Word |
English & Tamil Meaning |
---|---|
அனற்பொறி | aṉaṟ-poṟi n. <>id.+. Spark of fire; தீப்பொறி. (திவா.) |
அனற்று - தல் | aṉaṟṟu- caus. of அனல்-. 5 v.tr. 1. To heat, make hot; தகித்தல். சூரியவெப்பந் தேகத்தை அனற்றுகிறது. 2. To burn, consume with fire; 3. To affect with colic pains, used impersonally; 4. To be angry with; 5. To give in vain, as to a worthless person; To moan, groan with pain; |
அனன்னியகதி | aṉaṉṉiya-kati n. <>an-anya+. One who has no other refuge, 'than God' being implied; வேறுகதியற்றவன். ஐயோ இவன் அனன்னியகதி. (ஈடு.9, 8, 7). |
அனன்னியம் | aṉaṉṉiyam n. <>an-anya. Identical thing; வேறன்மை. கடத்தொடுமட் கனன்னியம் (வேதா.சூ.127). |
அனன்னியார்ஹம் | aṉaṉṉiyārham n. <>id.+arha. That on which none else has a claim; வேறொருவர்க்கு உரிமையாகாமலிருப்பது. (திவ்.திருவாய்.6, 1, 1, பன்னீ.) |
அனன்னுவயாலங்காரம் | aṉaṉṉuvayālaṅkāram n. <>an-anvaya+alaṅkāra. Figure of speech in which a thing is compared to itself, to imply that it is matchless; இயைபின்மையணி. (அணியி.2.) |
அனனிலம் | aṉaṉilam n. <>அனல்+நிலம். Desert tract; பாலைநிலம். (திவா.) |
அனாகதம் 1 | aṉākatam n. <>an-ā-gata. (Mus.) Variety of kirakam. See அனாகதவெடுப்பு. (பரத.தாள.44.) |
அனாகதம் 2 | aṉākatam n. <>an-ā-hata. (yōga.) A cakra in the body, described as a twelve-petalled lotus, situate above maṇipūrakam and in the region of the heart, one of āṟātāram, q.v.; ஆறதாரங்களு ளொன்று. |
அனாகதவெடுப்பு | aṉākata-v-eṭuppu n. <>an-ā-gata+. (Mus.) Variety of eTuppu, q.v., in which the song begins after the principal beat of the time-measure; தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக எடுப்புவகை. |
அனாகுலன் | aṉākulaṉ n. <>anākulaṉ. One who is collected, self-possessed, not perplexed or confused; கவலையற்றவன். அறிவனனாகுலன். (ஞானா.10). |
அனாசாரம் | aṉācāram n. <>an-ācāra. Departure from established usage, improper conduct; துராசாரம். அடியார் எய்த வனாசாரம் பொறுத்தருளி. (தேவா.1072, 5). |
அனாசி | aṉāci n. <>Port. ananas. Pine-apple, Ananas sativus; அன்னாசி. (மூ.அ.) |
அனாதரம் | aṉātaram n. <>an-Adara. Indifference, contempt, disregard; உபேட்சை. |
அனாதரவு | aṉātaravu n. <>id. Helplessness உதவியின்மை. |
அனாதரி - த்தல் | aṉātari- 11 v.tr. <>id. To treat with indifference or contempt; அலட்சியம் பண்ணுதல். |
அனாதி | aṉāti n. <>an-ādi. 1. That which has no beginning; தொடக்கமில்லாதது. அனாதியேக தத்துவ சொரூபத்தை (தாயு.பரசிவ.3). 2. That which is immemorial; 3. God, who has no beginning; 4. Siva; |
அனாதிக்கரம்பு | aṉāti-k-karampu n. <>id.+. See அனாதித்தரிசு. (C.G.) |
அனாதிகாரணம் | aṉāti-kāraṇam n. <>id.+. Beginningless cause as existing from eternity; மூல காரணம். அனாதிகாரணமாகிய மாயை. (நன்.58, விருத்.) |
அனாதிசித்தன் | aṉāti-cittaṉ n. <>id.+siddha. The eternally perfect one; அனாதியே சித்தனாயிருப்பவன். சீவன் அனாதி சித்தனும், முத்தனும், பெத்தனு மென மூவகைப்படும் (சி.போ.பா.அவைய.பக்.11). |
அனாதிசைவம் | aṉāti-caivam n. <>id.+. Saiva sect which emphasises the fact that pati, pašu, and pāša, or God, soul, and bond are eternal, one of 16 caivam, q.v.; சைவம் பதினாறனுள் ஒன்று. |
அனாதிசைவன் | aṉāti-caivaṉ n. <>id.+. The Sadāšiva manifestation of Siva, as one without beginning; சதாசிவ மூர்த்தி. (சைவச.பொது.435, உரை.) |
அனாதித்தரிசு | aṉāti-t-taricu n. <>id.+. Immemorial waste land; நெடுங்காலம். சாகுபடியில்லாத நிலம். |
அனாதிநாதர் | aṉāti-nātar n. <>id.+. A great Siddha, one of the nava-nāta-cittar; நவநாத சித்தருளொருவர். (சது.) |
அனாதிநித்தம் | aṉāti-nittam n. <>id.+. That which has no beginning and no end; என்றும் நித்தியமாயுள்ளது. மூலகன்மமொன்று அநாதிநித்தமா யுண்டு (சி.போ.சிற்.2, 2, பக்.65). |
அனாதிப்பஞ்சர் | aṉāti-p-pacar n. <>id.+U. banjar <>vandhyā-dharā. See அனாதித்தரிசு. (C.G.) |