Word |
English & Tamil Meaning |
---|---|
திருநோக்கம் | tiru-nōkkam, n. <>id. +. See திருநோக்கு. . |
திருநோக்கு | tiru-nōkku, n. <>id. +. Gracious look of a deity; auspicious look of a guru in the administration of tīṭcai; கடவுள் குரு முதலாயினாரது அருட்பார்வை. |
திருப்தி | tirupti, n. <>trpti. Satisfaction; மனநிறைவு. |
திருப்திசொல்(லு) - தல் | tirupti-col-, v. intr. <>திருப்தி +. To express satisfaction, as Brahmins fed at the ceremonies for the manes; சிராத்தமுண்டோர் தங்கள் திருத்தியைக் கூறுதல். Brāh. |
திருப்பட்டம் | tiru-p-paṭṭam, n. <>திரு+. Sacred diadem; திருமுடி. (S. I. I. ii, 9.) |
திருப்படி | tiru-p-paṭi, n. <>id. +. Step at the entrance of a temple; கோயிலின் வாசற்படி. Nā. |
திருப்படிக்கம் | tiru-p-paṭikkam, n. <>id. +. Vaiṣṇ. 1. A large vessel to receive the water used in worshipping an idol; ஆராதனத்தில் உபயோகிக்கும் பாத்திரவகை. 2. See திருவடிக்கம். |
திருப்படிமாற்று | tiru-p-paṭimāṟṟu, n. <>id. +. Articles of offering to a deity; கோயில்மூர்த்திகட்கு நிவேதிக்கத்தரும் அரிசிமுதலிய பண்டம். செய்யி லுகுத்த திருப்படிமாற்றதனை யையவிதுவமுது செய்யென்று (திருக்களிற்றுப்.19). |
திருப்படிமாறு - தல் | tiru-p-paṭi-māṟu-, v. intr. <>id. +. To provide for the offerings to a deity; சுவாமிக்கு நிவேதனப்பண்டம் அமைத்தல். விண்ணகராழ்வார்க்குத் திருப்படிமாற அள்ளிட்டு (Insc.). |
திருப்படைவீடு | tiru-p-paṭai-vīṭu, n. <>id. +. Place sacred to a deity; கடவுள் கோயில் கொண்ட தலம். (T. A. S.) |
திருப்பணி | tiru-p-paṇi, n. <>id. +. 1. Service in a temple; கோயிற்கைங்கரியம். (S. I. I. i, 126.) 2. Work of temple-building, repairing, etc.; 3. Temple-income derived from pōrppiccai; |
திருப்பணி - த்தல் | tiru-p-paṇi-, v. tr. <>id. +. To make an elephant stand; யானையை நிற்கப் பண்ணுதல். (யாழ். அக.) |
திருப்பணிமாலை | tiruppaṇi-mālai, n. <>திருப்ணி+. Poem which describes the tiru-p-paṇi of a temple; கோயிற்றிருப்பணி விவரங் கூறும் நூல். |
திருப்பணிமாற்று | tiruppaṇi-māṟṟu, n. <>id. +. Repairs in temples; கோயில் மராமத்து. |
திருப்பணிமுட்டு | tiruppaṇi-muṭṭu, n. <>id. +. Materals for building a temple; temple utensils, implements, vessels; திருப்பணிச்சாமான். (w.) |
திருப்பதி | tiru-p-pati, n. <>திரு +. 1. Any sacred shrine; கடவுள்கோயில் கொண்ட புண்ணியத்தலம். 2. Tirupati, a Viṣṇu shrine; |
திருப்பதிக்கல் | tiruppati-k-kal, n. <>திருப்பதி+. Inferior species of hone-stone of a dark-green colour, novaculite, found near Tiruppati; திருப்பதிக்கருகில் கிடைக்கும் ஒருவகைச் சாணைக்கல். |
திருப்பதிகம் | tiru-p-patikam, n. <>திரு+. 1. Poem generally containing 10 or 11 stanzas in praise of a deity, as in Tēvāram; பெரும்பாலும் பத்து அல்லது பதினொரு செய்யுட்கள் கொண்டதாய்த் தேவாரத்துள்ளது போலத் தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பாடற்றொகை. 2. A poem in praise of Buddha; |
திருப்பதியம் | tiru-p-patiyam, n. <>id.+ padya. See திருப்பதிகம். திருப்பதியம் பாடுவாருள்ளிட்ட பலபணிசெய்வார்க்கு (S. I. I. iii, 94). . |
திருப்பம் | tiruppam, n. <>திரும்பு-. 1. Turning, averting; திரும்புகை. வடபத்திரசாயி முகத்திருப்பங்கொண்டு (குருபரம்.77). 2. Turning, as in a street, crossway; 3. Money-dealing; 4. Kitchen; 5. False hair; |
திருப்பரங்குன்றம் | tiru-p-paraṇ-kuṉṟam, n. <>திரு +. A hill south-west of Madura, sacred to Skanda, one of six paṭai-vīṭu, q.v.; முருகக்கடவுளின் படைவீடு ஆறனுள் ஒன்றும் மதுரைக்குத் தென்மேற்கிலுள்ளதுமான குன்று. (திருமுரு.) |
திருப்பரிவட்டம் | tiru-p-parivaṭṭam, n. <>id. +. 1. A small piece of cloth for dressing an idol; தெய்வத்திற்குச் சாத்தும் ஆடை. 2. Temple-cloth tied on the head of a person by the priest, as a mark of honour; |
திருப்பல்லாண்டு | tiru-p-pallāṇṭu, n. <>id. +. 1. A poem in the ninth tiru-muṟai by Cēntaṉār in praise of šiva; சிவபிரான்மீது சேந்தனார் பாடிய ஒரு பிரபந்தம். 2. A poem in Nālāyira-p-pirapatam by Periyāḻvār; |