Word |
English & Tamil Meaning |
---|---|
திறமைக்காரன் | tiṟamai-k-kāraṉ, n. <>திற-மை1 +. Wealthy person; பணக்காரன். (w.) |
திறல் | tiṟal, n. of. திறம்2. 1. [K. tiruḷu.] Strength, vigour; வலி. துன்னருந் திறல் (புறநா. 3, 8). 2. Bravery, courage, valour; 3. Victory; 4. Lustre, as of precious stones; 5. Battle; war; 6. Hostility, enmity; |
திறலோன் | tiṟalōṉ, n. <>திறல். 1. A male person aged fifteen years; பதினைந்தாண்டுள்ளவன். திறலோன் யாண்டே பதினைந்தாகும் (பன்னிரு பா. 230). 2. See திறவோன்2. திறலோனகலஞ் செருவின் முனநாள் புண்படப்போழ்ந்த பிரான் (திவ். பெரியதி. 2, 9, 6). |
திறவது | tiṟavatu, n. <>திறம்2. 1. That which is proper; that which is complete; செவிது. திறவதி னாடி (தொல். பொ. 521). 2. That which is certain, permanent; |
திறவறி - தல் | tiṟa-v-aṟi-, v. intr. <>திறவு+. 1. To know ways and means; உபாயமறிதல். 2. To know how to disclose secret things; 3. To be experienced; |
திறவாளி | tiṟavāḷi, n. <>திறம்2+. See திறவான். (யாழ். அக.) . |
திறவான் | tiṟavāṉ, n. <>id. Able man; சமர்த்தன். (யாழ். அக.) |
திறவிது | tiṟavitu, n. <>id. See திறவது. திறவிதின் மொழிவாம் (சீவக. 124). . |
திறவு | tiṟavu, n. <>திற-. 1. [T. terapa, K. teṟavu.] Opening, unveiling; திறக்கை. (சது.) 2. Gate-way; 3. [T. teravu.] Way; 4. Open space; 5. Cause, reason; 6. Spying; |
திறவுக்கோல் | tiṟavu-k-kōl, n. <>திறவு +. See திறவுகோல். திறக்கும் பெருந் திறவுக்கோலும் (அருட்பா, vi, திருவருட்பே. 2). . |
திறவுகுச்சி | tiṟavu-kucci, n. <>id. +. See திறவுகோல். Loc. . |
திறவுகோல் | tiṟavu-kōl, n. <>id. +. Key; சாவி. Colloq. |
திறவோன் 1 | tiṟavōṉ, n. <>திறம்1. Person of discernment or discrimination; பகுத்தறிவுள்ளவன். திறவோர் காட்சியிற் றெளிந்தனம் (புறநா.192). |
திறவோன் 2 | tiṟavōṉ, n. <>திறம்2. Person of strength or capacity; வலிமையுடையவன். |
திறன் | tiṟaṉ, n. <>திறம்1. See திறம்1. திறனறிந் தேதிலா ரிற்கட் குருடனாய் (நாலடி, 158). . |
திறனில்யாழ் | tiṟaṉ-il-yāḻ, n. <>திறன்+. (Mus.) An ancient secondary melody-type of neytal class; நெய்தல் யாழ்த்திறத் தொன்று. (சூடா.) |
திறாங்கு | tiṟāṅku, n. <>Fr. tringle. Bolt; கதவடை தாழ். (J.) |
திறாணி | tiṟāṇi, n. perh. trāṇa. Ability. See திராணி. Loc. . |
திறாம் | tiṟām, n. <>E. drām. 1. Fluid dram = 60 drops; அறுபது துளிகொண்ட ஒரு நீரளவு. 2. Dram in apothecaries' weight = 1. 5/6 tola; |
திறிவிச்சதா | tiṟiviccatā, n. Pointed-leaved hogweed. See மூக்கிரட்டை. (மலை.) . |
திறுதட்டம் | tiṟutaṭṭam, n. See திறுதிட்டம். Loc. . |
திறுதிட்டம் | tiṟutiṭṭam, n. <>நிறுதிட்டம். Straightness; steepness; perpendicular position; erectness, as of a person stunned by surprise; நேர்நிற்கை. (J.) |
திறுதிறு - க்கல் | tiṟu-tiṟu, 11 v. intr. <>திறுதிறெனல். [K. duṟuduṟu.] To stare, look wild, as one if fear; அஞ்சிவிழித்தல். (யாழ். அக.) |
திறுதிறெனல் | tiṟu-tiṟeṉal, n. Expr. of straing, looking wild with fear; அச்சத்தோடு நோக்கற் குறிப்பு. Colloq. |
திறை | tiṟai, n. of. இறை. [K. teṟa, M. tiṟa, Tu. terige.] Tribute; கப்பம். திறைசுமந்து நிற்குந் தெவ்வர்போல (சிலப். 25, 36). |
திறையள - த்தல் | tiṟai-y-aḷa-, v. intr. <>திறை +. To pay tribute; கப்பங்கட்டுதல்.தீர்ந்து வணங்கித் திறையளப்ப (பு. வெ. 10, 3). |
தின்(னு) - தல் | tiṉ-, 8 v. tr. [T. tinu, K. tin, M. tinnuka.] 1. To eat, feed; உண்ணுதல். இரும்பே ரொக்கலொடு தின்மென (புறநா.150). 2. To chew; 3. To bite, gnash, as one's teeth; 4. To eat away as white ants to consume, corrode; 5. To afflict, distress; 6. To destory, ruin, wear out; 7. To file; 8. To cut; 9. To cause irritating sensation, as in the skin; 10. To undergo, receive; |