Word |
English & Tamil Meaning |
---|---|
துறைபிடி - த்தல் | tuṟai-piṭi-, v. intr. <>id. +. 1. To touch at a port, gain the haven; துறைமுகஞ் சேர்தல். (W.) 2. To find means or expedients; 3. To be satisfactory or agreeable, as an occupation; |
துறைபெய் - தல் | tuṟai-pey-, v. tr. <>id. +. To bathe a person; நீராடுவித்தல். (யாழ். அக.) |
துறைபோ - தல் | tuṟai-pō-, v. intr. <>id. +. 1. To be accomplished, completed, as a business; காரியம் முடிவுபோதல். எண்ணியவை யெல்லாந் துறைபோத லொல்லுமோ (கலித்.67). 2. To be complete; 3. To acquire a thorough knowledge, as of a science; |
துறைமாறு - தல் | tuṟai-māṟu-, v. intr. <>id. +. 1. To mistake the proper course; வழி தவறுதல். To change an occupation or employment; |
துறைமுகக்குத்தகை | tuṟai-muka-k-kuttakai n.<>துறைமுகம் +. Rent of a ferry; பரிசிற்காரர் குத்தகை (J.) |
துறைமுகம் | tuṟai-mukam n.<>துறை +. Harbour, seaport; கப்பல்கள் வந்து தங்கும் கடற்றுறை. கலங்கள் அசைகின்ற கடற்றுறைமுகங்களில் (சிலப். 6, 154, உரை) Seaport town; |
துறைமுழுக்கு | tuṟai-muḻukku n. <>id +. Ceremonial river-bath of women in the month of Aippaci; ஐப்பசியிற் பெண்கள் நதியில் நியதியாக நீராடுகை |
துறைமுன்றில் | tuṟai-muṉṟil n. <>id+. Courtyard of a house; வீட்டின் முற்றமாகிய இடம். தோழியர்சூழத் துறைமுன்றி லாடுங்கால் (ஐந்.ஐம்.37). |
துறையடுக்கப்பிடி - த்தல் | tuṟai-y-aṭuk-ka-p-piṭi v.tr. <>id. +. To sail toward port ; துறைழகத்தையடுத்துக் கப்பலைச்¢ செலுத்துதல்; To anchor in or near the harbour |
துறையர் | tuṟaiyar n. <>id. [K.toreya.] A Kanarese cultivating caste in Coimbatore and salem districts; கோயம்புத்தூர் சேலம் ஜில்லாக்களில் வசிக்கும் விவசாயிகளான கன்னட சாதியார் (E.T.vii, 176) |
துறையார் | tuṟaiyār n.<>id. Temple servants கோயில் வேலைக்காரர். Loc. |
துறைவன் | tuṟaivaṉ n.<>id Chief of a maritime tract; நெய்தனிலத் தலைவன். தண்ணந்துறைவன் (ஐங்குறு .158) |
துறோட்டி | tuṟōṭṭi n. See துறட்டி (யாழ். அக.) |
துன் | tuṉ n. Hole, cavity; வளை.எலித்துன் (செந்.iv, 213) |
துன்பக்காரன் | tuṉpa-k-kāraṉ n. <>துன்பம் Sick man; நோயாளி. (w.) |
துன்பம் | tuṉpam, n. cf. tumb. [M. tunpam.] 1. Affliction, sorrow, distress, trouble; opp. to iṉpam; மனவருத்தம். இன்பத்தை வெறுத்துத் துன்பத்துப் புலம்பல் (தொல். பொ.270). 2. Physical pain; 3. Disease, ailment; 4. Misfortune, calamity; 5. Penury; |
துன்பன் | tuṉpaṉ n.<>துன்பம் Person in distress; துன்பமுள்ளவன். நெஞ்சிற் றுன்பராய்த் திரியுமவர்போல் (பிரபுலிங். மாயைகோ.73) |
துன்பு | tuṉpu. n. See துன்பம். துன்புறுபொழுதினும் (தொல்.பொ.184). . |
துன்புறுத்து - தல் | tuṉpuṟuttu v.tr. <>துன்பு +.. To cause suffering; to afflict; வருத்துதல். |
துன்மதி | tuṉ-mati n. <>dur + mati. Folly மூடம். கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் (தேவா.414, 6). Ill-nature, wickedness Wicked person The 55th year of the Jupiter cycle |
துன்மரணம் | tuṉ-maraṇam n.<>id.+. Unnatural death . See துர்மரணம் துன்மரணம் புக்கிறந்தோர் (குற்றா. தல வடாவருவி. 46) |
துன்மார்க்கம் | tuṉ-mārkkam n.<>id.+. Evil life, vicious course of conduct, vice, immorality தீநெறி. வாய் வாதமிட்டுலறி வருந்து கின்ற துன்மார்க்கத்தை (அருட்பா, ii அவலத்தமுங்கல், 2) |
துன்மார்க்கன் | tuṉ-mārkkaṉ n.<>id.+. Vicious man தீநெறியோன் சன்மார்க்கநெறியிலாத் துன்மார்க்கனேனையும் (தாயு. சின்மயா.26) |
துன்மி - த்தல் | tuṉmi- 11 v.intr. perh. துன்பு To suffer வருந்துதல். (யாழ்.அக.) |
துன்முகன் | tuṉmukaṉ n.<>dur-mukha. 1. Horse குதிரை 2. Lion |
துன்முகி | tuṉmuki n.<>dur-mukhin. 1. Wicked-looking person; தீய முகத்தோற்றழள்ளவன் 2. The 30th year of the Jupiter cycle; |