Word |
English & Tamil Meaning |
---|---|
தீக்காலம் | tī-k-kālam, n. <>id. +. Evil times ; கேடுவிளைக்குங் காலம் |
தீக்காலி | tī-k-kāli, n. <>id.+கால். 1. Woman believed to bring misfortune to a family by her arrival ; தன்வரவால் குடிகேடு விளைப்பவளாகக் கருத்தப்படுபவள். An Asura; |
தீக்காற்று | tī-k-kāṟṟu, n. <>id. +. Scorching wind ; நெருப்புக்காற்று. (W.) |
தீக்கி - த்தல் | tīkki-, 11 v. intr. <> dīkṣ. To take a vow. See தீட்சி-. பின்னதன் வழியே யொழுகினர் தீக்கித்து (திருக்காளத். பு. 29, 23). |
தீக்கிதர் | tīkkitar, n. <> dīkṣita. See தீட்சிதர். சீதளசந்த்ர முகராமபத்திர தீக்கிதர்க்கு (பி. வி. இறுதி.). |
தீக்குச்சி | tī-k-kucci, n. <> தீ4+ குற்றி. 1. [M. tīkkucci.] Match; தேய்த்துத் தீயுண்டாக்கும் மருந்தை நுனியிற்கொண்ட குச்சி. 2. Mischiefmaker; 3. Police constable, as having a red turban like the tip of a match, used in contempt; |
தீக்குச்சு | tī-k-kuccu, n. See தீக்குச்சி. Loc. . |
தீக்குடுக்கை | tī-k-kuṭukkai, n. <> தீ4+. Shell, bomb; வெடிகுண்டு. (w.) |
தீக்குண்டம் | tī-k-kuṇṭam, n. <> id. +. Sacrificial pit; ஓமகுண்டம். |
தீக்குணம் | tī-k-kuṇam, n. <> id. +. 1. Evil nature or disposition, vice; துர்க்குணம். 2. Heat, as the quality of fire; |
தீக்குணர் | tī-k-kuṇar, n. <> தீக்குணம். 1. Wicked, evil persons; துட்டர். 2. Base, vulgar persons; |
தீக்குதி - த்தல் | tī-k-kuti-, v. intr. <> தீ4+. See தீக்குளி-. . 2. See தீக்குழிபாய்-. |
தீக்குருவி | tī-k-kuruvi, n. <> id. +. Ostrich; நெருப்புக்கோழி. |
தீக்குவெறுங்குகை | tīkkuveṟuṅkukai, n. Soap; சவுக்காரம். (யாழ். அக.) |
தீக்குழி | tī-k-kuḻi, n. <> தீ4 +. [M. tīkkuḻi. ] Pit with live charcoals for persons to walk on or to throw themselves into in self-immolation; பிரார்த்தனையின் பொருட்டேனும் உயிர்விடற்பொருட்டேனும் இறங்குவதற்கு அமைக்கப்படும் நெருப்புக்குண்டம். தீக்குழி வலித்தியாந் தீரினும் தீர்தும் (பெருங். மகத. 25, 138). |
தீக்குழிபாய் - தல் | tī-k-kuḻi-pāy-, v. intr. <> தீக்குழி+. To walk on burning charcoals in a pit, as in fulfilment of a vow; பிரார்த்தனையின் பொருட்டுத் தீக்குழியில் இறங்கிநடத்தல். |
தீக்குளி - த்தல் | tī-k-kuḷi-, v. intr. <> தீ4+. To plunge into flames, as in an ordeal or in self-immolation; அக்கினிப்பிரவேசஞ்செய்தல். |
தீக்குறி | tī-k-kuṟi, n. <> id. +. Bad sign or symptom, unpropitious omen; அபசகுனம். |
தீக்கூர்மை | tī-k-kūrmai, n. prob. id.+. (W.) 1. Rock-salt; இந்துப்பு. 2. Salt extracted from sesame seed; |
தீக்கை | tīkkai, n. <> dīkṣā. See தீட்சை. இஃது இருவர் தீக்கையுங் கூறிற்று (சீவக. 2634, உரை). |
தீக்கொள்ளி | tī-k-koḷḷi, n. <> தீ4+. 1. Firebrand; கொள்ளிக்கட்டை. 2. See தீக்கொளுத்தி. |
தீக்கொளுத்தி | tī-k-koḷutti, n. <> id. +.Loc. 1. Incendiary; நெருப்பிடுவோன். 2. One who stirs up quarrels; |
தீக்கோழி | tī-k-kōḻi, n. <> id. +. See தீக்குருவி. . |
தீக்கோள் | tī-k-kōḷ, n. <> id. +. Malignant planet; கேடு குறிக்குங் கிரகம். |
தீகுறு - தல் | tīkuṟu-, v. intr. <> தீ2 + உறு-. To be destroyed by fire; தீயினால் அழிதல். அகிலந்தீகுற் றிடர்ப்பட (இரகு. யாகப். 89). |
தீங்கனி | tīṅ-kaṉi, n. <> தீம்+. Delicious fruit; இனிய பழம். தீங்கனி நாவல் (மணி. 9, 17). |
தீங்கு | tīṅku, n. <> தீமை. 1. Evil; injury, harm; crime; தீமை. (பிங்.)தீங்கு செய்தனையே (அகநா.112). 2. Misfortune, calamity, distress; 3. Fault, defect, blemish; |
தீச்சகுனம் | tī-c-cakuṉam, n. <> தீ4 +. Evil omen; துந்நிமித்தம். (சங். அக.) |
தீச்சட்டி | tī-c-caṭṭi, n. <> id. +. 1.Fire-pan, chafing-dish; கணப்புச்சட்டி. 2. Fire-pot carried in fulfilment of a vow; |
தீச்சடம் | tīccaṭam, n. Urine; சிறுநீர் (சங். அக.) |
தீச்சலம் | tīccalam, n. Bone of cuttle-fish. See கடனுரை. (W.) |
தீச்சனகம் | tīccaṉakam, n. cf. tīkṣṇaka. South Indian mahua. See இருப்பை. (சங். அக.) |
தீச்சனம் | tīccaṉam, n. perh. tīkṣṇa. Pepper. See மிளகு. (மலை.) |
தீச்சார்பு | tī-c-cārpu, n. <> தீ4 +. 1. Association with the wicked; துஷ்டசகவாசம். 2. Vicious prospensity, evil tendencies; |