தன்னியற்கை. (w.) 2. Cleverness, skill peculiar to one; 3. Becoming absorbed; |
தன்மயமா - தல் | taṉmayam-ā-, v. intr. <> தன்மயம்+. To become absorbed in an object; வேறுபாடின்றி ஒன்றாதல். தன்மயமாக்கிய சத்தியச்சோதி (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு, 2, 27). |
தன்மராசா 1 | taṉma-rācā, n. <> dharma + rājā. 1. See தன்மன், 1, 2. (சங். அக.) . 2. Benevolent person, as the king of charities; |
தன்மராசா 2 | taṉmarācā, n. Silvery-leaved ape flower. See பாலை, 9. (மூ. அ.) |
தன்மலைக்கரசி | taṉ-malaikkaraci, n. perh. தன்+. Sālagrama; சாளக்கிராமசிலை. (யாழ். அக.) |