Word |
English & Tamil Meaning |
---|---|
திருமுடிச்சாத்து | tiru-muṭi-c-cāttu, n. <>id. +. Turban; தலைப்பாகை. சட்டைசாத்தித் திருமுடிச்சாத்துஞ் சாத்தி (திருவாலவா.16, 19). |
திருமுடிச்சேவகர் | tiru-muṭi-c-cēvakar, n. <>id. +. Aiyaṉār; ஐயனார். |
திருமுடித்திலகம் | tiru-muṭi-t-tilakam, n. <>id. +. Jewel for the head; திருமுடியிற் சூட்டு மணி. திருமுடித்திலகங் கொண்டார் (சீவக. 787). |
திருமுடியோன் | tiru-muṭiyōn, n. <>id. King, as wearing a crown; [கிரீடந்தரித்தவன்] அரசன். தீதிலன்கொ றிருமுடியோ னென்றான் (கம்பரா. பள்ளி. 2). |
திருமுண்டம் | tiru-muṇṭam, n. <>tripuṇdra. šaiva mark; See திரிபுண்டரம். நீளொளி வளர் திருமுண்ட நெற்றியும் (பெரியபு. திருநீலகண்ட நா. 11). . |
திருமுத்து | tiru-muttu n. <>திரு +. Tooth of a king or a great person, a term of respect; அரசன் முதலிய பெரியோர்களின் பல். திருமுத்து விளக்குதல். Nā. |
திருமுருகாற்றுப்படை | tiru-murukāṟṟu-p-paṭai, n. <>id. +. A poem in Pattu-p-pāṭṭu composed by Nakkīrar in honour of Murukaṉ; பத்துப்பாட்டினுள் ஒன்றும் நக்கீரர் இயற்றியதும் முருகக்கடவுளைப்பற்றியதுமான ஒரு நூல். |
திருமுழுக்கு | tiru-muḻukku, n. <>id. +. 1. See திருமஞ்சனம், 1. . 2. Bath taken by women after fasting in honour of Pārvatī in the month of Mārkaḻi; |
திருமுளைத்திருநாள் | tiru-muḷai-t-tiru-nāl, n. <>id. +. Festival of aṅkurārppaṇam in a temple; கோயிலில் நடக்கும் அங்குரார்ப்பணத் திருவிழா. Vaiṣṇ. |
திருமுளைப்பாலிகை | tiru-muḷai-p-pālikai, n. <>id. +. Pots of sprouting seeds kept on important occasions like marriage; திருமண முதலிய விசேடங்களில் தானியழளை வளர்க்கப்பெறும் மண்பாலிகை. திருமுளைப்பாலிகை முப்பத்தாறுக்கு (S. I. I. iii, 187). |
திருமுற்றத்தார் | tiru-muṟṟattāa, n. <>id. +. Temple-servants; கோயிற்பணி செய்வோர். அதைக் கவனித்த அர்ச்சகருந் திருமுற்றத்தாரும் (குருபரம். 77). |
திருமுற்றம் | tiru-muṟṟam, n. <>id. +. 1. Court-yard in front of the chief idol of a temple; சுவாமி சன்னதி. அணியரங்கன் றிருமுற்றத்தடியார் (திவ். பெருமாள்.1, 10). 2. Open square for equestrian exercises, race-course, hippo-drome; |
திருமுறை | tiru-muṟai, n. <>id. +. Tamil šaiva scriptures, 12 in number, viz., Tēvāram, Tiru-vācakam, Tiru-v-icaippā, Tiru-p-pallāṇṭu, Tiru-mantiram, Patiṉorān-tirumuṟai, Periya-purāṇam; தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருபல்லாண்டு, திருமந்திரம், பதினொராந்திருமுறை, பெரியபுராணம் என்ற சைவநூல்கள். |
திருமுறைகண்டசோழன் | tiru-muṟai-kaṇṭa-cōḻaṉ, n. <>திருமுறை +. A Chola kings, who was the discoverer of Tēvāram; தேவாரமாகிய திருமுறைகளைக்கண்டு வெளிப்படுத்திய சோழன். |
திருமுறைகண்டபுராணம் | tiru-muṟai-kaṇṭa-purāṇam, n. <>id. +. A poem by Umā-pati-civācāriyar describing the discovery of Tēvāram; தேவாரம் முதன்முதற் கண்டு பிடிக்கப்பட்ட வரலாற்றினைக் குறித்து உமாபதிசிவாசாரியார் இயற்றிய புராணம். |
திருமுறைமண்டபம் | tiru-muṟai-maṇṭa-pam n. <>id. +. Temple-hall where the tiru-muṟai is recited; திருமுறைகளை ஓதுங் கோயின் மண்டபம். எந்தைகோயிலுட் டிருமுறைமண்டப மெடுத்து. (உபதேசகா. சிவபுரா. 48). |
திருமுன் | tiru-muṉ, <>திரு+. n. See திருமுன்பு. விழுந்தவர் திருமுன்சென்று (திருவாலவா. 27, 28).--- adv. See திருமுன்னர். . |
திருமுன்பு | tiru-muṉpu, <> id. +. n. [M. tirumunpu.] Divine presence, royal presence, presence of a great person; -- adv. See திருமுன்னர். சன்னதி. Colloq. |
திருமுன்னர் | tiru-muṉṉar, adv. <>id. +. In the august persence; சன்னதியில். மன்னன் றிருமுன்னர் வைத்தலுமே. (நள. சுயம்வர. 26). |
திருமுனைப்பாடிநாடு | tiru-muṉai-p-pāṭi-nāṭu, n. <>id. +. The country surrounding Tirukkōvalūr; திருக்கோவலூரைச் சூழ்ந்துள்ள நடுநாடு. திருமுனைப்பாடிநாட்டுப் பாண்டையூர் மங்கலங்கிழான் (S. I. I. i, 101). |
திருமூப்பு | tiru-mūppu, n. <>id. +. King-ship, as attained by right of seniority; [மூப்பினால் எய்துவது] அரசபதவி. விசாகந் திருநாள் திருமூப்பு ஏற்றார். Nā. |
திருமூலகட்சம் | tiru-mūla-kaṭcam, n. <>id. +. A treatise on mysticism, attributed to Tirumūlar; திருமூலர் இயற்றியதாகக் கூறப்படும் ஒரு மந்திர சாஸ்திரம். (w.) |
திருமூலட்டானம் | tiru-mūlaṭṭāṉam, n. <>id. + mūla-sthāna. The scred shrine of Tiruvārūr; திருவாரூர்ச் சிவதலம். திருவாரூரிற்றிரு மூலட்டானத் தெஞ்செல்வன்றானே. (தேவா. 725, 4). |