Word |
English & Tamil Meaning |
---|---|
திருவமால் | tiruva-māl, n. <>id. + அம் + மால். Viṣṇu; திருமால். திருவமாற் கிளையாள் (சிலப். 12, நாகநாறு.). |
திருவமுது | tiru-v-amutu, n. <>id. +. Boiled rice offered to an idol or a great person; நிவேதன வுணவு. திருவமுதுக்கு வைத்தகாசு பத்தும் (S. I. I. i, 98). |
திருவரங்கத்தமுதனார் | tiru-v-araṅka-t-t-amutaṉār, n. <>id. +. Author or Rāmānuca-nūṟṟantāti, a contemporary of Rāmānuja; இராமாநுசாசாரியரின் காலத்தவரும், இராமாநுசநூற்றந்தாதியை இயற்றியவருமாகிய பெரியார். (திவ்.) |
திருவரங்கம் | tiru-v-araṅkam, n. <>id. +. šrirangam. See ஸ்ரீரங்கம். (சிலப்.) . |
திருவரங்கு | tiru-v-araṅku, n. <>id. +. The sacred hall in a temple; கோயிலுள்ள பிராதன மண்டபம். (S. I. I. ii, 69.) |
திருவருட்டுறை | tiru-v-aruṭṭuṟai, n. <>திருவருள்+. The šiva shrine at Tiru-veṇṇey-nallūr; திருவெண்ணெய்நல்லூரிலுள்ள சிவன்கோயில். திருவருட்டுறையே புக்கார் (பெரியபு. தடுத்தாட். 65). |
திருவருட்பயன் | tiru-v-aruṭ-payaṉ, n. <>id. +. A text-book of šaiva Siddhanta Philosophy by Umāpati-civācāriyar, one of 14 mey-kāṇṭa-cattiram, q.v.; மெய்கண்டசாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் உமாபதிசிவாசாரியர் இயற்றியதுமாகிய சைவசித்தாந்த நூல். |
திருவருட்பா | tiru-v-aruṭpā, n. <>id. +. A collection of devotional poems by Irāmaliṅka-cuvāmikaḷ, 19th c.; கி. பி. 19-ஆம் நூற்றாண்டில் இராமலிங்கசுவாமிகள் இயற்றிய தோத்திரநூல். |
திருவருள் | tiru-v-aruḷ, n. <>திரு+. Divine grace; தெய்வ கிருபை. திருவருள் மூழ்கி (திவ். திருவாய். 8, 9, 6). |
திருவல்லிக்கேணி | tiru-v-alli-k-kēṇi, n. <>id. +. An ancient Viṣṇu shrine in Madras; சென்னையிலுள்ள திருமால் தலம். (திவ். பெரியதி. 2, 3, 1.) |
திருவலகிடு - தல் | tiru-v-alakiṭu-, v. tr. <>திருவலகு+. To sweep and clean a temple; கோயிலைப் பெருக்கிச் சுத்தஞ்செய்தல். |
திருவலகு | tiru-v-alaku, n. <>திரு +. Broom used in temples; கோயில்பெருக்குந் துடைப்பம். அலகைத் திருவலகென்றும் (திருக்கோ. 1, உரை). |
திருவலகுசேர் - த்தல் | tiru-v-alaku-cēr-, v. tr. <>திருவலகு- +. See திருவலகிடு-. Vaiṣṇ. . |
திருவலர் | tiruvalar, n. A class of Vēṭar in Salem District; சேலம் ஜில்லாவில் உள்ள வேடர் பிரிவினர். (E. T. vii, 332.) |
திருவழுவூர் | tiru-vaḻuvūr, n. <>திரு +. A šiva shrine in Tanjore District, one of aṭṭa-vīraṭṭam, q.v.; சிவபிரான் கோயில்கொண்ட அட்ட வீரட்டங்களுள் தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள ஒரு சிவதலம். (தேவா.) |
திருவள்ளுவப்பயன் | tiru-vaḷṭuva-p-payaṉ, n. <>id. +. The Kuṟaḷ. See திருக்குறள். (தொல். பொ. 76, உரை.) . |
திருவள்ளுவமாலை | tiru-vaḷḷuva-mālai, n. <>id. +. Verses in praise of the Kuṟaḷ, attributed to Sangam poets; திருக்குறளைப் புகழ்ந்து சங்கப்புல்லவர்கள் பாடியனவாகக் கருதப்படும் செய்யுட்களமைந்த நூல். |
திருவள்ளுவர் | tiru-vaḷḷuvar, n. <>id. +. 1. The author of the Kuṟaḷ; திருக்குறளாசிரியர். திருத்தகு தெய்வத் திருவள்ளுவரோடு (வள்ளுவமா. 1). 2. The Kuṟrḷ; |
திருவறம் | tiru-v-aṟam, n. <>id. +. Sacred duties prescribed by a religion; சமய தருமம். திருவற மெய்துதல் சித்தம் (மணி.10, 85). |
திருவன் 1 | tiruvaṉ, n. <>id. 1. Wealthy person, blessed person; சீமான். 2. Viṣṇu; |
திருவன் 2 | tiruvaṉ, n. prob. திருகு-. 1. Buffoon, jester of a king; விகடக்காரன். (J.) 2. Rogue; 3. Grey mullett, attaining 6 in. in length, Nugil parsia; |
திருவன்கோலா | tiruvaṉ-kōlā, n. Half-beak. See கொழுத்தமுரல். . |
திருவனந்தபுரம் | tiru-v-aṉanta-puram, n. <>திரு +. Trivandrum, the modern capital of Travancore, noted for its Viṣṇu shrine; திருவிதாங்கூர் இராச்சியத்தின் தலைமைநகரமாயுள்ள திருமால் தலம். (திவ். திருவாய்.) |
திருவனந்தல் | tiru-v-aṉantal, n. <>id. +. Morning ceremony when the god is awakened from sleep, aubade; கடவுளின் திருபப்ள்ளியெழுச்சிப் பூசனை. |
திருவனந்தற்கட்டளை | tiru-v-aṉantaṟ-kaṭṭaḷai, n. <>திருவனந்தல் +. Endowment for the morning oblations in a temple; கோயிலிற் காலை வழிபாட்டுக்கு விடப்பட்ட மானியம். |
திருவனந்தாழ்வான் | tiru-v-aṉantāḻvāṉ, n. <>திரு +. ādišēṣa. See ஆதிசேஷன். (ஈடு.) . |
திருவாக்கு | tiru-vākku, n. <>id. +. Sacred word, utterance or order, as of a deity, guru, king; தெய்வம் பெரியோர்களின் வாய்மொழி. திருவாக்குக்கு எதிர்வாக்குண்டோ? |