Word |
English & Tamil Meaning |
---|---|
திருவிளம் | tiruviḷam, n. (மலை.) 1. Indian chickweed. See திராய். . 2. True jalap. See சிவதை. |
திருவிளையாட்டு | tiru-viḷai-y-āṭṭu, n. <>திரு +. See திருவிளையாடல். . |
திருவிளையாடல் | tiru-viḷai-y-āṭal, n. <>id. +. 1. Sacred sports of a deity; தெய்வல¦லை. 2. See திருவிளையாடற்புராணம். 3. Amorous acts; |
திருவிளையாடற்புராணம் | tiru-viḷaiyāṭaṟ-purāam, n. <>id. +. A Purāṇa on the 64 sports of šiva at Madura by Paracōti-muṉivar; மதுரைச்சிவபிரானது அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் குறித்துப் பரஞ்சோதிமுனிவர் பாடிய புராணம். |
திருவினாள் | tiruviṉāḷ, n. <>id. Lakṣmī; இலக்குமி. போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் (சிலப். 1, 26). |
திருவினை | tiru-viṉai, n. <>id. +. Good karma; நல்வினை. திருவினையாண்பாலாக (உபதேசகா. பஞ்சாக். 58). |
திருவீதியலங்கரி - த்தல் | tiru-vīti-y-alaṅ-kari-, v. intr. <>id. +. To go out in procession, as a deity gracing the streets by His presence; கோயில்மூர்த்தி புறப்பாடாக வருதல். பெருமாள் திருவீ தியலங்கரிக்கிறார். Vaiṣṇ. |
திருவுடம்பு | tiru-v-uṭampu, n. <>id. +. 1. Divinely beautiful body; திவ்ய சரீரம். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப். 18). 2. idol; |
திருவுண்ணாழி | tiru-v-uṇṇāḻi, n. <>id. +. See திருவுண்ணாழிகை. (Insc.) . |
திருவுண்ணாழிகை | tiru-v-uṇṇāḻikai, n. <>id. +. Innermost sanctuary of a temple. See உண்ணாழிகை. திருவுண்ணாழிகையுடையார்வசமே நாள்தோறும் அளக்கக்கடவேம் (S. I. I. i, 143). . |
திருவுந்தியார் | tiru-v-untiyār, n. <>id. +. A text-book of the šaiva Siddhants philosophy by Tiruviyalūr Uyyavantatēva-nāyaṉār, one of 14 mey-kaṇṭa-cāttiram, q.v.; மெய்கண்ட சாத்திரம் பதினான்கனுள் ஒன்றும் திருவியலூர் உய்யவந்ததேவநாயனார் இயற்றியதுமாகிய சைவசித்தாந்த நூல். |
திருவுரு | tiru-v-uru, n. <>id. +. 1. Divine form; divine presence; திவ்யரீரம். அருளாயுன் றிருவுருவே (திவ். திருவாய். 5, 10, 7). 2. Idol, image; |
திருவுழுத்து | tiru-v-uḻuttu, n. <>id. + prob. உருட்டு. An ornament; அணிவகை. இரட்டைத் திருவுழுத்து ஓரணையினால் (S. I. I. ii, 16). |
திருவுள்ளக்கலக்கம் | tiru-v-uḷḷa-k-kalak-kam n. <>திருவுள்ளம்+. Displeasure of great persons; பெரியோர் மனஸ்தாபம். Loc. |
திருவுள்ளக்கேடு | tiru-v-uḷḷa-k-kēṭu, n. <>id. +. See திருவுள்ளக்கலக்கம். Nā. . |
திருவுள்ளம் | tiru-v-uḷḷam, n. <>திரு+. Will or pleasure of God, king guru or other great person; அரசன் குரு முதலிய பெரியோரது உள்ளக்கருத்து. |
திருவுளக்குறிப்பு | tiru-v-uḷa-k-kuṟippu, n. <>திருவுளம்+. See திருவுள்ளம். (சி. போ. பா. 6, 2, பக். 318.) . |
திருவுளச்சீட்டு | tiru-v-uḷa-c-cīṭṭu, n. <>id. +. Lot cast or drawn, believed to disclose the divine will; குலுக்கிப்போட்டெடுத்தல் முதலிய வகையால் தெய்வசித்தமறியுஞ் சீட்டு. |
திருவுளச்செயல் | tiru-v-uḷa-c-ceyal, n. <>id. +. God's will, providence, providential occurrence; தெய்வச்செயல். (w.) |
திருவுளத்தடை - த்தல் | tiru-v-uḷattaṭai-, v. tr. <>id. +. To keep in mind; to intend, said of a deity or a great person; மனத்திற் கொண்டருளுதல். (சிலப். 13, 88, அரும்.) |
திருவுளப்பாங்கு | tiru-v-uḷa-p-pāṅku, n. <>id. +. See திருவுள்ளம். எவ்வகைநி றிருவுளப் பாங்கிருப்ப தெளியேனளவில் (அருட்பா, vi, குருதரிசனப். 47). . |
திருவுளம் | tiru-v-uḷam, n. See திருவுள்ளம். திருவுளமெனின் மற்றென் சேனையுமுடனே (கம்பரா. கங்கை. 67). . |
திருவுளம்பற்று - தல் | tiru-v-uḷam-paṟṟu-, v. tr. <>திருவுளம்+. 1. To accept graciously; ஏற்றுக்கொள்ளுதல். 2. See திருவுளத்தடை-. (சிலப். 13, 97, உரை.) 3. To be pleased to hear; 4. To intend, consider; 5. To speak; to be pleased to speak, as a deity; |
திருவுளம்வை - த்தல் | tiru-v-uḷam-vai-, v. <>id.+. intr. 1. To bestow, vouchsafe, grace, as a deity or guru; அருளுதல். 2. To conceive desire, said of a great person; |