Word |
English & Tamil Meaning |
---|---|
திருப்பவித்திரமாலை | tiru-p-pavittira-mālai, n. <>id. +. Sacred garland of silk-knots worn by Vaiṣṇavas after first being worn by the idol; கோயில்மூர்த்திக்கட்குச் சாத்தப்பெற்று வைஷ்ணவர் அணியும் பட்டுமுடிச்சு மாலை. |
திருப்பவித்திரோற்சவம் | tiru-p-pavitti-rōṟcavam, n. <>id. +. The annual ceremony in a temple performed with a view to make up past defects of the year; கோயிலில் நிகழும் சம்வற்சரப் பிராயச்சித்தத் திருவிழா. |
திருப்பள்ளித்தாமம் | tiru-p-paḷḷi-t-tāmam, n. <>id. +. Garland for an idol; கோயில்மூர்த்திகட்குச் சாத்தப்படும் மாலை. திருப்பள்ளித்தாமத் திருநந்தவனஞ் செய்யவும் (S. I. I. iii, 211). |
திருப்பள்ளித்தொங்கல் | tiru-p-paḷḷi-t-toṇkal, n. <>id. +. See திருப்பள்ளித்தாமம். (S. I. I. ii, 6.) . |
திருப்பள்ளிபடுத்து - தல் | tiru-p-paḷḷi-paṭuttu-, v. tr. <>id. +. To bury an ascetic; சன்னியாசியை அடக்கஞ்செய்தல். சரம கைங்கரியங்களைச் செய்வித்துத் திருப்பள்ளிபடுத்தி (குருபரம்.184). |
திருப்பள்ளியறை | tiru-p-paḷḷi-y-aṟai, n. <>id. +. Bed-chamber of a deity; கோயில் மூர்த்தி இரவிற் பள்ளிக்கு எழுந்தருளும் அறை. |
திருப்பள்ளியுணர்த்து - தல் | tiru-p-paḷḷi-y-uṭarttu-, n. <>id. +. To sing anbade and request a deity to wake up early in the morning; காலையில் நித்திரைவிட்டெழுமாறு கோயில் மூர்த்தியைப் பாசுரங்களாற் பிரார்த்தித்தல். Loc. |
திருப்பள்ளியெழுச்சி | tiru-p-paḷḷi-y-eḻuc-ci, n. <>id. +. Poem sung for waking up the deity in a temple; கடவுளைத் துயிலெழுப்பும் பாசுரங்கள் அமைந்த் அபிரபந்தம். (திவ்.) |
திருப்பளிக்கம் | tiru-p-paḷikkam, n. Corr. of திருப்படிக்கம். See திருப்படிக்கம், 2. Vaiṣṇ. . |
திருப்பன் | tiruppaṉ, n. See திருப்பம். Nā. . |
திருப்பாட்டு | tiru-p-pāṭṭu, n. <>திரு +. 1. Hymns or songs of a saint in praise of a deity; கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாசுரம். இவ்விரண்டு திருப்பாட்டும் தலைமகள் கூற்றாதலே பொருத்தம். (திருக்கோ.86, உரை). 2. Tēvāram; 3. Satire, lampoon; |
திருப்பாணாழ்வார் | tiru-p-pāṇ-āḻvār, n. <>id. +. A canonised Vaiṣṇava saint, author of Amalaṉātipirāṉ in Nālāyira-p-pirapantam, one of ten āḻvār, q.v.; ஆழ்வார்பதின்மருள் ஒருவரும் நாலாயிரப்பிரபந்தத்துள் அமலனாதிபிரான் என்ற பிரபந்தத்தைப் பாடியவருமான திருமாலடியார். |
திருப்பாவாடை | tiru-p-pāvāi, n. <>id. +. [K. tirupāvāde.] Heap of boiled rice spread on a cloth, as offering to an idol; ஆடைமேல் கோயில்மூர்த்திக்குப் படைக்கும் பெரியநிவேதனம். (கோயிற்பு. திருவி. 24, உரை.) (I. M. P. S. A. 59.) |
திருப்பாவை | tiru-p-pāvai, n. <>id. +. A poem in Nālāyira-p-pirapantam by šrī āṇṭāl; நாலாயிரப்பிரபந்தத்துள் ஸ்ரீஆண்டாள் பாடிய பகுதி. திருப்பாவைப்பல்பதியம் இன்னிசையாற் பாடிக்கொடுத்தாள் (திவ். திருப்பா. தனியன்). |
திருப்பாற்கடல் | tiru-p-pāṟ-kaṭal, n. <>id. +. The ocean of milk, where Viṣṇu sleeps; திருமால் பள்ளிகொண்டருளும் க்ஷீராப்தி. |
திருப்பி 1 | tiruppi, n. <>திருப்பு-. Screw-driver, as turning; ஆணியைத்திருகி யுட்செலுத்தும் ஆயுதவகை. |
திருப்பி 2 | tiruppi, n. Worm-killer. See வட்டத்திருப்பி. (பாலவா. 896.) . |
திருப்பிரம் | tiruppiram, n. <>trpra. Ghee; நெய். (யாழ். அக.) |
திருப்பு 1 - தல் | tiruppu-, 5 v. tr. Caus. of திரும்பு-. [T. tippu, K. tirugisu.] 1. To cause to return; to send back; திரும்பச்செய்தல். பசுமந்தையைத் திருப்பினான். 2. To turn, deflect, cause to turn in a different direction; 3. To twist, wring, distort, as a limb; 4. To translate, render into another language; 5. To revise, as a lesson; 6. To turn upside down, invert; 7. To wind up a clock or watch; 8. To redeem, as a mortgage; 9. To give back, return, restore; 10. To shake, revolve; 11. To cure a disease; to avert a calamity by magic; 12. To send back an evil spirit against one who sent it, by counter magic; 13. To turn over, as the leaves of a book; |