Word |
English & Tamil Meaning |
---|---|
தீ | tī. . The compound of த் and ஈ . . |
தீ - தல் | tī -, 4 v. intr. 1. To be burnt; எரிந்துபோதல். சிறைதீந்த பருந்தும் (கல்லா.7). 2. To be withered or blighted, as growing crops in times of drought; 3. To be charred or burnt, as food in cooking; 4. To be hot with anger; to be inflamed; 5. To perish; to be ruined; |
தீ - த்தல் | tī-, 11 v. tr. Caus. of தீ2-, [K.šī.] 1. To allow food to be charred in cooking; to burn; காந்தவைத்தல். To dry up water, as the sun; to cause humours to be absorbed in the body by means of external application; to boil and dry fish so that it may keep; To cause to wither, as growing crops; To scar , cauterise; |
தீ 1 | tī-, n. <>தீ2-. 1. [K. M. tī.] Fire, one of paca-pūtam, q. v.; பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய நெருப்பு. வளித்தலைஇய தீயும் (புறநா. 2). 2. Lamp; 3. Sacrificial fire. 4. Digesting heat. 5. Anger; 6. Evil; 7. Poison; 8. Hell; |
தீ 2 | tī, n. <>dhi. Knowledge, understanding, intellect; ஞானம். தீதா வசவநிமலர் செல்வா (கந்தரந். 31). |
தீக்கஞ்சி | tīkkaci, n. <>தீ + அஞ்சு-. Camphor, as fearing fire; [நெருப்புக்கு அஞ்சுவது] ஆரத்திக்கருப்பூரம். (W. ) |
தீக்கடவுள் | tī-k-katavuḷ, n. <>id. +. The Fire-god; அக்கினிதேவன். (திவா.) தீக்கடவு டந்தவரத்தை (நள. கலிநீங். 5). |
தீக்கடன் | tīk-kaṭaṉ, n. <>id. +. 1. Duty of performing the cremation ceremony, as of a son to his parents; ஈமக்கிரியை. தீக்கடன் செய் திட்டாரே (இரகு. இந்து.63). 2. See தீக்கருமம். 3. |
தீக்கடை - தல் | tī-k-kaṭai-, v. intr.<>id. +. To produce fire by fire-drill; கடைந்து நெருப்பு உண்டாக்குதல். தீக்கடைந்து வைத்தேன் (பெரியபு. ண்ணப்ப.115). |
தீக்கடைகோல் | tī-k-kaṭai-kōl, n. <>id. +. Fire-drill ; கடைந்து நெருப்புண்டாக்க உதவும் அரசு அல்லது வன்னிமரத்துச் சிரு கட்டை. தீக்கடை கோலாலே . . . கையாலே கடைந்து கொண்ட பெரும்பாண்.177, உரை). |
தீக்கணம் | tī-k-kaṇam, n. <>id. + gaṇa. Metrical foot of nirai-nēr-nirai (u u - u u), considered inauspicious at the commencement of a poem ; செய்யுண்முதற்சீராக அமைக்கத்தகாததும் நிரைநேர்நிரை என வருவதுமாகிய செய்யுட்கணம். (திவா.) |
தீக்கதி | tī-k-kati, n. <>id. +. 1. Hell, as a world of evil ; [கொடிய உலகம்] நரகம். தினையேனுந் தீக்கதிக்கட் செல்லார் (திவ். இயற். 1, 65). Evil fate ; |
தீக்கதிக்கும்பச்சை | tīkkatikkum-paccai, n. A variety of green stone ; நாகப்பச்சை. (W.) |
தீக்கதிகரும்பச்சை | tīkkatikarum-paccai, n. See தீக்கதிக்கும்பச்சை. (யாழ்.அக.) . |
தீக்கதிர் | tī-k-katir, n. <>தீ +. Blacksmith's poker; உலையாணிக்கோல். (W.) |
தீக்கரண்டி | tī-k-karaṇṭi, n. <>id. +. Small ladle for taking live charcoal ; தீயெடுக்குங் கருவி . (W.) |
தீக்கருமம் | tī-k-karumam, n. <>id. +. 1. Evil deed ; தீய செயல். 2. See தீக்கடன். 3. Fire-sacrifice; |
தீக்கரை | tīkkarai, n. prob. šigru. Common coral tree. See முண்முருங்கை. (மலை.) |
தீக்கல் | tī-k-kal, n. <>தீ +. 1. [M. tīkkallu. ] Strike-a-light ; தீத்தட்டிக்கல். 2. Iron Pyrites |
தீக்கலம் | tī-k-kalam, n. <>id. +. 1. See தீச்சட்டி. . 2. Funeral pyre ; |
தீக்கறி | tī-k-kaṟi, n. <>id. +. A warmed up dish of the remnants of the day's curry; சுண்டற்கரி . Madr. |
தீக்கனா | tī-k-kaṉā, n. <>id. +. Ominous dream, dream of coming evil; தீமை விளைக்கும் சொப்பனம் இடருற்ற தீக்கனா...நினைந்தாள் (சிலப், 19, 72) |
தீக்காய் - தல் | tī-k-kāy-, v. intr. <>id. +. To warm oneself at the fire ; குளிர்காய்தல். அகலா தணுகாது தீக்காய்வார் போல்க (குறள், 691) . |