Word |
English & Tamil Meaning |
---|---|
தூங்கல்வண்ணம் | tūṅkal-vaṇṇam n. <>தூங்கல்+. (Pros.) A rhythm effected by introducing vaci verse; வஞ்சியோசைபயின்று வருசந்தம் தூங்கல்வண்ணம் வஞ்சிஞ் பயிலும் (தொல். பொ.524) |
தூங்கலன் | tūṅkalaṉ n. <>id. Lazy man; idler சோம்பன் (யாழ்.அக) |
தூங்கலாளி | tūṅkal-āḷi n. <>id.+. . See தூங்குமூஞ்சி. (யாழ்.அக) |
தூங்கலோசை | tūṅkal-ōcai n. <>id.+. (Pros.) Rhythm peculiar to vaci verse; வஞ்சிப்பாவிற்குரிய ஓசை தூங்கலோசை வஞ்சியாகும் (தொல் பொ. 396) |
தூங்காமை | tūṅkāmai n. <>தூங்கு-+ஆ neg. Vigilance, watchfulness காரியத்திற் சோர்வில்லாமை தூங்காமை கல்வி துணிவுடைமை யிம் முன்றும் (குறள். 383) |
தூங்காவிளக்கு | tūṅkā-viḷakku n. <>id.+id.+. Perpetual lamp that is burning near an idol திருநந்தாவிளக்கு. (w.) |
தூங்கானைமாடம் | tūṅkāṉai-māṭam n. A šiva shrine at Peṇṇākaṭam in South Arcot District; தென்னார்க்காடு ஜில்லாவில் பெண்ணாகடத்துள்ள சிவபிரான் கோயில். (தேவ.937) |
தூங்கிசம் | tūṅkicam n. <>dhvamsa. Ruin; நாசம். அடைத்த கல்லைத் தூங்கிசமாக (இராமநா. கிஷ்.17) |
தூங்கிசை | tūṅkicai n. <>தூங்கு-+ (Pros.) A kind of poetic rhythm, one of four icai q.v.; செய்யுட்குரிய நால்வகையோசையுள் ஒன்று |
தூங்கிசைச்செப்பல் | tūṅkicai-c-ceppal n. <>தூங்கிசை+. (Pros.) A rhythm of veṇpā metre effected when nirai follows mā and nēr follows viḷam இயற்சீர்வெண்டளையான் மாமுன் நிரையும் விளமுன் நேருமாக வரும் வெண்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய், 1, உரை) |
தூங்கிசைத்துள்ளல் | tūṅkicai-t-tuḷḷal n. <>id.+. (Pros.) A rhythm of kali-p-pā metre கலிப்பாவுக்குரிய ஓசைவகை. (யாழ்.அக) |
தூங்கிசையகவல் | tūṅkicai-y-akaval n. <>id.+. (Pros.) A rhythm of akaval metre நிரையொன்றுசிரியத்தளையான் வரும் அகவற்பாவுக்குரிய ஓசை (காரிகை. செய்.1, உரை) |
தூங்கிவழி - தல் | tūṅki-vaḷi v. intr. <>தூங்கு-+ . See தூங்கிவிழு-. Loc. |
தூங்கிவிழு - தல் | tūṅki-viḷu- v. intr. <>id. +. 1. To be unsteady through drowsiness; தூக்கமயக்கத்தாற் சாய்ந்துவிழுதல் 2. To be lazy; |
தூங்கு - தல் | tūṅku- 5 v. intr. 1. [K. tūgu, M. tūṅṅuka] To hang to be suspended; தொங்குதல். காமமு நாணு முயிர்காவாத் தூங்கும் (குறள்.1163) 2. [T. K. tūgu.] To swing; 3. To sway from side to side, as an elephant; 4. To dance; 5. To pour, rain, fall uncreasingly; 6. To sound; 7. [T. tūgu, M. tūṅṅuka.] To sleep, slumber; 8. To spin, as a top; 9. To die; 10. To droop, as a plant; to be withered; 11. To be sluggish, idle, dull, slow; 12. To delay, procrastinate; 13. To tarry, remain, abide; 14. To walk or trudge slowly; 15. To rest profoundly; 16. To be crowded, dense; 17. To abound; |
தூங்குகட்டில் | tūṅku-kaṭṭil n. <>தூங்கு-+. . See தூங்குமஞ்சம். (கலித்.13, உரை) |
தூங்குதோல் | tūṅku-tōl n. <>id. +. Slough of a serpent; பாம்பின் சட்டை பாம்பின் றூங்குதோல் கடுக்குந் தூவெள்ளருவி (குறுந்.235). |