Word |
English & Tamil Meaning |
---|---|
திருமூலநாயனார் | tiru-mūla-nāyaṉār, n. <>திருமூலர் +. A canonized šaiva saint, author of Tirumantiram, one of 63; நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவரும் திருமந்திரம் இயற்றியவருமாகிய பெரியார். (பெரியபு.) |
திருமூலர் | tiru-mūlar, n. See திருமூல நாயனார். திருமூலர் சொல்லும் ஒரு வாசகமென் றுணர் (நல்வழி, 40). . |
திருமெய்காப்பான் | tiru-mey-kāppāṉ, n. <>திரு +. See திருமெய்காப்பு. (S. I. I. ii, 328.) . |
திருமெய்காப்பு | tiru-mey-kāppu, n. <>id. +. Temple watchman; கோயில் காப்போன். (S. I. I. ii, 328.) |
திருமெய்ப்பூச்சு | tiru-mey-p-pūccu, n. <>id. +. Anointing of an idol; கோயில் மூர்த்திகளின்மேற் பூசும் பூச்சு. (S. I. I. iii, 94.) |
திருமெழுக்கு | tiru-meḻukku, n. <>id. +. 1. Cleansing the temple-floor with cow-dung dissolved in water; கோயிலிடத்தை மெழுகுகை. திருமெழுக்குஞ் சாத்தி (சி. சி. 8, 19). 2. Cow-dung; |
திருமெழுகு - தல் | tiru-meḻuku-, v. tr. <>id. +. To cleanse the temple-floor with cow-dung dissolved in water; கோயிலிடத்தைச் சாணத்தால் மெழுகிச் சுத்தஞ்செய்தல். |
திருமெழுகு | tiru-meḻuku,. n. <>id. +. See திருமெழுக்கு. . |
திருமேற்கட்டி | tiru-mēṟ-kaṭṭi, n. <>id. +. Canopy over an idol in temple; கோயில் மூர்த்தி எழுந்தருளியிருக்குமிடத்துக் கட்டப்படும் மேல் விதானம். (S. I. I. ii, 76.) |
திருமேற்பூச்சு | tiru-mēṟ-pūccu, n. <>id. +. 1. Sandal perfume; களபம். (தத்துவப். 66, உரை.) See திருமெய்ப்பூச்சு. (யாழ். அக.) |
திருமேனி | tiru-mēṉi, n. <>id. +. 1. Sacred person of a deity, saint, etc.; கடவுள் முனிவர் முதலியோரது திவ்விய சரீரம். அங்கமலத்திலைபோலுந் திருமேனி யடிகளுக்கே (திவ். திருவாய். 9, 7, 3). 2. Idol; 3. Women's ear-ornament; 4. Indian acalypha. See குப்பைமேனி. (சங். அக.) |
திருமேனிக்கடுக்கன் | tiru-mēṉi-k-kaṭuk-kaṉ, n. <>திருமேனி +. An ear-ornament worn by widows; கைம்பெண்கள் அணியும் காதணிவகை. (யாழ். அக.) |
திருமேனிக்கீடு | tiru-mēṉikkīṭu, n. <>id. + இடு-. Coat of mail; கவசம். நற்றிருமேனிக்கீடு நவையறவிட்டு. (திருவாலவா. 28, 90). |
திருமேனிகாவல் | tiru-mēṉi-kāval, n. <>id. +. Temple guard; கோயிற்காவல். திருமேனிகாவல் காணியாட்சி (I. M. P. N. A. 227). |
திருமேனியழகி | tiru-mēṉi-y-aḻaki, n. <>id. +. See திருமேனி, 4. (மலை.) . |
திருமை | tirumai, n. <>திரு. Beauty; அழகு. திருமை பெற்றதொரு தேரினை நல்கி (கந்தபு. முதனாட்பானு. 35). |
திருமொழி | tiru-moḻi, n. <>id. +. 1. Word or utterance of great persons; பெரியோர் வார்த்தை. ஒருமூன்றவித்தோன் ... திருமொழிக்கல்லதென் செவியகந் திறவா (சிலப். 10, 195). 2. A portion of Nālāyira-p-pirapantam. See பெரியதிருமொழி. Vaiṣṇ. 3. Agamas; 4. Dharma; |
திருவகுப்பு | tiru-vakuppu n. <>id. +. A kind of verse in canta-k-kuḻippu; சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள்வகை. அருணகிரிநாதர் திருவகுப்பு. |
திருவட்டம் | tiru-vaṭṭam n. See திருகுவட்டம். (யாழ். அக.) . |
திருவட்டி | tiru-v-aṭṭi, n. of. šīhuṇda. Milk hedge. See திருகுகள்ளி, 1. (மலை.) . |
திருவடி 1 | tiru-v-aṭi, n. <>திரு+அடி. 1. Sacred feet, as of a deity, saint, etc..; சீபாதம். திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா. 415, 1). 2. The deity; 3. Ascetic, saint, sage; 4. Hanumān, regarded as the feet of Viṣṇu; 5. Garuda, regarded as the feet of Viṣṇu; 6. Title of the kings of Travancore; |
திருவடி 2 | tiru-vaṭi, n. <>id. + வடு. Indolent sore; நோவில்லாத புண். (J.) |
திருவடி 3 | tiruvaṭi, n. prob. திருகு-. Tricks of a buffoon; கோமாளி விகடம். (J.) |
திருவடிக்கம் | tiru-vaṭikkam, n. <>id. + படிக்கம். Water used in the worship of an idol and distributed to worshippers; திருமால் கோயிலிற் படிக்கத்தினின்று எடுத்துவழங்கும் சுவாமி தீர்த்தம். Vaiṣṇ. |