Word |
English & Tamil Meaning |
---|---|
தாது 2 | tātu, n. <>தாதன். Slavery, servitude; அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டை மண்டலமே (தொண்டை.சத.45). |
தாது 3 | tātu, n. cf. dādima. See தாதுமாதுளை. (மூ. அ) . |
தாது 4 | tātu, n. cf. தாத்து. Hearing; கேள்வி. இங்கே தாதுமில்லை பிராதுமில்லை. Madr. |
தாதுக்களையோன் | tātu-k-kaḷaiyōn, n. <>தாது +. Topaz; புஷ்பராகம். (யாழ். அக.) |
தாதுகட்டு - தல் | tātu-kaṭṭu-, v. intr. <>id. To control and prevent seminal discharge; இந்திரியமடக்குதல். |
தாதுகந்தம் | tātu-kantam, n. perh. id.+ kanda. Sulphur; கந்தகம். (சங்.அக.) |
தாதுகலிதம் | tātu-kalitam, n. <>id. +. See தாதுநஷ்டம். (யாழ். அக.) . |
தாதுகி | tātuki, n. Brick; செங்கல். (சங்.அக.) |
தாதுசேகரம் | tātu-cēkaram, n. <>dhātušēkhara. Blue vitriol; துரிசு. (யாழ்.அக.) |
தாதுடைவு | tātuṭaivu, n. <>தாது + உடைவு. 1. See தாதுநஷ்டம். Loc. . 2. Wateriness of semen; |
தாதுநஷ்டம் | tātu-naṣṭam, n. <>id. +. Involuntary seminal discharge, Spermatorrhaa, வீரியச்சிதைவு. (W.) |
தாதுநிட்பன்னம் | tātu-niṭpaṉṉam, n. <>id.+niṣ-panna. (Gram.) That which is derived from a verbal root; வினையடியாகத் தோன்றியது. (பி.வி.7, உரை.) |
தாதுபரீட்சை | tātu-parīṭcai, n. id.+. Examining the pulse for diagnosing a disease; நோயறியுமாறு நாடிபார்க்கை. தாதுபரீட்சைவரு கால தேசத்தொடு சரீரலட்சண மறிந்து (அறப்.சத.51). |
தாதுபலவீனம் | tātu-pala-v-īṉam, n. <>id. Loss of virility; இந்திரியபலங் குறைகை. Loc. |
தாதுபார் - த்தல் | tātu-pār-, v. intr. <>id.+. To feel the pulse; நாடிசோதித்தல். |
தாதுபிராது | tātu-pirātu, n. <>U.dādfariyād. Sign, indication; அறிகுறி. Madr. |
தாதுபுஷ்டி | tātu-puṣṭi, n. <>dhātu+. Exuberance of semen or virility; தாதுவிருத்தி. |
தாதுமாதளை | tātu-mātaḷai, n. prob. தாது+. See தாதுமாதுளை. (மூ. அ.) . |
தாதுமாதுளை | tātu-mātuḷai, n. <>id.+. Pomegranate, s.tr., Punica granatum; பூ மாதுளை. (யாழ்.அக.) |
தாதுமாரிணி | tātu-māriṇi, n. <>தாது +māriṇi. Borax; வெங்காரம் (சங்.அக.) |
தாதுமூலசீவன் | tātu-mūla-cīvaṉ, n. <>id.+. 1. Three divisions of nature, comprising minerals, vegetables and animals on which a soothsayer bases his divination; குறிகூறுவோர் நினைத்தது கூறுதற்கு எடுத்த மூவகை இயற்கைப் பொருள்கள். (W.) 2. (Astrol.) A division of the zodiacal signs; |
தாதுராசகம் | tātu-rācakam, n. <>id.+. Semen; இந்திரியம். (யாழ்.அக.) |
தாதுரோகம் | tātu-rōkam, n. <>id.+rōga. Scanty flow or morbid state of the semen; இந்திரியச்சிதைவு. (W.) |
தாதுவருக்கநூல் | tātu-varukkal-nūl, n. <>id.+. A treatise on mineralogy; உலோகங்களைப்பற்றிக் கூறும் நூல். Mod. |
தாதுவல்லபம் | tātu-vallapam, n. <>id. +. See தாதுமாரிணி. (யாழ். அக.) . |
தாதுவாதம் 1 | tātu-vātam, n. <>id. +. 1. Knowledge of the pulse, one of aṟupattu-nālukalai, q.v.; அறுபத்துநாலு கலையுள் நாடியியல் பறிகை. 2. Mineralogy; |
தாதுவாதம் 2 | tātu-vātam, n. perh. dātr+vāda. See தாத்திருவாதம். (W.) . |
தாதுவாதி | tātu-vāti, n. <>dhātu+vādin. Assayer of metals; உலோகங்களைச் சோதிப்போன். (W.) |
தாதுவிருத்தி | tātu-virutti, n. <>id. + vrddhi. 1. See தாதுபுஷ்டி. Colloq. . |
தாதுவிழுதல் | tātu-viḷutal, n. <>d.+.Colloq. 1. Sinking of the pulse; நாடியொடுங்குகை. 2. Being discouraged; |
தாதுவைரி | tātu-vairi, n. <>id.+. (சங். அக.) 1. Sulphur; கந்தகம். 2.Chebulic myrobalan; 3. Cardamom-plant. |
தாதெரு | tāteru, n. <>id.+. எரு. See தாதெருமன்றம். தாதெருமறுகின் மூதூரராங்கந் (அகநா.165) |
தாதெருமன்றம் | tāteru-maṉṟam, n. <>தாதெரு+. Shady space at the foot of a tree used for dance, etc., by cowherds, as a place scattered with cow-dung; இடையர் குரவை முதலியன நிகழ்த்துதற்கிடமானதும் எருக்கள் சூழ்ந்தது மான மரத்து அடியிலுள்ள பொதுவிடம். தாதெருமன்றத் தயர்வர் தழூஉ (கலித்.103, 16). |