Word |
English & Tamil Meaning |
---|---|
அனதிகாரி | aṉatikāri n. <>an-adhikā-rin. One who is not duly qualified or competent; உரிமைபெறாதவன். மேல்வினை கூடா தனதிகாரி யாதலினால் (வேதா.சூ.162). |
அனந்தசத்தி | aṉanta-catti n. <>an-anta+. Limitless power, omnipotence; வரம்பிலாற்றல். சுதந்திரதை குறையாமல் வளர்சத்தி யனந்தசத்தி (கூர்மபு.பிரபஞ்ச.6). |
அனந்தசதுட்டயம் | aṉanta-catuṭṭayam n. <>id.+. (Jaina.) The four anantas or divine attributes obtained by the soul in the final state of liberation, viz., அனந்தஞானம், அனந்ததரிசனம், அனந்தவீரியம், அன்நதசுகம். (சீவக.2846. உரை.) |
அனந்தசதுர்த்தசி | aṉanta-caturttaci n. <>id.+. The 14th day of the bright fortnight of Bhādrapada, when Viṣṇu is worshipped; விஷ்ணுவைப் பூசித்தற்குரிய பாத்திரபதமாக சுக்கில பட்ச சதுர்த்தசிதினம். |
அனந்தசயனம் | aṉanta-cayaṉam n. <>id.+. 1. Couch of Viṣṇu consisting of the coils of Adišēṣa; ஆதிசேஷனாகிய திருமால் படுக்கை. 2. Trivandrum, as the seat of the shrine wherein Viṣṇu is represented as reclining on the serpent Adišēṣa; |
அனந்தசயனன் | aṉanta-cayaṉaṉ n. <>id.+. Viṣṇu, as reclining on Adišēṣa; திருமால். (திவ்.பெரியாழ்.1, 7, 2.) |
அனந்தசாயி | aṉanta-cāyi n. <>id.+šāyin. See அனந்தசயனன். (பாரத.பதினைந்.8.) |
அனந்தசுகம் | aṉanta-cukam n. <>id.+sukha. Limitless bliss; கடையிலாவின்பம். (சீவக.2846, உரை.) |
அனந்தஞானம் | aṉanta-āṉam n. <>id.+. Limitless knowledge; கடையிலாவறிவு. (சீவக.2846, உரை.) |
அனந்தஞானி | aṉanta-āṉi n. <>id.+. Arhat, as all knowing; அருகன். (சூடா.) |
அனந்ததரிசனம் | aṉanta-taricaṉam n. <>id.+. Limitless vision; கடையிலாக்காட்சி. (சீவக.2846, உரை.) |
அனந்தநான்மை | aṉanta-nāṉmai n. <>id.+. (Jaina.) The four anantas. See அனந்த சதுட்டயம். (சீவக.2846.) |
அனந்தபத்மநாபன் | aṉanta-patmanāpaṉ n.<>id.+. Viṣṇu worshipped at Trivandrum; திருவனந்தபுரத்துத் திருமால். |
அனந்தபுரம் | aṉanta-puram n. <>id.+. Trivandrum; திருவனந்தபுரம். (திவ்.திருவாய்.10, 2, 1.) |
அனந்தம் 1 | aṉantam n. <>an-anta. 1. Limitlessness, infinity; அளவின்மை. (திவா). 2. That which is boundless; 3. Sky, atmosphere; 4. A hundred-thousand quadrillions; |
அனந்தம் 2 | aṉantam n. <>anantā. 1. Cynodon grass; அறுகு. (மூ.அ). 2. Species of Acalypha. See குப்பைமேனி. 3. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. 4. Indian sarsaparilla. See நன்னாரி. 5. Species of Doemia. See வேலிப்பருத்தி. |
அனந்தம் 3 | aṉantam n. 1. Gold; பொன். (பிங்). 2. Peacock's crest; 3. A mineral poison; |
அனந்தமுடிச்சு | aṉanta-muṭiccu n. <>an-anta+. Kind of woman's ear ornament; காதணிவகை. (W.) |
அனந்தர் 1 | aṉantar n. var. of அனந்தல். 1. Sleep; நித்திரை. மோக வனந்தர் முயல்வோர்க்கு (ஞானா.62, 23). 2. Drowsiness, stupor, loss of consciousness, inebriety; 3. Wakefulness; 4. Confusion of mind; See அனந்தல் 3. |
அனந்தர் 2 | aṉantar n. Cotton-plant. See பருத்தி. (மலை.) |
அனந்தர் 3 | aṉantar n. <>Ananta. A Jaina Arhat, one of the twenty-four tīrttaṅkarar, q.v.; தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம்.காப்பு, உரை.) |
அனந்தரத்திலவன் | aṉantarattil-avaṉ n. <>anantara+. Heir apparent, son; அடுத்தவழித் தோன்றல். (ஈடு, 10, 7, 5.) |
அனந்தரம் | aṉantaram adv. <>anantara. Afterwards; பின்பு. மங்கையங் கனந்தரம் வயிறு வாய்த்துழி, (பாரத.குரு.51). |
அனந்தரவாரிசு | aṉantara-vāricu n. <>id.+U. wāris. Reversioner; அடுத்த பாத்தியதையுள்ளவன். (Legal.) |
அனந்தல் | aṉantal n. cf. ā-nanda. 1. Sleep, slumber; தூக்கம். அனந்த லாடேல் (ஆத்திசூடி). 2. Drowsiness, stupor; 3. Low tone, soft mournful sound, as of a drum; |
அனந்தலோசனன் | aṉanta-lōcaṉaṉ n. <>an-anta+lōcana. Buddha, as having a limitless number of eyes; புத்தன். (திவா.) |
அனந்தவிரதம் | aṉanta-viratam n. <>id.+. Fast in honour of Viṣṇu on the fourteenth day of the bright fortnight of Bhādrapada; பாத்திரபத சுக்கில சதுரித்தசியில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு. |