Word |
English & Tamil Meaning |
---|---|
தன்யன் | taṉyaṉ, n. <> dhanya. Fortunate person; பாக்கியசாலி. |
தன்யாசி | taṉyāci, n. <> dhanāšrī. [T. dhanyāsi.] See தன்னியாசி. (W.) . |
தன்வசப்படுத்து - தல் | taṉ-vaca-p-paṭuttu-, v. tr. <> தன்+. To bring under one's control; to appropriate; சுவாதீனமாக்குதல். |
தன்வந்தரி | taṉvantari, n. <> Dhanvantri. The physician of the gods; தேவமருத்துவன். தன்வந்தரிபகவான் உருவமாகிநல் லமுதுறை கடத்தொடு முதித்தான் (பாகவத. மாயவ. 30). |
தன்வயத்தனாதல் | taṉ-vayattaṉ-ātal, n. <> தன்+. Being self-dependent, one of civaṉ-eṇ-kuṇam, q.v.; சிவனெண்குணத்துள் சுவதந்திரனாந் தன்மை (குறள், 9, உரை.) |
தன்வயம் | taṉ-vayam, n. <> id. +. See தன்வயத்தனாதல். (சூடா.) . |
தன்வயாதம் | taṉvayātam, n. <> dhanvayāsa. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மலை.) |
தன்வழி | taṉ-vaḻi, n. <> தன்+. 1. One's parentage, ancestry, family; தன்மரபு. (W.) 2. One's own will and pleasure; |
தன்வினை | taṉ-viṉai, n. <> id. +. 1. One's action; தனதுசெயல். 2. One's Karma; 3. (Gram.) Verb denoting the direct action of an agent, opp. to piṟa-viṉai; |
தன்வேதனை | taṉ-vētaṉai, n. <> id. +. (Log.) Self-experience, self-perception, self knowledge; சுவானுபவம். காண்டல்வாயின் மனந்தன் வேதனையோடு. (சி. சி. அளவை. 4). |
தன்வேதனைக்காட்சி | taṉ-vētaṉai-k-kāṭci, n. <> id. +. (Log.) Self-perception of pleasure and pain brought about by arāka-tattuvam, etc.; அராகாதிதத்துவங்களாலுண்டாகும் இன்பத்துன்பங்களை ஆன்மவறிவால் அறிகை. அருந்தின்பத் துன்பமுள்ளத் தறிவினுக் கராகமாதி தருந்தன்வேதனையாங் காட்சி. (சி. சி. அளவி. 7). |
தன்னக்கட்டு - தல் | taṉṉa-k-kaṭṭu-, v. intr. <> id. +. See தன்னைக்கட்டு-. . |
தன்னடக்கம் | taṉ-ṉ-aṭakkam, n. <> id. +. 1. Self-restraint, self-denial, self-possession; தன்னை ஒறுக்கை. 2. Modesty, in regard to learning, wealth, etc.; |
தன்னடிச்சோதி | taṉ-ṉ-aṭi-c-cōti, n. <> id. +. Final bliss, as the radiance of the feet of God; [பரமனது திருவடியின் ஒளி] பரமபதம். ஆழ்வார்கள் தன்னடிச்சோதிக்கு எழுந்தருளின பின்பு (குருபரம்.165). |
தன்னடையே | taṉ-ṉ-aṭai-y-ē, adv. <> id. +. Of its own accord; தானாகவே. தன்னடையே விட்டுப்போம். (ஈடு, 1, 2, 9). |
தன்னந்தனி | taṉṉan-taṉi, adv. Redupl. of தனி. Quite alone, in absolute solitude; முற்றுந் தனிமையாய்.தன்னந்தனிநின் றழுகின்றவத் தையல் (பாரத. திரௌ. 82). |
தன்னந்தனி - த்தல் | taṉṉan-taṉi-, v. intr. <> தன்னந்தனி. To be absolutely alone; முழுதுந் தனிமையாதல். தன்னந்தனித்த மருந்து (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு.1, 28). |
தன்னம் 1 | taṉṉam, n. <> tanu. Smallness, minuteness; சிறுமை. (திவா.) தன்னஞ்சிறிதே துயின்று (சீவக. 2028). |
தன்னம் 2 | taṉṉam, n. <> tarṇa. 1. Calf; பசுவின் கன்று. (பிங்.) 2. Fawn; 3. Sapling; |
தன்னமை | taṉ-ṉ-amai, n. prob. தன்+¢அமை-. (J.) 1. Friendship, amity, intimate relationship; சினேகம். 2. Connection; |
தன்னயம் | taṉṉayam, n. <> id. +. Self-interest; சுயநலம். |
தன்னரசு | taṉ-ṉ-aracu, n. <> id. +. 1. Self-government, independent kingdom; சுதந்திர அரசு. 2. State of anarchy, one of eight nāṭṭu-k-kuṟṟam, q.v.; |
தன்னரசுநாடு | taṉ-ṉ-aracu-nāṭu, n. <> தன்னரசு+. State or country where anarchy prevails; அராசகமான தேசம். (ஈடு, 4, 9, ப்ர.) |
தன்னரசுபற்று | taṉ-ṉ-aracu-paṟṟu, n. <> id. +. See தன்னரசுநாடு. (யாழ். அக.) . |
தன்னவன் | taṉṉavaṉ, n. <> தன். [K. tannavan.] Friend, relative, associate; தன்னைச்சேர்ந்தவன். (w.) |
தன்னறிவு | taṉ-ṉ-aṟivu, n. <> id. +. (w.) 1. Consciousness, self-knowledge, one's own knowledge; சுயவறிவு. 2. Sobriety, self-possession; |