Word |
English & Tamil Meaning |
---|---|
திருந்தகைமை | tiruntakaimai, n. perh. திருந்து-+தகை-மை. Superiority, excellence; மேன்மை. (J.) |
திருந்தலர் | tiruntalar, n. <>id. + அல் neg. +. See திருந்தார். (பிங்.) . |
திருந்தார் | tiruntār, n. <>id. + ஆ neg. +. Foes, enemies; பகைவர். திருந்தார் தெம்முனை. (பு. வெ. 3, 23, கொளு). |
திருந்தியவொழுக்கம் | tiruntiya-v-oḻuk-kam, n. <>id. +. Up right conduct, a characteristic of the Vēḷāḷas; வேளாண்மாந்தரியல்புகளுள் ஒன்றாகிய நேர்மையான ஒழுக்கம். (திவா.) |
திருந்திழை | tiruntiḻai, n. <>id. + இழை. Woman, as adorned with jewels; [அழகிய ஆபரணம் அணிந்தவள்] பெண். திருந்திழை கணவ (பதிற்றுப். 24, 11). |
திருந்தினர் | tiruntiṉar, n. <>id. Up right persons, persons of good character; ஒழுக்கமுள்ளவர். திருந்தினர் விட்டார் திருவி னரகம் (திருமந். 2339). |
திருந்து - தல் | tiruntu-, 5v. intr. [K. tindu.] 1. To be correct, perfect; செவ்விதாதல். திருந்து வேதமும் (திவ். திருவாய். 6, 5, 8). 2. To be amended, improved, reformed, as a person; to be settled, as hand-writing; to be trained, as the tongue of a child; 3. To be repaired, renovated; 4. To be improved, as land, soil, situation; 5. To be disciplined, as the mind; to be educated, cultivated, experienced, proficient; 6. To be finished artistically; 7. To be beautiful, elegant; 8. To be worthy, honourable; |
திருநகர் | tiru-nakar, n. <>திரு +. Wealthy, prosperous city; செல்வநகரம். செறிகழலவன்றிருநகர் புகுதர (திருக்கோ. 350, கொளு). |
திருநட்சத்திரம் | tiru-naṭcattiram, n. <>id. +. 1. Asterism under which a saint or a great person is born; பெரியோர் பிறந்த நட்சத்திரம். 2. (šaiva.) Asterism under which a saint or a great person died; 3. Age; |
திருநடனம் | tiru-naṭaṉam, n. <>id. +. See திருக்கூத்து, 1. . |
திருநடைமாளிகை | tiru-naṭai-māḷikai, n. <>id. +. The procession path round a shrine; கோயிற் பிராகாரம் (I. M. P. Tj. 1237.) |
திருநந்தவனம் | tiru-nantavaṉam, n. <>id. +. Flower-garden of a temple; கோயில் நந்தவனம். (S. I. I. i, 135.) |
திருநந்தாவிளக்கு | tiru-nantā-viḷakku, n. <>id. +. Perpetual lamp before the chief idol in temple; சுவாமி திருமுன் எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்குந் திருவிளக்கு. திருந்தாவிளக்கு ... சந்திரா தித்தவரையுந் செல்லும்படிக்கு. (S. I. I. i. 79.) |
திருநயனந்துயில் (லு) - தல் | tiru-nayaṉan-tuyil-, n. <>id. +. To sleep, as a deity; கடவுளர் முதலியோர் துயில் கொள்ளுதல். திருநயனந் துயில்வோய் (அஷ்டப். திருவரங். கலம்.1). |
திருநல்லியாண்டு | tiru-nal-l-i-yāṇṭu, n. <>id. +. Prosperous, regnal year; சுபகரமான ஆட்சி வருடம். ஸ்ரீகரிகாலசோழதேவர்க்கு ... திருநல்லியாண்டு. 2-ஆவது (S. I. I. v, 84). |
திருநலியாண்டு | tiru-nal-i-yāṇṭu, n. See திருநல்லியாண்டு. (S. I. I. v, 83.) . |
திருநா | tirunā, n. Common bottle-flower. See பாவட்டை. (L.) |
திருநாடலங்கரி - த்தல் | tiru-nāṭalaṅkari-, v. intr. <>திருநாடு+. Lit., to adorn Vaikuṇṭam. To die, used euphemistically of a great person; [வைகுண்டத்தை அலங்கரித்தல்] நற்கதியடைதல். Vaiṣṇ. |
திருநாடு | tiru-nāṭu, n. <>திரு +. Viṣṇu's heaven; வைகுண்டம். தெளிவிசும்பு திருநாடாத் தீலினையேன் மனத்துறையும் (திவ். திருவாய்.9, 7, 5). |
திருநாப்பழம் | tirunāppaḻam, n. See திருநா. . |
திருநாமக்கத்திரி | tiru-nāma-k-kattiri, n. <>திரு+நாமம்+. Russell's viper, Vipera russelli; பாம்புவகை. (w.) |
திருநாமக்காணி | tiru-nāma-k-kāṇi, n. <>id. +. See திருநாமத்துக்காணி. (I. M. P. N. A. 169.) . |
திருநாமச்செடி | tiru-nāma-c-ceṭi, n. <>id. +. Indian worm-wood, 1.sh., Artemisia vulgars; செடிவகை. (L.) |
திருநாமத்துக்காணி | tiru-nāmattu-k-kāṇi, n. <>id. +. Land assigned to a deity, as bearing his name; temple land; தேவதான நிலம். நாயனார் திருமாநத்துக்காணியு மாறி (S. I. I. i, 118). |
திருநாமத்துத்தி | tiru-nāma-t-tutti, n. <>id. +. Lobed-leaved Mysore mallow, m.sh., Decaschistia trilobata; செடிவகை. (L.) |
திருநாமப்பாட்டு | tiru-nāma-p-pāṭṭu, n. <>id. +. Last stanza of a poem in which its author states his own name and the merit accruing from reciting his poem; இயற்றியவர் பெயர் பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப்பாட்டு. Vaiṣṇ. |