Word |
English & Tamil Meaning |
---|---|
திருமந்திரவோலை | tiru-mantira-v-ōlai, n. <>id. + மந்திரம் +. King's ministerial officer; இராசகாரியஸ்தன். திருமந்திரவோலை யுதாரவிடங்க விழுப்பரையர் (S. I. I. ii, 306). |
திருமந்திரவோலைநாயகம் | tiru-man-tira-v-ōlai-nāyakam, n. <>id. +. Chief ministerial officer of a king; இராசகாரியஸ்தர் தலைவன். திருமந்திரவோலை நாயகம் அச்சுதன் இராஜராஜனான தொண்டைமானும் (S. I. I. iii, 35). |
திருமரம் | tiru-maram, n. <>id. +. Pipal; அரசு மரம். (சூடா.) |
திருமருதந்துறை | tiru-marutan-tuṟai, n. <>id. +. See திருமருதமுன்றுறை. (பரிபா.11, 30.) . |
திருமருதந்துறைக்கா | tiru-marutan-tuṟai-k-kā, n. <>id. +. An ancient pleasure-grove on the banks of the Vaikai at Madura; மதுரையில் வைகைக்கரையி லிருந்த ஓர் உய்யானம். திருமருதந்துறைக் காவேபோலுங் காக்களினும் விளையாடி (தொல். பொ. 191, உரை). |
திருமருதமுன்றுறை | tiru-maruta-muṉ-ṟuṟai, n. <>id. +. A bathing ghat of the Vaikai at Madura; மதுரையில் வைகை நதித்துறை. திசைதிசை தேனார்க்குந் திருமருதமுன்றுறை (கலித். 26). |
திருமலர் | tiru-malar, n. <>id. +. Lotus; தாமரைமலர். (பிங்.) திருமலரிருந்த முதியவன்போல (கல்லா. 71). |
திருமலை | tiru-malai, n. <>id. +. 1. Sacred mountain; பரிசுத்த மலை. தீ விளையாட நின்றே விளையாடி திருமலைக்கே (திருக்கோ. 133). 2. Mt. Kailāsa; 3. Hill at Tirupati, sacred to Viṣṇu; |
திருமலைநாயக்கர் | tiru-malai-nāyakkar, n. <>id. +. A Nāyak ruler of Madura,. A. D. 1623-59; கி.பி.1623 முதல் 1659 வரை மதுரையை அரசாண்ட நாயக்கவமிசத்து அரசர். (மதுரைத்திருப்.) |
திருமலையாழ்வார் | tiru-malai-y-āḻvār, n. <>id. +. See திருமலை, 3. (திவ். திருக்குறுந். 3, வ்யா.) . |
திருமழிசையாழ்வார் | tiru-maḻicai-y-āḻvār, n. <>id. +. A canonized Vaiṣṇava saint, author of Tiruccanta-viruttam and Nāṉmukaṉ-ṟiruvantāti, one of ten āḻvār, q.v.; ஆழ்வார் பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்தில் திருச்சந்தவிருத்தம், நான்முகன்றிருவந்தாதி என்ற பிரபந்தங்களைப் பாடியவருமாகிய திருமாலடியார். |
திருமறுமார்பன் | tiru-maṟu-mārpaṉ, n. <>id. +. 1. Viṣṇu, as having a mole on his breast; [மார்பில் அழகிய மறுவையுடையவன்] திருமால். திருமறுமார்பன்போற் றிறல்சான்ற காரியும் (கலித். 104, 10). 2. Arhat; |
திருமனசு | tiru-maṉacu, n. <>id. +. [M. tirumanassu.] His, Her or your Highness, a term of respect; படர்க்கை முன்னிலையாராகிய பெரியோர்கட்கு வழங்கும் ஒரு மரியாதைச்சொல். Nā. |
திருமாடம்பு | tiru-māṭampu, n. [M. tirumaṭampu.] Upanayana ceremony of the princes of Travancore; திருவிதாங்கூர் அரசகுமாரர்களின் உபநயனம். Nā. |
திருமாமகள் | tiru-mā-makal, n. <>திரு +. Lakṣmī; இலக்குமி. திருமாமகள் புல்லநாளும் (சீவக. 30). |
திருமாமணிமண்டபம் | tiru-mā-maṇī-maṇṭapam n. <>id. +. Viṣṇu's presence; chamber in His heaven; பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம். (ஈடு, 10, 9, 11.) |
திருமால் | tiru-māl, n. <>id. +. [M. tirumāl.] 1. Viṣṇu; விஷ்ணு. திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே (சிலப். ஆய்ச்சி. படர்க்கை. 1). 2. King; |
திருமால்குன்றம் | tiru-māl-kuṉṟam, n. <>id. +. Aḻakar hill; அழகர்மலை. திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் (சிலப்.11, 91). |
திருமால்கொப்பூழ் | tiru-māl-koppūḻ, n. <>id. +. Lotus, as arising from the navel of Viṣṇu; [விஷ்ணுவின் கொப்பூழிலிருந்து உண்டானது] தாமரை. (பிங்.) |
திருமால்நிலை | tiru-māl-nilai, n. <>id. +. Manifestations of Viṣṇu in five forms, viz., param, viyūkam, vipavam, antaryāmittuvam, arccai; பரம், வியூகம், விபவம், அந்தர்யாமித்துவம், அர்ச்சை என்ற ஐவகைத் திருமால் வடிவங்கள். (அஷ்டாதச. தத்வத். 3, 41.) |
திருமால்புதல்வன் | tiru-māl-putalvaṉ, n. <>id. +. 1. Kāma, as the son of Viṣṇu; [விஷ்ணுவுக்கு மகன்] மன்மதன். (திவா.) 2. Brahmā; |
திருமால்வடிவம் | tiru-māl-vaṭivam, n. <>id. +. See திருமால்நிலை. . |
திருமாலவதாரம் | tiru-māl-avatāram, n. <>id. +. 1. Chief incarnations of Viṣṇu; தசாவதாரம். (பிங்.) 2. Secondary incarnations of Viṣṇu, being 15, viz., Caṉakaṉ, Caṉantaṉan, Caṉātaṉan, Caṉaṟkumāraṉ, Nara-Nārāyaṇaṉ, Kapilaṉ, Iṭapaṉ, Nārataṉ, Ayakkirīvan, Tattāt-tirēyaṉ, Mōkiṉi, Vēḷviyiṉ-pati, Viyātaṉ, Taṉ-vantari, Puttaṉ. |