Word |
English & Tamil Meaning |
---|---|
திருமங்கையாழ்வார் | tiru-maṅkai-y-āḻ-vār, n. <>id. +. A canonized Vaiṣṇava saint, author of Periya-tirumoḻi and other works in Nālāyira-p-pirapantam, one of ten āḻvār, q.v.; ஆழ்வார் பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்துள் பெரியதிருமொழி முதலியன பாடியவருமாகிய திருமாலடியார். |
திருமஞ்சனக்கவி | tiru-macaṉa-k-kavi, n. <>id. +. Verse recited while bathing a deity; கோயில் மூர்த்திகளின் அபிஷேககாலத்திற் சொல்லும் கவி. (கோயிலொ. 68.) |
திருமஞ்சனக்காவேரி | tiru-macaṉa-k-kāvēri, n. <>id. +. A branch of the Kāveri from which water is carried for bathing the deity at šrīrangam; ஸ்ரீரங்கத்துத் திருமாலை அபிஷேகஞ் செய்வதற்க்கு நீரெடுக்கும் காவேரியின் கிளைநதி. |
திருமஞ்சனசாலை | tiru-macaṉa-cālai, n. <>id. +. Bathing place of a deity, king, etc.; கடவுள் அரசர் முதலியோர் அபிஷேகமாடும் இடம். கோயிலினுள்ளால் திருமஞ்சனசாலையில் எழுந்தருளியிருந்து (S. I. I. iii, 35). |
திருமஞ்சனப்பட்டை | tiru-macaṉa-p-paṭṭai, n. prob. id. +. Lodhra-bark. See வெள்ளிலோத்திரம். . |
திருமஞ்சனம் | tiru-macaṉam, n. <>id. +. 1. Bath of an idol or a king; அபிஷேகம். திருமஞ்சனத்துக்கு ... ஸ்தபந திரவியங்கள் வேண்டுவனவும் (S. I. I. iii, 187). 2. Holy water for the bath of an idol or a king; |
திருமஞ்சனமாட்டு - தல் | tiru-macaṉam-āṭṭu-, v. tr. <>id. +. To bathe an idol; அபிசேஷஞ்செய்வித்தல். |
திருமஞ்சனவேதிகை | tiru-macaṉa-vētikai, n. <>id. +. A pedestal on which an idol is placed while being bathed; அபிஷேகஞ் செய்யுங்காலத்துச் சுவாமியை எழுந்தருளச் செய்யும் பீடம். |
திருமடந்தை | tiru-maṭantai, n. <>id. +. Lakṣmī; இலக்குமி. திருமடந்தை மண்மடந்தையிருபாலுந் திகழ (திவ்.பெரியதி. 3, 10, 1). |
திருமடம் | tiru-maṭam, n. <>id. + maṭha. Abode of a priest; குருவின்மாளிகை. மண்ணுறுந் திருமடமெனு மித்தரை மருவி (உபதேசகா. சிவபுரா. 55). |
திருமடவளாகம் | tiru-maṭa-vaḷākam, n. <>id. + id. +. Premises surrounding a temple; கோயிலைச் சுற்றியுள்ள இடம். |
திருமடைப்பள்ளி | tiru-maṭai-p-paḷḷi, n. <>id. + மடை +. Kitchen; சமையலறை. Vaiṣṇ. |
திருமடைவளாகம் | tiru-maṭai-vaḷākam, n. See திருமடவளாகம். . |
திருமடைவிளாகம் | tiru-maṭai-viḷākam, n. See திருமடைவிளாகம். (S. I. I. i, 119.) . |
திருமண் | tiru-maṇ, n. <>திரு +. 1. White earth used by Vaiṣṇavas in marking their foreheads; திருநாமந்தரித்தற்குரிய வெள்ளிய மண்கட்டி. 2. Vaiṣṇava religious mark; |
திருமண்காப்பு | tiru-maṇ-kāppu, n. <>id. +. See திருமண், 2. . |
திருமண்டலம் | tiru-maṇṭalam, n. prob. id. +. Polar region; துருவமண்டலம். (யாழ். அக.) |
திருமண்பெட்டி | tiru-maṇ-peṭṭi, n. <>திருமண் +. Small basket for keeping the white earth and saffron used in religious marks; திருமண்முதலியன வைக்குஞ் சிறுபெட்டி. Vaiṣṇ. |
திருமணம் | tiru-maṇam, n. <>திரு +. Marriage; விவாகம். திருமணவழைப்புப் பத்திரம். |
திருமணம்பரிமாறு - தல் | tiru-maṇam-parimāṟu, v. tr. <>id. + மணம் +. 1. To season curry with fried spices; தாளித்தல். Vaiṣṇ. 2. To spice truth with falsehood; |
திருமணிகுயிற்றுநர் | tiru-maṇi-kuyiṟṟu-nar, n. <>id. +. Pearl-stringers, bead-workers; முத்துக்கோப்போர். திருமணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு (சிலப்.5, 46). |
திருமணுத்தானம் | tiru-maṇu-t-tāṉam, n. <>id. + மண்- +. Gift by a person made after his bath; நீராடியபின் செய்யுந் தானம். மண்ணுநீராட்டின் திருமணுத்தான மரபுளிக் கழிந்தபின் (பெருங். இலாவாண. 5, 122). |
திருமதில் | tiru-matil, n. <>id. +. Compound wall of a temple; கோயிலின் சுற்றுமதில். (I. M. P. S.A. 362.) |
திருமதுரம் | tiru-maturam, n. <>id. +. A kind of sweet offering in temples; பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்துச் செய்யப்படும் நைவேத்தியப் பொருள். Nā. |
திருமந்திரம் | tiru-mantiram, n. <>id. +. 1. Mystic formulee sacred to šiva and Viṣṇu, viz., pacākṣaram and aṣṭākṣaram; சிவன் திருமால் இவர்களுக்குரியவான பஞ்சாக்ஷர அஷ்டாக்ஷரங்கள். திருமதிரமில்லை சங்காழியில்லை (அஷ்டப். திருவேங்கடத்தந். 99). 2. A treatise on šaiva Siddhanta philosophy by Tirumūla-nāyaṉār; |