Word |
English & Tamil Meaning |
---|---|
அனுட்டானம் | aṉuṭṭāṉam n. <> anu-ṣṭhāna. 1. Observance of religious rites. See அனுஷ்டானம். வயங்கனுட் டானம் பண்ணி (மச்சபு. வீம.21). 2. Established custom; |
அனுட்டி - த்தல் | aṉuṭṭi- 11 v.tr. <> anuṣṭhā. To practise, as religious rites See அனுஷ்டி-. மனிதரு மனுட்டித்து . . . வீடடைந்தார் (திருவிளை.இந்திரன்முடி.29). |
அனுடம் | aṉuṭam n. prob. anu-rādhā. [M.anuḻam.] See அனுஷம். . |
அனுத்தமம் | aṉuttamam n. <>an-uttama. The best: தனக்குமேலில்லாதது. |
அனுத்துருதபஞ்சமம் | aṉutturuta-pacamam n. <> anu-druta+. An ancient secondary melody-type of the kurici class: குறிஞ்சியாழ்த்திற வகை. (பிங்.) |
அனுதபி - த்தல் | aṉutapi- 11 v.tr. <> anutāpa. 1. To repent; கழிந்ததற்கிரங்குதல். 2. To sympathise; |
அனுதாத்தம் | aṉutāttam n. <> an-udātta. Grave accent, especially Vēdic; படுத்தலோசை. உதாத்த மோசை யனுதாத்த சொரிதம் (திருவிளை.தடாதகை.8). |
அனுதாபம் | aṉu-tāpam n. <> anu-tāpa. 1. Repentance, remorse; பச்சாத்தாபம். 2. pity; 3. Sympathy; |
அனுதாளம் | aṉu-tāḷam n. <> anu-tāla. (Mus.) Variety of time-measure; தாளவகை. (பரத.தாள.4.) |
அனுதினம் | aṉu-tiṉam adv. <> anu-dina. Every day, daily: நாடோறும். (திருவிளை.விடையில.4.) |
அனுதினாதினம் | aṉu-tiṉātiṉam adv. <> id.+dina. See அனுதினம். (திருப்பு.639.) |
அனுதுருதம் | aṉu-turutam n. <> anu-druta. (Mus.) Variety of aṅkam Which consists of one akṣara-kālam; தாள அங்கவகை. (பரத.தாள.35.) |
அனுநாசிகம் | aṉu-nācikam n. <> anu-nāsika. Nasal; மெல்லெழுத்து. (பி.வி.5.) |
அனுப்படி | aṉuppaṭi n. 1. Balance in account; கையிருப்பு;. Loc. 2. Affairs in general, circumstances; 3. Revenue of the previous year; |
அனுப்படிபாக்கி | aṉuppaṭi-pākki n. அனுப்படி+. Balance in account: கையிருப்பு. Loc. |
அனுப்படியிறக்கு - தல் | aṉuppaṭi-y-iṟakku- v.intr. <> id.+. To carry forward the balance to a new account; பழைய பாக்கியைப் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல். |
அனுப்பன் | aṉuppaṉ n. A division of Kanarese Gauṇdas, found in Coimbatore, Madura, Ramnad and Tinnevelly districts: கவுண்டருள் ஒரு பிரிவார். |
அனுப்பிரவேசம் | aṉu-p-piravēcam n. <> anu-pravēša. Entering after another; தொடர்ந்துபுகுகை. |
அனுப்பிராசம் | aṉu-p-pirācam n. <> anu-prasā. (Pros.) Repetition of rhyming syllables, as மண்டலம் பண்டுண்ட திண்டேர் வரகுணன்; வழியெதுகை. (இலக்.வி.748, உரை.) |
அனுப்பு - தல் | aṉuppu- 5. v.tr. [T.anupu, M.anuppu.] 1. To send, despatch; போகச் செய்தல். எனைச்சோழ நாட்டுக் கனுப்பவேணும் (தமிழ்நா.254) 2. To accompany one a little way out of respect; |
அனுபந்தசதுட்டயம் | aṉupanta-catuṭṭayam n. <> anu-bandha+. The four requisites of a literary work, viz., விடயம், சம்பந்தம், பயன், அதிகாரி. (வேதா.சூ.8.) |
அனுபந்தம் | aṉupantam n. <> anu-bandha. 1. Relation, connection; உறவின்முறை. 2. Appendix, supplement; |
அனுபந்தன் | aṉupantaṉ n. <> id. Accomplice, one who approves a sinful act; தீமைக்கு உடன்படுபவன். காயுமவர்க் கனுபந்தருமா யுள்களித்தீரே (சிவதரு.சுவாக்.195). |
அனுபபத்தி | aṉupapatti n. <> an-upapatti. Irrelevancy, inapplicability; பொருத்தமின்மை. (பி.வி.47.) |
அனுபமன் | aṉupamaṉ n. <> an-upama. One who is incomparable; ஒப்பில்லாதவன். அனுபமன் செழியன் (திருவாலவா.13, 15.) |
அனுபமை | aṉupamai n. <> an-upamā. 1. That which is incomparable, matchless: ஒப்பில்லாத்து. 2. Name of the female elephant of the South-West, mate of kumutam; |
அனுபல்லவி | aṉu-pallavi n. <> anu+. (Mus.) Second section of the South Indian melody known as kīrttaṉam; கீர்த்தனத்தில் இரண்டாம் உறுப்பு. |
அனுபலத்தி | aṉupalatti n. <> an-upalabdhi. See அனுபலத்தியேது. அனுபலத்தியேது. (சி.சி.அளவை.10.) |
அனுபலத்தியேது | aṉupalatti-y-ētu n. <> id.+hētu. (Log.) Inference of the absence of one thing from the absence of something else, ஒன்றன் இன்மையால் மற்றொன்ற னின்மையை யறியும் ஏது. (சி.சி.அளவை.10, மறைஞா.) |