Word |
English & Tamil Meaning |
---|---|
திருவாங்கு - தல் | tiru-vāṅku-, v. intr. <>id. +. To remove the tāli when a woman becomes a widow; தாலிவாங்குதல். வாங்கு திருவாங்கி (பணவிடு.). |
திருவாச்சி | tiru-vācci, n. perh. id.+வாழ்-. Yellow oleander. See சீமையலரி. . |
திருவாசகம் | tiru-vācakam, n. <>id. +. The celebrated poem in praise of šiva by Māṇikka-vācakar; வாதவூரடிகள் அருளிய துதிநூல். வாதவூரெங்கோன் றிருவாசகமென்னுந் தேன் (திருவாச. நூற்சிறப்பு). |
திருவாசல் | tiru-vācal, n. <>id. +. 1. Gate or doorway of a temple directly in front of the chief idol; ஆலயத்துட் சந்நிதிவாயில். திருவாசல் காக்கும் முதலிகளும் (அஷ்டாதச. முமுட்சு. 1, 97). 2. Gate of heaven, usually on the north side of a Viṣṇu temple; 3. Rest-house built from religious motives; 4. Village munsiff's office; |
திருவாசி | tiru-vāci, n. <>id. +. See திருவாசிகை. ஓங்காரமே நற்றிருவாசி (உண்மைவிளக். 34). . |
திருவாசிகை | tiru-vācikai, n. <>id. +. 1. Ornamental arch over the head of an idol, ornamental arch under which anything sacred is carried; வாகனப்பிரபை முதலியன. பகர்திருவாசிகை யரிபயில்பீடம் (கோயிற்பு. திருவிழா. 28). 2. A kind of garland; |
திருவாசிரியம் | tiru-v-āciriyam, n. <>id. +. A poem in Nālāyira-p-pirapantam by Nammāḻ-vār; நாலாயிரப்பிரபந்தத்துள் நம்மாழ்வாரருளிய பிரபந்தங்களுள் ஒன்று. (திவ்.) |
திருவாட்சி | tiru-vāṭci, n. See திருவாசி. . |
திருவாட்டி | tiru-v-āṭṭi, n. Fem. of திருவாளன். Lady of wealth and position; செல்வி. கயிலைக்கட்பயிலுந் திருவாட்டியை (திருக்கோ. 294, உரை). |
திருவாடுதண்டு | tiru-v-āṭu-taṇṭu, n. <>திரு +. 1. Poles of temple vehicles; கோயில் வாகனக் காவுதண்டு. 2. A kind of palanquin; |
திருவாண்டெழுத்திடு - தல் | tiru-v-āṇṭ-eḻuttiṭu, n. <>id. +. To date an evert from the time of a king's accession; அரசன் முடிசூடியகாலத்தொடங்கி வருடக்கணக்கிட்டெழுதுதல். (Insc.) |
திருவாணை | tiru-v-āṇai, n. <>id. +. Royal order; அரசாணை. திருவாணைக்குந் திருவோலைக்கும் உரியவண்ணம் (S. I. I. iii, 102). |
திருவாணையிடு - தல் | tiru-v-āṇai-y-iṭu-, v. intr. <>திருவாணை+. To swear by the king's name; அரசன்மீது ஆணையிடுதல். என்னை அவன் திருவாணையிட்டு மறுத்தான். Nā. |
திருவாத்தி | tiru-v-ātti, n. <>திரு+. Holy mountain ebony. See ஆத்தி. கடிசேர் திருவாத்தியி னீழல் (பெரியபு. சிறுத். 46). . |
திருவாதவூர் | tiru-v-ātti, n. <>id. +. The birth-place of Māṇikka-vācakar in Madura District; மதுரைஜில்லாவிலுள்ளதும் மாணிக்கவாசகர் அவதரித்ததுமான தலம். திருவாதவூர்மகிழ் செழுமறை முனிவர் (திருக்கோ. 1, உரையகவல்). |
திருவாதவூரடிகள் | tiru-vāta-v-ūr-aṭikaḷ, n. <>id. +. See திருவாதவூரர். . |
திருவாதவூரர் | tiru-vātavūrar, n. <>id. +. Māṇikka-vācakar, as born in Tiruvātavūr; [திருவாதவூரிற் பிறந்தவர்] மாணிக்கவாசகசுவாமிகள். |
திருவாதவூரர்புராணம் | tiru-vātavūrar-purāṇam, n. <>id. +. A poem on the life and history of Māṇikka-vācakar by Kaṭavuṇmā-muṉivar; மாணிக்கவாசகரது சரிதம்பற்றிக் கடவுண்மா முனிவர் இயற்றிய புராணம். |
திருவாதிரை | tiru-v-ātirai, n. <>id.+ ārdrā. 1. The 6th nakṣatra, part of Orion; ஆறாவது நட்சத்திரம். (பிங்.) 2. A festival in the month of Mārkaḻi. See ஆருத்திராதரிசனம். 3. A special ceremony observed on the day of āruttirā-taricaṉam before a girl's marriage when she is given a bath and decorated; |
திருவாதிரைக்களி | tiru-v-ātirai-k-kaḷi, n. <>id. +. A savoury dish of rice, jaggery and other ingredients specially prepared for the tiruvātirai festival; திருவாதிரைத் திருநாளில் அரிசி வெல்லம் தேங்காய் முதலியவற்றாற் செய்யப்படும் ஒரு வகை இனிய சிற்றுண்டி. |
திருவாதிரைநாச்சியார் | tiru-v-ātirai-nācciyār, n. <>id. +. Pārvatī; பார்வதிதேவி. |
திருவாபரணம் | tiru-v-āparaṇam, n. <>id. +. Jewels of an idol; கடவுளர் அணியும் அணிகலம். செஞ்சடையான் பூணுந் திருவாபரணமே (தனிப்பா. i, 128, 7). |