Word |
English & Tamil Meaning |
---|---|
தூங்குபாலம் | tūṅku-pālam, n. See தூக்குபாலம். (W.) . |
தூங்குபுள்தோஷம் | tūṅku-puḷ-tōṣam, n. <>தூங்கு-+. Sleeping-sickness in children, believed to be caused by birds; ஐவகைப் பட்சி தோஷங்களில் உறக்கம்முதலியவைகளை உண்டாக்குவதாய்க் குழந்தைகட்குவரும் தோஷவகை (சீவரட்.229.) |
தூங்குமஞ்சம் | tūṅku-macam, n. <>id.+.[ K. tūgumaca, M. tūkkumacam.] Swinging cot; தொங்கியாடுங் கட்டில். |
தூங்குமுஷ்டு | tūṅku-muṣṭu, n. <>tuṅga+muṣṭā. See தூங்கமுட்டு. (W.) . |
தூங்குமூஞ்சி | tūṅku-mūci, n. <>தூங்கு-+. 1. Dull, sleepy fellow; மந்தன். 2. Rain tree, 1. tr., Enterolobium saman, as closing its leaves at night; 3. A plant found in moist places. |
தூங்குமூஞ்சிகாட்வா | tūṅku-mūci-kāṭvā, n. <>தூங்குமூஞ்சி+. See தூங்குமூஞ்சி, 2. . |
தூங்கெயில் | tūṅkeyil, n. <>தூங்கு-+. An air-castle believed to have been destroyed by a Chola king; சோழனொருவனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆகாயக்கோட்டை தூங்கெயிலெறிந்த நின் னூங்கணோர் நினைப்பின் (புறநா. 39). |
தூங்கெலி | tūṅkeli, n. <>id.+. A rat; எலிவகை. (W.) |
தூசக்குடிஞை | tūca-k-kuṭiai, n. <>dūṣya+. Tent; கூடாரம். தூசக்குடிஞையுந் துலாமண்டபமும் (பெருருங். இலாவாண.12, 43). |
தூசகத்தறி | tūcaka-t-taṟi, n. An ancient tax; முற்காலத்து வழங்கிய வரிவகை. (S. I. I. i, 91.) |
தூசங்கொளல் | tūcaṅ-koḷal, n. perh. dhvaja+. Composing a veṅpā with the same initial and final letters as those of a stanza composed by another; ஒருவன் பாடிய வெண்பாவின் ஈறு முதல் எழுத்துக்களே ஈறும் முதலுமாக மற்றொரு வெண்பாப் பாடுவது. (யாப். வி. 96, பக். 502.) |
தூசம் | tūcam, n. <>dūṣyā. Elephant's neck-band; யானைக்கழுத்திடுங் கயிறு. வேய்முதற் றூசங்கொண் டேறினான் (சீவக.1602). |
தூசர் 1 | tūcar, n. <>தூசு. Troops; படைஞர். இந்திரன் முதலோர் தூசர் (குற்றா. தல. தக்கன் வேள்விச்.125). |
தூசர் 2 | tūcar, n. <>தூசு. Washermen; வண்ணார். (திவா.) |
தூசரம் | tūcaram, n. <>dhūsara. Grey colour; சாம்பல் நிறம். (யாழ். அக.) |
தூசரன் | tūcaraṉ, n. <>id. Oilmonger; எண்ணெய் வாணிகன். (யாழ். அக.) |
தூசறு - த்தல் | tūcaṟu-, v. tr. prob. தூசு+. cf dhvasra. To exterminate, root out; அடியோடு அழித்தல். (சங். அக.) |
தூசனம் | tūcaṉam, n. <>dūṣaṇa. Abusive language. See தூஷணம். தூசனஞ் சொல்லுந் தொழுத்தைமாரும் (திவ். பெரியாழ். 2, 9, 8). |
தூசி 1 | tūci, n. perh. தூசு. cf. dhvajin. 1. Van of an army; கொடிப்படை. (திவா.) தூசியு மிரண்டுகையும் (கம்பரா. அதிகாயன். 211). 2. Horse; 3. Battle; 4. (Nāṭya.) A kind of gesture in dancing; 5. That which is topmost; |
தூசி 2 | tūci, n.<>dhūli. Colloq. 1. Dust; புழுதி. 2. Trifle; |
தூசிகம் | tūcikam, n. cf. cukrikā. Indian sorrel. See புளியாரை. (மலை.) |
தூசிதாங்கி | tūci-tāṅki, n. <>தூசி+. 1. A kind of cover or canopy over an eating or sleeping place to keep off dust; புழுதிபடியாதபடி தடுக்கும் மேல்மறைப்பு. (W.) 2. Apron; |
தூசிப்படை | tūci-p-paṭai, n. <>தூசி+. See தூசி, 1. (சிலப். 26, 80, அரும்.) . |
தூசியம் | tūciyam, n. <>dūṣya. Tent; கூடாரம். (யாழ். அக.) |
தூசு 1 | tūcu, n. <>தூய்-மை. Cleanness; சுத்தம். தூசுதூ சாக்குவார் பாவை (தமிழ்நா. 69). |
தூசு 2 | tūcu, n. cf. dūṣya. 1. (K. dūsu.) Cloth, garment; ஆடை. தூசினா லங்கை நீவி (சீவக. 1302). 2. Cotton; 3. The 14th nakṣatra, part of virgo; |
தூசு 3 | tūcu, n. cf. dhvaja. Van of an army; முன்னணிப்படை. (பிங்.) வாலிசேய் தூசு செல்ல (கம்பரா. திருமுடி. 4). |
தூசு 4 | tūcu, n. <>dūṣyā. Elephant's neck-band; யானைக்கழுத்திடு கயிறு. (பிங்.) |
தூசு 5 | tūcu, n. <>dhūli. See தூசி. அவன் ஒரு தூசுகூட விடவில்லை. . |
தூசுப்பு | tūcuppu, n. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (மூ. அ.) |