Word |
English & Tamil Meaning |
---|---|
திறப்படு 2 - தல் | tiṟa-p-paṭu-, v. intr. <>திறம்2 +. To improve, as soil, health, strength, knowledge; to be prosperous; சீர்ப்படுதல். வாழ்க்கை திறப்பட (ஞானா. பாயி. 5, 10). |
திறப்பண் | tiṟa-p-paṇ, n. perh. திறம்1 +. (Mus.) Secondary melody-types; குறைந்த நரம்புள்ள இராகங்கள். திறப்பண் பாடுகின்ற ஏல்வை (சிலப். 8, 43, அரும்.). |
திறப்பணம் | tiṟappaṇam, n. Gimlet. See துரப்பணம். (w.) . |
திறப்பாடு 1 | tiṟa-p-pāṭu, n. <>திறம்1 +. Necessary equipment, as discretion, strength of mind, etc.; கூறுபாடு. திறப்பாடிலாதவர் (குறள், 640). |
திறப்பாடு 2 | tiṟa-p-pāṭu, n. <>திறம்2 +. 1. Improving, strengthening, enriching; சீர்ப்படுகை. (J.) 2. Strength, ability; |
திறப்பி 1 - த்தல் | tiṟappi-, 11 v. tr. See திற-. Loc. . |
திறப்பி 2 - த்தல் | tiṟappi-, 11 v. tr. <>sthira. To make firm, handen, consolidate; உறுதிப்படுத்துதல். (J.) |
திறப்பு 1 | tiṟappu, n. <>திற-. [T. terapi, K. teṟapu.] 1. Open, unfortified place; வெளியிடம் (S. I. I. i, 163.) 2. Key; 3. Cleft, opening; |
திறப்பு 2 | tiṟappu, n. perh. தீர்1-. Assessed lands; சர்க்கார் தீர்வைநிலம். Loc. |
திறபடு - தல் | tiṟa-paṭu-, v. intr. <>திற-+. (J.) 1. To be opened; திறக்கப்படுதல். 2. To be disclosed, revealed; |
திறம் 1 | tiṟam, n. perh. id. 1. Constituents, component parts, necessary elements; கூறுபாடு. நிற்றிறஞ் சிறக்க (புறநா. 6). 2. [K. teṟa.] Kind, class, sort; 3. Party, side; 4. (Mus.) A secondary melody-type, pentatonic; 5. Half; 6. Way, path, manner; 7. History; 8. Family; 9. Relations; 10. Body; 11. Garb, costume; 12. Doctrine; 13. Quality, state, nature; 14. Matter, affair, case; 15. News, information; 16. Means, method; 17. Cause, reason; 18. Opulence, wealth, fortune; 19. Fullness, plenteousness; 20. Multitude, crowd; 21. A herd of 80 sheep, 80 cows and 80 buffaloes; 22. Midwifery; |
திறம் 2 | tiṟam, n. <>sthira. 1. Firmness, stability; நிலைபேறு. (பிங்.) 2. Strength, power; 3. Ability, cleverness, dexterity; 4. Goodness, excellence; 5. Chastity; 6. Moral conduct; established order; 7. Uprightness; |
திறம்பு - தல் | tiṟampu-, 5 v. of திரும்பு-. intr. 1. To change; to be over-turned; to be subverted; மாறுபடுதல். நியாயமே திறம்பினும் (கம்பரா. மந்தரை. 66). 2. To sprain; Loc.--tr. To swerve from, deviate from; |
திறமாய் | tiṟam-āy, adv. <>திறம்2 +. Certainly; நிச்சயமாய். திறமாய் முப்பது கோட்டை நெல்விளையும். Loc. |
திறமை 1 | tiṟamai, n. <>திறம்1. 1. Good fortune, wealth; பாக்கியம். (w.) 2. See திறம்1, 19. Loc. |
திறமை 2 | tiṟamai, n. <>திறம்2. 1. Ability, cleverness; சாமர்த்தியம். உண்மைப் பெருக்கமாந் திறமைகாட்டிய (திருவாச. 42, 7). 2. Strength, vigour, power; 3. Bravery, courage, manliness; 4. Goodness, excellence; |