Word |
English & Tamil Meaning |
---|---|
தாபசுரம் | tāpa-curam, n. See தாபச்சுரம். Colloq. . |
தாபசோபம் | tāpa-cōpam, n. <>tāpa+kṣōbha. Extreme anguish, distress; மிகுதுன்பம். ஆறுமோ தாபசோபம். (தாயு.வம்பனேன்.7). |
தாபத்திரயம் | tāpa-t-tirayam, n. <>id.+. Afflictions, of three kinds, viz.., āttiyāṉnikam, ātitaivikam, ātipautikam; ஆத்தியான்மிகம், ஆதிதெய்விகம், ஆதிபௌதிகம் என்ற மூவகைத் துன்பங்கள். தாபத் திரயந் தவிர் (திருப்போ.சந்.நேரிசை.10). |
தாபதக்கோலம் | tāpata-k-kōlam, n. <>tāpasa+. Ascetic's guise; தவவேடம். தாபதக் கோலந் தாங்கின மென்பது (மணி.18, 23). |
தாபதநிலை | tāpata-nilai, n. <>id.+. (Puṟap.) A theme describing the vows of austerity observed by a widowed woman; காதலனையிழந்த மனைவி தவம்புரிந்தொழுகிய நிலைமையைத் தெரிவிக்கும் புறத்துரை. (தொல்.பொ.79.) |
தாபதப்பக்கம் | tāpata-p-pakkam, n. <>id.+. (Puṟap.) Theme describing the eight occupations of an ascetic, viz., nīr-āṭal, nila-k-kiṭai-kōṭal, tōl-uṭuttal, cri-y-ōmpal, ūr-aṭai-yāmai, caṭai-puṉaital, kāṭṭil-uṇavu, kaṭavutpūcai; நீராடல், நிலக்கிடைகோடல், தோலுடுத்தல், எரியோம்பல், ஊரடையாமை, சடைபுனைதல், காட்டிலுணவு, கடவுட்பூசை என்னும் தாபதர்க்குரிய எண்வகை யொழுக்கங்களைக் கூறும் புறத்துறை. நாலிரு வழக்கிற்றாபதப் பக்கமும் (தொல்.பொ.74). |
தாபதப்பள்ளி | tāpata-paḷḷi, n. <>id. +. See தாபதம். தண்டாரணியத்துத் தாபதப்பள்ளி. (சீவக.337). |
தாபதம் | tāpatam, n. <>tāpasa. Abode of an ascetic; hermitage; முனிவர் வாசம். (திவா.) தாபத மதன்கண் பண்டைவான் பகைதீர்ந்து (சேதுபு.நைமிச.13). |
தாபதவாகை | tāpata-vākai, n. <>id.+. (Puṟap.) Theme describing the holy life of an ascetic; தவவேடத்தர் புண்ணியத்தைத் தழுவியொழுகும் நடையைக் கூறும் புறத்துறை. (பு.வெ.8, 14.) |
தாபதவேடம் | tāpata-vēṭam, n. <>id.+. See தாபதக்கோலம். தையலோர் பங்கினர் தாபத வேடத்தர் (திருவாச.17, 9). |
தாபதன் | tāpataṉ, n. <>tāpasa. 1. Ascetic, person practising penance; முனிவன். (பிங்.) தாபதர்கள் சிலையெடுத்துத் திரியுமிது சிறிதன்றோ (கம்பரா. சூர்ப்பணகை. 101). 2. Jaina ascetic; |
தாபந்தம் | tāpantam, n. See தாவந்தம். Loc. . |
தாபந்திரியம் | tāpantiriyam, n. See தாவந்தம். Loc. . |
தாபம் 1 | tāpam, n. <>tāpa. 1. Heat, burning; வெப்பம். (சூடா.) 2. Branding the shoulders with the marks of conch and discus of viṣṇu, one of paca-camskaram, q.v.; 3. Thirst; 4. Sorrow, distress, anguish; |
தாபம் 2 | tāpam, n. <>dāva. Jungle, forest; காடு. (W.) |
தாபமாரி | tāpa-māri, n. See தாபமாறி. (சங். அக.) . |
தாபமாறி | tāpa-māṟi, n. prob. தாபம்+மாறு. Belleric myrobalan. See தான்றி. (மலை.) |
தாபமானி | tāpa-māṉi, n. <>tāpa-mānin. Thermometer; தட்பவெப்பங்களின் அளவுகாட்டுங் கருவி. Mod. |
தாபரநூல் | tāpara-nūl, n. <>தாபரம்+. Botany; மரஞ்செடிகளைப்பற்றிக் கூறும் நூல். |
தாபரம் | tāparam, n. <>sthāvara. 1. Vegetable kingdom; மரப்பொது. (சூடா.) 2. Category of the immovables; 3. Place. location, habitation; 4. Earth; 5, Mountain; 6. Body; 7. Temple; 8. (Saiva.) Liṅga, as fixed and immovable. 9. Stability, steadiness; 10. Shelter, support, prop; 11. Basis, foundation; |
தாபரவஸ்து | tāpara-vastu, n. <>id.+. Plants; மரம்புல் முதலியன. |
தாபரன் | tāparaṉ, n. <>sthāvara. The deity, as the sustainer of all things; (எல்லாவற்றிற்கும் ஆதாரமாயுள்ளவன்) கடவுள். (அக.நி.) |
தாபரி - த்தல் | tāpari-, 11 v. id. intr. To lodge, abide, obtain shelter; நிலைபெற்றிருத்தல். உன்றன்வீடு தாபரித்த வன்பர் (திருப்பு.731).-tr. To protect, shelter, maintain; |
தாபவாகினி | tāpa-vākiṉi, n. <>tāpa-vāhinī Conductor of heat; வெப்பத்தைப் பரப்பும்கருவி. (கல்லிவி). |