Word |
English & Tamil Meaning |
---|---|
தின்பண்டநல்கல் | tiṉ-paṇṭa-nalkal, n. <>தின்பண்டம்+. Providing food for travellers, regarded as an act of charity, one of muppatti-raṇṭaṟam, q.v.; முப்பத்திரண்டறங்களுள் வழிச்செல்வோருக்கு உணவிடும் அறச்செயல். (பிங்.) |
தின்பண்டம் | tiṉ-paṇṭam, n. <>தின்-+. [T. tinubaṇdamu.] 1. Eatables; உணவுப்பொருள். 2. Sweetmeat, confection; |
தின்மை | tiṉmai, n. of. தீமை. 1. Evil, mis-fortune, opp. to naṉmai; தீமை. தின்மையும் பாவமுஞ் சிதைந்து தேயுமே (கம்பரா. தனியன்.). 2. Death; 3. Evil deed; |
தின்றி | tiṉṟi, n. <>தின்-. [K. tiṇdi.] See தின்பண்டம். (திவா.) . |
தின்றிப்போத்து | tiṉṟr-p-pōttu, n. <>தின்றி+. Glutton. See திண்டிப்போத்து. Loc. . |
தின்றுருட்டி | tiṉṟuruṭṭi, n. <>தின்-+உருட்டு-. Extravagant fellow, spendthrift, prodigal; தின்றழிப்போன். Loc. |
தின்னாச்சாதி | tiṉṉā-c-cāti, n. <>id.+ஆ neg.+. Low castes with whose members commensality is prohibited; உடனுண்ணுதற்குத் தகுதியற்ற தாழ்சாதி. |
தின்னி | tiṉṉi, n. <>id 1. See தின்னிமாடன். . 2. One who eats indiscriminately in all places; |
தின்னிமாடன் | tiṉṉi-māṭaṉ, n. <>id. +. Glutton; மிதமிஞ்சித் தின்பவன். Loc. |
தினகரன் | tiṉa-karaṉ, n. <>dina-kara. Sun, as maker of the day; [பகலைக் செய்வொன்] சூரியன். (பிங்.) தினகரனை யனைய (கம்பரா. மூலபல. 163). |
தினகவி | tiṉa-kavi, n. <>dina+. (w.) 1. Poem in praise of a king at the beginning and close of his durbar; அரசன் திருவோலக்கமண்டபத்தில் உட்காரும் போதும் எழுந்திருக்கும்போதும் பாடும் பாட்டு. 2. Poet who composes tiṉa-kavi; |
தினகாரி | tiṉa-kāri, n. <>id. + kārin. See தினகரன். தினகாரி சிறுவன் (பாரத. பதினே. 235). . |
தினகாலம் | tiṉa-kālam, adv. <>id. +. Always; எப்போதும். (w.) |
தினசரி | tiṉa-cari, <>id.+caryā. n. [T. dina-sari.] 1. Daily occupation, routine of business; தினச்செயல். Loc. 2. Account or journal of the day, diary; --adv. See தினந்தோறும். அவன் தினசரி வருகிறான். |
தினசரிக்குறிப்பு | tiṉacari-k-kuṟippu, n. <>தினசரி+. See தினசரி, 2. . |
தினசரிதை | tiṉa-caṟitai, n. <>dina +. See தினசரி, 1. . |
தினசரிபத்திரிகை | tiṉacari-pattirikai, n. <>தினசரி +. Daily newspaper; தின சமாசாரபத்திரிகை. Mod. |
தினசாரிக்காரன் | tiṉa-cāri-k-kāraṉ, n. <>dina +. 1. One who constantly rides; எப்போதும் சவாரிசெய்பவன். (w.) 2. One who wanders about for food; |
தினசுரம் | tiṉa-curam, n. <>id. +. 1. Quotidian fever; நித்தம்வரும் காய்ச்சல். 2. Hectic fever; |
தினசேரி | tiṉa-cēri, adv. <>தினசரி. See தினந்தோறும். (J.) . |
தினசேஷம் | tiṉa-cēṣam, n. <>dina+. (Astron.) Difference between the varuṭa-cēṣam and the next less number of days in parivirutti tables; வருடசேஷத்திற்கும் பரிவிருத்தியிற் குறைந்த நாட்களுக்கும் உள்ள வித்தியாசம். (w.) |
தினத்திரயம் | tiṉa-t-tirayam, n. <>id. + traya. Day when three nakṣatras are in conjunction with the moon; மூன்று நட்சத்திரங்கள் வரும்நாள். (விதான. குணாகுண. 109.) |
தினந்தினம் | tiṉan-tiṉam, adv. <>id. +. See தினந்தோறும். . |
தினந்தோறும் | tiṉan-tōṟum, adv <>id. +. Daily; ஒவ்வொருநாளும். தினந்தோறு முள்ளுருகிச் சீர்பாடு மன்பர் (அருட்பா. நெஞ்சுறு. 18). |
தினநாதன் | tiṉa-nātaṉ, n. <>id. + nātha. Sun, as lord of the day; [நாளுக்குத் தலைவன்] சூரியன். தினநாதன் றனயர்தம்பால் (பாரத. திரௌ. 86). |