Word |
English & Tamil Meaning |
---|---|
திருநாமப்பாலை | tiru-nāma-p-pālai, n. <>id. +. Oval-leaved China root, m.cl., Smilax macrophylla; ஒருவகைப் பூடு. (J.) |
திருநாமம் | tiru-nāmam, n. <>id. +. 1. Sacred name, name of a deity or holy person; தெய்வம் அல்லது பெரியோரின் பெயர்.திருநாம மஞ்செழுத்துஞ் செப்பாராகில் (தேவா.1230, 6). 2. Vaiṣṇava tridental mark on the forehead; 3. Revered person; |
திருநாவுக்கரசுநாயனார் | tiru-nāvuk-karacu-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, 7th c., one of the three Tēvāram hymnists, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவரும் தேவாரத்தின் ஒருபகுதி பாடியவரும் 7- ஆம் நூற்றாண்டினருமான சிவன்டியார். |
திருநாள் | tiru-nāḷ, n. <>id. +. [T. tirunālla.] 1. Day of festival, as a sacred day; உற்சவம். திருநாள் படைநாள் கடிநாள் (பெருங். இலாவாண. 2, 32). 2. Birthday, as of a king; |
திருநாளைப்போவார்நாயனார் | tiru-nāḷai-p-pōvār-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, commonly known as Nantaṉār, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் நந்தனார் எனப்படுஞ் சிவனடியார். (பெரியபு.) |
திருநிலைக்கால் | tiru-nilai-k-kāl, n. <>id. +. Chief pillar supporting the irāya-kōpuram; இராயகோபுரத்தைத் தாங்கிநிற்கும் பிரதானத்தூண் Loc. |
திருநிலைமகளிர் | tiru-nilai-makaḷir, n. <>id. +. Married women; சுமங்கலிகள். தேன்றோய் கோதைத் திருநிலைமகளிர் (பெருங். உஞ்சைக். 54, 6). |
திருநீலகண்டயாழ்ப்பாணநாயனார் | tiru-nīlakaṇṭa-yāḻppāṇa-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, contemporary of Tiru-āṉa-campanta-mūrtti-nāyaṉār, one of 63; நாயன்மார் அறுபத்துமுவருள் திருஞானசம்பந்த மூர்த்திநாயானார் காலத்தில் வாழ்ந்த சிவனடியார். (பெரியபு.) |
திருநீலகண்டன் | tiru-nīla-kaṇṭaṉ, n. <>id. +. (w.) 1. Wicked man; துஷ்டன். 2. A large kind of centipede; |
திருநீலநக்கநாயனார் | tiru-nīla-nakka-nāyaṉār, n. <>id. +. A canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவர். (பெரியபு.) |
திருநீற்றுக்காப்பு | tiru-nīṟṟu-k-kāppu, n. <>திருநீறு +. 1. Sacred ashes rubbed on one's forehead by a great person, as a charm; இரட்சையாகப் பெரியோரால் ஒருவர்கிடப்படும் விபூதி. 2. Sacred ashes; |
திருநீற்றுக்கோயில் | tiru-nīṟṟu-k-kōyil, n. <>id. +. Bag for sacred ashes; திருநீற்றுப்பை. |
திருநீற்றுநானம் | tiru-nīṟṟu-nāṉam, n. <>id. +. Puritication with sacred ashes. See ஆக்கினேயஸ்நானம். திருநீற்றுநான்ஞ் சொலப்படுமால் (திருக்காளத். பு. 26, 29). |
திருநீற்றுப்பச்சை | tiru-nīṟṟu-p-paccai, n. <>id. +. Sweet basil, m.sh., Ocinum basili-cum; செடிவகை. |
திருநீற்றுப்பத்திரி | tiru-nīṟṟu-p-pattiri, n. <>id. +. See திருநீற்றுப்பச்சை. . |
திருநீற்றுப்பழம் | tiru-nīṟṟu-p-paḻam, n. <>id. +. Balls of sacred ashes; விபூதியுண்டை. (w.) |
திருநீற்றுமடல் | tiru-nīṟṟu-maṭal, n. <>id. +. A vessel for keeping sacred ashes; விபூதிவைக்குங் கலம். |
திருநீறு | tiru-nīṟu, n. <>திரு +. Sacred ashes, used for šaivaite mark; விபூதி. எவரேனுந்தாமாக விலாடத்திட்ட திருநீறும். (தேவா. 811, 3). |
திருநுந்தாவிளக்கு | tiru-nuntā-viḷakku, n. <>id. +. See திருநந்தாவிளக்கு. (Insc.) . |
திருநூற்றந்தாதி | tiru-nūṟṟantāti, n. <>id. +. An antāti poem on Arhat by Avirōti-y-āḻvār; அருகக்கடவுண்மேல் அவிரோதியாழ்வார் இயற்றிய ஓர் அந்தாதிநூல். |
திருநெடுந்தாண்டகம் | tiru-neṭun-tāṇṭa-kam, n. <>id. +. 1. A Poem in Nālāyira-p-pirapantam by Tirumaṇkai-y-āḻvār; நாலாயிர திவயப்பிரபந்தத்தில் திருமங்கைமன்னன் இயற்றிய ஒரு பகுதி. 2. Tēvāram decads in tāṇṭakam metre of eight cīr; |
திருநெல்வேலி | tiru-nel-vēli, n. <>id. +. Tinnevelly, a šiva shrine in Pāṇṭi-nāṭu; பாண்டி நாட்டுள்ள ஒரு சிவதலம். (தேவா.) |
திருநெற்றிமாலை | tiru-neṟṟi-mālai, n. <>id. +. Garland for the forehead of an idol; கோயில்மூர்த்தியின் நெற்றியில் அணியும் மாலை. (w.) |
திருநொந்தாவிளக்கு | tiru-nontā-viḷakku, n. <>id. +. See திருநந்தாவிளக்கு. (Insc.) . |