Word |
English & Tamil Meaning |
---|---|
துனி - த்தல் | tuṉi 11 v. tr. 1. To loathe, abhor; வெறுத்தல். துனித்துநீர் துளங்கல் வேண்டா (சீவக. 745). 2. To be angry at, displeased with; 3. To be sulky, as in a love-quarrel; |
துனி 1 | tuṉi n.<>துனி-. 1. Disgust, dissatisfaction, loathing; வெறுப்பு. இனியறிந்தேனத துனியாகுதலே (கலித். 14). 2. Anger, displeasure; 3. Protracted sulk in a love-quarrel; 4. Separation, as from a lover; 5. Affliction, sorrow, distress; 6. [M. tuni.] Disease; 7. Sin; 8. Flaw; 9. Obstacle, hindrance, trouble; 10. Poverty; 11. Fear, dread; |
துனி 2 | tuṉi n. <>dhunī River; நதி (சூடா.) |
துனிப்பு | tuṉippu, n. <>துனி. Aversion disgust ; வெறுப்பு .துனிப்புறு கிளவியால் (சீவக .1020) |
துனியா | tuṉiyā n.<>Arab. dunyā World ; உலகம். Loc |
துனை - தல் | tuṉai- 4 v.intr To hasten ; விரைதல் கோதைக்குத் துனைந்து சென்றுரைப்ப (சிலப்.8, 114) |
துனைவு | tuṉaivu, n.<> துனை-. Quickness, celerity suddenness, speed ; விரைவு கதழ்வுந் துனைவும் விரைவின் பொருள (தொல். சொல்.315) |
துஷ்கர்மம் | tuṣkarmam, n.<>duṣ-karman. Evil deed ; தீச்செயல் (w.) |
துஷ்கரம் | tuṣkaram, n.<>duṣ-kara. That which is difficult to accomplish ; வருந்தி முடித்தற் குரியது |
துஷ்குலம் | tuṣkulam, n.<>dus-kula. Family of low status இழிந்த குடி. |
துஷ்டசதுட்டர் | tuṣṭa-catuṭṭar, n. See துஷ்டசதுர்த்தர். . |
துஷ்டசதுர்த்தர் | tuṣṭa-caturttar, n.<> duṣṭa+. The four wicked characters depicted in the Mahābhārata, viz.,Turiyōtaṉaṉ, Tuccātaṇaṉ, Karnaṉ, Cakuṉi; பெருந்துட்டர்களாக மகாபாரதத்திற் கூறப்படும் துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி என்னும் நால்வர் . |
துஷ்டதேவதை | tuṣṭa-tēvatai,. n.<> duṣṭa-dēvatā. Malignant deity ; மாடன் காட்டேரி முதலிய கொடுந்தெய்வங்கள். பலிகொடுத்தேன். கர்ம துஷ்டதேவதைகளில்லை (தாயு. கருணாகர.8) |
துஷ்டநிக்கிரகம் | tuṣṭa-nikkirakam; n.<>duṣṭa+. Destruction of the wicked, as enjoined on a king, opp. to ciṣṭa-paripālaṉam; அரசர்செயலாகிய தீயோரையழிக்கை |
துஷ்டம் | tuṣṭam, n.<> duṣṭa. (w.) 1. Wickedness, vileness, atrocity ; தீமை. 2. Ferocity, malignancy; |
துஷ்டவித்தை | tuṣṭa-vittai n. <>id.+. The black arts, as witchcraft; சூனியம். |
துஷ்டவினை | tuṣṭa-viṉai; n.<>id.+ (w.) 1. See துஷ்டவித்தை. . 2. Evil effects of witchcraft, on the person against whom it is directed; |
துஷ்டன் | tuṣṭaṉ. n. <>duṣṭa., 1. Wicked man; பொல்லாதவன் 2. See துட்டன், 2. |
துஸ்பரிசம் | tusparicam, n.<>dus-sparša. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல. 76). |
துஸ்ஸாலா | tussālā, n.<>U.dusāla. Every two years, biennial ; இரண்டு வருஷத்துக் கொருமுறை (c.g.) |
தூ 1 | tū . The compound of த் and ஊ. . |
தூ 2 | tū n.<>தூய்-மை. 1. [M. Tu. tū.] Purity, cleanliness, immaculateness; தூய்மை. தூமலர் துவன்றிய (மலைபடு.51). 2. That which is pure; 3. Brightness, whiteness; |
தூ 3 | tū n.cf.தா3. 1.Strength; வலிமை. தூவெ திர்ந்த பெறா அத்தாவின் மள்ளரொடு (பதிற்றுப். 81, 34). 2. Support, prop; 3. Hostility, enmity ; |
தூ 4 | tū n.<>துய்-. 1. Flesh; தசை 2. Meat ; |