Word |
English & Tamil Meaning |
---|---|
அனுகூலன் | aṉukūlaṉ n. <> id. One who is friendly or helpful; இதமாக நடப்பவன். (திவ்.பெரியாழ்.4, 4, 2.) |
அனுகூலி 1 - த்தல் | aṉukūli- <> id. 11 v.intr. 1. To end successfully; பயன்படுதல். 2. To take a favourable turn; To be favourable to, to favour; |
அனுகூலி 2 | aṉukūli n. <> id. One who is friendly or helpful; அன்கூலமாயிருப்பவன்-ள். |
அனுங்கு - தல் | aṉuṅku- 5 v.intr. [K.aṇuṅgu.] 1. To suffer pain, to be in distress; வருந்துதல். பஞ்சனுங் கடியினார் (சூளா.நகர.25) 2. To fade, wither, droop; 3. To perish; 4. To mumble, mutter, moan; 5. To be touched undesignedly as in the kokkāṉ play, causing a forfeit; 6. To be reluctant, unwilling, backward; |
அனுச்சை | aṉuccai n. <>anu-jā. Permission. See அனுஞ்ஞை. அரசனு மனுச்சை செய்ய (திருவிளை. சமணரை. 10). |
அனுசந்தானம் | aṉucantāṉam n. <> anusam-dhāna. 1. Contemplation; சிந்திக்கை. (ஞானவா.உத்தால.3) 2. Continued utterance of prayers and incantations; |
அனுசந்தி - த்தல் | aṉucanti- 11 v.tr. <> anu-sam-dhā. 1. To contemplate, meditate; சிந்தித்தல். 2. To say, express; |
அனுசயம் | aṉucayam n. <> anu-šaya. Repentance; பச்சாத்தாபம். அனுசயப்பட்டது விதுவென்னாதே (தேவா.784, 6). |
அனுசரணம் | aṉucaraṇam n. <> anu-saraṇa. Following, going after; சார்ந்தொழுகல். (கோயிலொ.13.) |
அனுசரணை | aṉucaraṇai n. <> id. 1. Following, going after; சார்ந்தொழுகை. 2. Support, help; |
அனுசரி - த்தல் | aṉucari- 11 v.tr. <> anu-sara. 1. To follow, practise; பின்பற்றுதல். 2. Support, second; 3. To worship, reverence; 4. To celebrate, keep, as a day, observe, as a rite; |
அனுசரிப்பு | aṉucarippu n. <>id. 1. Following, observing; பின்பற்றுகை. 2. Conformity; |
அனுசன் | aṉucaṉ n. <> anu-ja. Younger brother; தம்பி. (பிங்.) |
அனுசாகை | aṉu-cākai n. <> anu-šākhā. Secondary branch, twig; கிளைக்குட்கிளை. (S.I.I.I.i, 201.) |
அனுசாசனம் | aṉucācaṉam n. <> anu-šāsana. Precept, instruction; உபதேசம். அனுசாசன பருவம். |
அனுசாரணை | aṉucāraṇai n. prob. anu-sāriṇī. Secondary string of a lute, as subsidiary; வீணையின் பக்க நரம்பு. |
அனுசாரம் 1 | aṉucāram n. anu-cāra. Retrogression of a planet; கிரகவக்கிரம். (W.) |
அனுசாரம் 2 | aṉucāram adv. <> anu-sāra. In accordance with, in conformity to; ஒத்தபடி. கர்மானுசாரம். |
அனுசாரி | aṉucāri n. <> anu-sārin. Adherent, follower, usually in compounds; பின்பற்றுவோன். நேசானுசாரியாய் விவகரிப்பேன் (தாயு.பரிபா.1). |
அனுசிதம் | aṉucitam n. <> an-ucita. 1. That which is unfit, improper; தகாதது. யானை யனுசிதமென் றதனைச் சிதைக்க (பெரியபு.கோசெங்.4.) 2. Falsehood; 3. Vomiting; |
அனுசுருதி | aṉu-curuti n. <> anu-šruti. (Mus.) Note assonant and harmonious with the curuti; ஒத்த சுருதி. (சீவக.657, உரை.) |
அனுசூதன் | aṉucūtaṉ n. <> anu-syūta. One whose connection is regular and uninterrupted; விடாது தொடர்ந்திருப்பவன். (வேதா.சூ.99.) |
அனுசை | aṉucai n. <> anu-jā. Younger sister; தங்கை. |
அனுசைவர் | aṉu-caivar n. <> anu-šaiva. Saiva initiates among Kṣatryās or Vaišyās; சிவதீஷை பெற்ற க்ஷத்திரிய வைசியர். (சைவச.பொது.435, உரை.) |
அனுஞ்ஞாலங்காரம் | aṉuālaṅkāram n. <>anu-jā+alaṅkāra. Figure of speech in which an undersirable thing is counted as ultimately leading to something desirable; வேண்டலணி. (அணியி.71.) |
அனுஞ்ஞை | aṉuai n. <> anu-jā. 1. Permission, command, leave to go; அனுமதி. 2. Presents to Brāhmans at the commencement of a ceremony to obtain their permission to proceed with it; |
அனுஞை | aṉuai n. See அனுஞ்ஞை. தன்னனுஞையாலே (திருவிளை.தீர்.த்.15). |