Word |
English & Tamil Meaning |
---|---|
அனு 1 | aṉu n. <> anu. 1. Act in return; பிரதிச்செயல். மற்றிதற்கோ ரனுவே யென்ன (பாரத.பதினொ.37); 2. Alliteration; A Skt. prefix meaning 'after'; |
அனு 2 | aṉu n. <> hanu. Jaw; தாடை. நின்னனு வற்றிடலா லனுமனெனும் பேர்பெற்று (உத்தரரா. அனுமப். 34). |
அனுக்கம் | aṉukkam n. <>அனுக்கு-. 1. Suffering, distress, pain, grief; வருத்தம். மனமனுக்கம்விட (கம்பரா. கைகேசி.52). 2. Infantile sickness; 3. Weakness, as from fever, lethargy, indolence; 4. Mumbling, moaning, groaning ; 5. Embellishment in singing or music; 6. Fear; |
அனுக்காட்டு - தல் | aṉu-k-kāṭṭu- v.intr. anu+. 1. To appar slightly; சிறிது தோன்றுதல். காய்ச்சல் அனுக்காட்டிற்று. (J.) 2. To give a slight hint; |
அனுக்கிரகம் | aṉu-k-kirakam n. anugraha. 1. Grace, mercy; அருள். 2. Function of showing grace, designed to liberate the souls from bondage, one of paca-kiruttiyam, q.v.; |
அனுக்கிரகி - த்தல் | aṉukkiraki- 11 v.tr. <> id. To show favour to, bestow grace upon, have mercy on; அருள்செய்தல். |
அனுக்கிரமணி | aṉukkiramaṇi n. <> anukramaṇī. Table of contents, index showing the successive contents of a work; நூற்பதிகம். (மச்சபு.அனுக்கிர.1.) |
அனுக்கிரமம் | aṉukkiramam n. <> anukrama. Order, regularity; கிரமம். (W.) |
அனுக்கு - தல் | aṉukku- 5 v.tr. caus.of அனுக்கு- 1. To distress, cause to suffer, oppress; வருத்துதல். (உபதேசகா.சிவவிரத.381) 2. To ruin; 3. To touch or strike undesignedly, as in the kokkāṉ play; |
அனுக்குசிரம் | aṉukku-ciram n. <>அனுக்கு-+ siras. (Nāṭya.) Violent quivering of the head imitating a fit; சிர அபிநயவகை. (பரத.பாவ.78.) |
அனுக்கை | aṉukkai n. <> anu-jā. Permission, leave to depart; அனுஞ்ஞை. சோம சுந்தரனனுக்கையால் (கடம்ப.பு.தீர்த்த.2). |
அனுகதம் | aṉukatam n. <> anu-gata. That which follows or comes after; தொடர்ந்து வருவது. அனுகதமா யப்பொழுதே . . . பார்வைகள் வந் தடையும். (ஞானாவா.தாசூர்.21). |
அனுகம் | aṉukam n. Red sanders. See செஞ்சந்தனம். (மூ.அ.) |
அனுகம்பம் | aṉukampam n. <> anukampā. Sympathy, compassion, fellow-feeling; இரக்கம். அனுகம்பம்... உடையரே சிறந்தார் (சிவதரு.பல.39). |
அனுகமனம் | aṉukamaṉam n. <> anugamana. Sati; உடன்கட்டையேறுகை. |
அனுகரணம் | aṉukaraṇam n. anukaraṇa. Imitation; ஒன்றன் செயல்போலச் செய்கை. |
அனுகரணவுபயவோசை | aṉukaraṇa-v-upaya-v-ōcai n. <> id.+. Imitation of repeated syllables or sounds, as திடுதிடெனல்; இரட்டையொலிக்குறிப்பு. (பிங்.) |
அனுகரணவோசை | aṉukaraṇa-v-ōcai n. <> id.+. Imitative syllabic sounds, onomatopoeia; ஒலிக்குறிப்பு. (பிங்.) |
அனுகற்பம் | aṉukaṟpam n. <> anu-kalpa. (Saiva.) Generally a less stringent alternative to a rule, here applied to the sacred ashes prepared according to rule from cowdung picked up in pasture lands, one of three vipūti, q.v.; மந்தையினின் றெடுத்த பசுவின் சாணத்தைக்கொண்டு முறைப்படி யுண்டாக்கிய விபூதி. இனியனுக்கற்பந்தனையும் ...கூறுவம். (சைவச.பொது.179). |
அனுகாரம் | aṉukāram n. <> anu-kāra. Imitation; ஒன்றைப்போலச் செய்கை. (திவ்.திருப்பா.வ்யா.ப்ர.) |
அனுகுணம் | aṉukuṇam n. <> anu-guṇa. That which is congenial to, in conformity with; ஏற்பவுள்ளது. அவைக் கனுகுணமாம் (திருவிளை.வேதத்து.41). |
அனுகுணாலங்காரம் | aṉukuṇālaṅkāram n. <> id.+alaṅkāra. Figure of speech in which the standard of comparison is said to be improved in quality by association with the subject of comparison; தன்குணமிகையணி. (அணியி.78.) |
அனுகூலசத்துரு | aṉukūla-catturu n. anu-kūla+. Enemy in the guise of a friend; அடுத்துக்கெடுக்கும் பகை. அநுகூலசத்துருவான பூதனையை நசித்து (திவ்.திருவாய்.4, 3, 4, பன்னீ.) |
அனுகூலம் | aṉukūlam n. <> id. 1. Good, blessing; நன்மை. 2. Friendly assistance, kindness; 3. Success, prosperity; |