Word |
English & Tamil Meaning |
---|---|
தாண்டுகாலி | tāṇṭu-kāli, n. <>id. +. Immoral person, as straying from virtue; கண்டபடி திருபவன்ள். தலவினை தனைவிடு தாண்டுகாலியை (திருப்பு.772). |
தாண்டுகாற்போடு - தல் | tāṇṭu-kāṟ-pōṭu-, v. intr. <>id. +. Loc. 1. To loaf about without doing any work; ஒரு வேலையுஞ் செய்யாமல் திரிதல். 2. To undertake a work beyond one's capacity; 3. To skip through a book; |
தாண்டுகோல் | tāṇṭu-kōl, n. <>id. +. The stick used for striking in the game of tipcat; கிட்டிப்புள்ளில் அடிக்குங்கோல். Madr. |
தாண்முதல் | tāṇ-mutal, n. <>தாள்+. Base of the foot; பாதமுலம். தாண்முதலே நங்கட்குச் சார்வு. (திவ்.இயற். 3, 99). |
தாண்முளை | tāṇ-muḷai, n. <>id.+. cf. சான்முளை. Son; மகன். கோமான்றாண்முளை (சூளா.மந்திர.91). |
தாணா 1 | tāṇā, n. <>U. ṭhānā <>sthāna. Police-station; See டாணா. . |
தாணா 2 | tānā, n. <>U. dāna. 1. Boiled gram for feeding a horse; குதிரைக்குக்கொடுக்கும் அவித்த கொள்ளு. 2. Light refreshment; |
தாணி - த்தல் | tāṇi, 11 v. cf. sthāna. tr. 1. To fasten, affix, enchase, as gem; பதித்தல். அரக்கும் உட்படத் தாணித்த சிவப்புச் சிலையும். (S. I. I. ii, 206). 2. To tam down, make firm, as earth round a tree; to hammer down 3. To load, as a gun, 4. To confirm, strengthen; 5. To ply hard, as in churning; 1. To impute crime falsely and skilfully; 2. To baste, tack; |
தாணி | tāṇi, n. <>தான்றி. 1. Belleric myrobalan. See தான்றி. (பதார்த்த. 978.) . 2. Klotzsch's croton, s. tr., croton klotzschianus; |
தாணு | tāṇu, n. <>sthāṇu. 1. Firmness, stability; நிலைபேறு. (சூடா.) 2. Category of the immoveables; 3. Mountain; 4. Pillar; 5. Post; 6. Siva; 7, Prop, support; 8. (Mus.) A Secondary melody-type of the cevvaḷi class; |
தாணையம் | tāṇaiyam, n. <>தானை 1. Garrison; கோட்டைக்குள்ளிருக்கும் சேனை. 2. Military camp; 3. Flock, herd; |
தாணையம்போடு - தல் | tāṇaiyam-pōṭu-, v. intr. <>தாணையம்+. Colloq. 1. To camp; பாளைய மிறங்குதல். 2. To tarry, overstay, as guests in one's house; |
தாத்தா | tāttā, n. [T. K. tāta.] Colloq. 1. Grandfather; பாட்டன். 2. Aged man ; |
தாத்தாரி | tāttāri, n. cf. தாத்திரி. Emblic myrobalan. See நெல்லி. (மலை.) |
தாத்தி | tātti, n. cf. தாதகி. Common mountain ebony. See ஆத்தி, 1. (மூ.அ.) |
தாத்திரம் | tāttiram, n. <>dātra. 1. Axe; கோடரி. (சது.) 2. Bill-hook; |
தாத்திரி 1 | tāttirī, n. <>dhātrī. 1. Mother; தாய். (யாழ். அக.) 2. Earth; 3. Emblic myrobalan. |
தாத்திரி 2 | tāttiri, n. cf. தாதரி. Wormkiller; See ஆடுதின்னாப்பாளை. (மலை.) |
தாத்திரியம் | tāttiriyam, n. <>dāridrya. Poverty; வறுமை. (J.) |
தாத்திருவாதம் | tāttiru-vātam, n. perh. dālṟ-vāda. (J.) 1. Cheating, fraud; trick; கபடம். 2. Lie; |
தாத்து - தல் | tāttu-, 5 v. tr. <>தாற்று-. 1. To winnow; கொழித்தல். (J.) 2. To shift off bad articles for good; 3. Spend; 4. To conceal, as stolen bullocks; |
தாத்து | tāttu, n. <>U.dād. (C. G.) 1. Justice; நியாயம். 2. Complaint, representation; |