Word |
English & Tamil Meaning |
---|---|
துன்மை | tuṉmai n.cf. தின்மை. Harm evil ; தீமை. (யாழ்.அக) |
துன்று - தல் | tuṉṟu-, 5 v.intr.cf.துன்னு1-. 1. To be close, thick, crowded together; நெருங்குதல். துன்றுகரு நறுங்குஞ்சி (கம்பரா. குகப்.28) 2. To get near, appfoximate; 3. To get attached; to lie; |
துன் றுநர் | tuṉṟunar,. n.<> துன்று-. Friends, as being near ; நண்பர். (திவா.) |
துன்னகாரர் | tuṉṉa-kārar, n.perh. tunna +. Tailors ; தையற்காரர் துன்ன காரருந் தோலின் றுன்னரும் (சிலப்.5, 32) |
துன்ன நாயகர் | tnṉṉa-nāyakar, n.<>id.+. See துன்னகாரர் . (யாழ். அக.) . |
துன்னபோத்து | tuṉṉapōttu, n.<>T. dunnapōtu. Plough-buffalo உழவெருமை (W.) |
துன்னம் | tuṉṉam. n. perh. tunna. Seam, sewing, needlework ; தையல். இழைவலந்த பஃறுன்னத்து (புறநா. 136). Eye of a needle ; |
துன்னம்பெய் - தல் | tuṉṉam-pey-, v. intr.<>துன்னம் +. To be stitched, sewed ; தைத்தலைக்கொள்ளுதல். துன்னம் பெய் கோவணமாக் கொள்ளுமது வென்னேடி (திருவாச.12, 2) |
துன்னர் | tuṉṉar n.<>id. Tailors ; தையற்காரர். (பிங்.) Cobblers ; |
துன்னல் 1 | tuṉṉal n.<>id. [M. tunnal.]. Sewing ; தையல். துன்னற் சிதாஅர் துவர நீக்கி (பொருந.81) |
துன்னல் 2 | tuṉṉal n. <>துன்னு1-. Being near or close together ; நெருங்குகை. யாவருந் துன்னல்போகிய துணிவினோனென (புறநா. 23, 14).. (சூடா.) Small drops of water ; |
துன்னலர் | tuṉṉalar n.<>id.+ அல் neg+. Foes, enemies ; பகைவர். துன்னினர் துன்னல ரென்பது சொல்லார் (கம்பரா வேள்வி.28) |
துன்னவினைஞர் | tuṉṉa-viṉaiar, n. <>துன்னம்+. Tailors ; தையற்காரர். தோலின் றுன்னருந் துன்னவினைஞரும் (மணி.28, 39) |
துன்னாதார் | tuṉṉātār, n.<>துன்னு1-+ ஆ neg.+. See துன்னார் . |
துன்னார் | tuṉṉār n.<>id+id+. Foes, enemies ; பகைவர். தொல்லமருட் டுன்னார்ரைச் செற்றும் (கம்பரா சரபங்க. 26). |
துன்னிமித்தம் | tuṉṉimittam, n.<>dur +. Ill omen; அபசகுணம். துன்னிமித்தங்க ளெங்கணும் வரத் தொடர்வ (கம்பரா. யுத்த. மந்திரப். 95). |
துன்னியார் | tuṉṉiyār n. <>துன்னு1-. Friends, relations, adherents; நண்பர். மன்னர் திருவு மகளி ரெழினலமுந் துன்னியார் துய்ப்பா (நாலடி, 167). |
துன்னினர் | tuṉṉiṉar n. <>id. See துன்னியார். துன்னினர் துன்னல ரென்பது சொல்லார் (கம்பரா . வேள்வி. 28). |
துன்னீதி | tuṉṉīti, n.<>dur+nīti See துன்னெறி (யாழ். அக.) . |
துன்னு 1 - தல் | tuṉṉu- 5 v. intr 1. To be filted, joined, attached; பொருந்துதல். 2. To be thick, crowded; to press close; 3. To approach, approximate, adhere to; 4. To join; to undertake; 5. cf. உன்னு-. To gain, reach, attain; To consider, take counsel; |
துன்னு 2 - தல் | tuṉṉu- 5 v. tr. perh, tunna. To sew stitch; தைத்தல். நீயிங் குடுத்திய கந்தையைத் துன்னுவாரிலையோ பரஞ்சோதியே (அருட்பா i, காட்சிப் பெரு. 4.) |
துன்னு 3 - தல் | tuṉṉu 5. v.tr<> T.dunnu To plough; உழுதல். (செந் .iv,213) |
துன்னு | tuṉṉu n. 1. Back; முதுகு (அக.நி.) 2. Flesh 3. Meat |
துன்னுநர் | tuṉṉunar n. <>துன்னு1-. See துன்னியார். (திவா) . |
துன் னூசி | tuṉ-ṉ-ūci n. <>துன்னு2-+.. Needle, shoemaker's awl ; தையலு£சி. கொற்சேறி நுண்டுளைத் துன்னுசி விற்பாரின் (ஐந். ஐம்.21) |
துன் னெலி | tuṉ-ṉ-eli, n.<>துன்+. Mole வளைதோண்டும் எலிவகை. (செந்.iv, 213) |
துன்னெறி | tuṉṉeṟi n.<>dur+நெறி. Evil ways ; தீய வழி, துன்னெறி யவுணர் (கந்தபு விந்தம்பிலம் .1) |
துனாவி | tuṉāvi,. n. Long pepper திப்பலி. (மலை) |